Aug 11, 2010
நோட்பேட் ஆங்கிலம் படிக்கும்
வணக்கம் நண்பர்களே கடந்த சில நாட்களாகவே ஒன்றும் எழுதவில்லை அதற்காக பணிச்சுமை என்பதல்ல காரணம், ஏதோ ஒன்று தடுத்தது சரி நாமா எழுதாம இருந்த என்ன ஆகபோகுதுனு நினைச்சா அறுபது மின்னஞ்சல்களுக்கு மேல் ஏன் எழுதவில்லை என்பதாக விசாரிப்புகள் (ச்சும்மா தான் யாரும் மின்னஞ்சல் அனுப்பவும் இல்லை ஏன் நீங்க எழுதவில்லையென கேட்கவும் இல்லை) சரி இன்று ஏதாவது எழுதனும்னு நினைச்சு உட்கார்ந்த ஒன்னுமே எழுத தோனமாட்டுது சரி இங்கதான் ஏகப்பட்ட பயலுக சும்மா என்னத்தையாவது போட்டு பதிவுங்கிற பெயரில் வெளியிடுறாங்கே அதுவும் பிரபல பகுதிக்கு வந்திருக்கே சரி நாமளும் ஒரு படத்தை போட்டு வைப்போனு இரண்டு படத்தை மட்டும் இனைத்து அதற்கு தலைப்பு வயது வந்தவர்கள் மட்டும் (Adult Only) என்கிற பெயரோடு வெளியிட்டேன் சும்மா சொல்லக்கூடாது நல்லாவே ஹிட்ஸ் வந்துச்சுங்க சரி நம்ம தளத்துக்கு இதெல்லாம் சரி வராதுனு அந்த பதிவை அழித்து விட்டேன.
நான் மட்டும் தான் இப்படியா
நான் பதிவு எழுத வந்த நாட்கள் முதல் பெரிய பரபரப்போ அல்லது எனக்கென நண்பர்கள் கூட்டோ இல்லாமல் இருந்தாலும் (இபோழுதும் அப்படித்தான்) என் பதிவுகள் வாசகர்களின் ஆதரவு கொண்டு பெரும்பாலனவை பிரபல பதிவாகியிருக்கின்றன அதே நேரத்தில் நல்ல பதிவுகள் கூட புறக்கனிக்கப்பட்டிருக்கின்றன அந்த நேரத்தில் கொஞ்சம் வெறுப்பாக இருக்கும் ஆனால் எழுத்து சிரங்கு பிடித்தவன் போல மீண்டும் நானகவே எழுதியிருக்கிறேன் ஒரு சில வலைப்பதிவுகளில் என் தளத்தையும் இனைத்திருந்தார்கள் அவர்களுக்கு என் நன்றியை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
காப்பி எடுத்தா தப்பா
நான் வலைப்பூவில் எழுத வந்த நாள் முதலாகவே என் பதிவுகள் பல தளங்களிலும் அச்சு பிசகாமல் காப்பி பேஸ்ட் செய்திருப்பார்கள் ஆனால் என் பதிவு பல தளங்களில் காணப்படுவது சந்தோஷம் தான் ஆனால் என் பதிவுகளை காப்பி எடுப்பவர்கள் குறைந்தபட்ச நாகரீகமாக நன்றி என்பதை கூட உபயோகபடுத்துவதில்லை இது பற்றி காப்பி எடுக்கப்பட்ட என் பதிவுகள் என எழுதியிருந்தேன், சாதரணமாக ஒரு பதிவை காப்பி எடுக்கப்பட்டுவிட்டது என்றாலே உடனே ஆவேசத்தில் பதிவை எழுதுவார்கள் உடனே அவர்களுக்கு வேண்டியவர்கள் பெரிய வீர வசணங்களை எல்லாம் எழுதுவார்கள் ஆனால் நமக்கெல்லாம் வீரவசனம் பேசுவதற்கெல்லாம் யாருமில்லை,சரி இப்பதான் நாம இத்தனை பதிவு எழுதியிருக்கிறோமே யாராவது காப்பி எடுத்திருக்கிறார்களா என கடந்த ஒரு மாத பதிவுகளை மட்டும் மேலோட்டமாக ச்சும்மா தேடிபார்த்தேன் அதிலும் இத்தனை பதிவுகள் பிற தளங்களில் காணப்படுகிறது சில தளங்களில் நன்றி: http://gsr-gentle.blogspot.com என குறிப்பிட்டுள்ளார்கள் அதேபோல் என் பதிவின் சாயல் உள்ளவற்றை நான் இங்கு எழுதவில்லை(அதுவும் நிறைய இருக்கிறது)
எந்த தள பதிவுத் தகவலையும் காப்பி எடுக்கலாம்
http://gsr-gentle.blogspot.com/2010/08/blog-post_05.html
http://usetamil.forumotion.com/-f4/---t6985.htm
வின்ராரில் கோப்பை வெட்டி பூட்டு போடலாம்
http://gsr-gentle.blogspot.com/2010/07/blog-post_29.html
http://usetamil.forumotion.com/-f4/--t6875.htm
புரொபசனல் கன்வெர்ட்டர் இலவசம்
http://gsr-gentle.blogspot.com/2010/07/blog-post_26.html
http://kksamy-kksamy.blogspot.com/2010/07/blog-post_7448.html
நோட்பேடில் வைரஸ் புரோகிராம் எழுதலாம்
http://gsr-gentle.blogspot.com/2010/07/blog-post_25.html
http://usetamil.forumotion.com/-f4/--t6783.htm
டாஸ்க் பார், நோட்டிபிகேசன் ஏரியா, குயிக் லாஞ்ச் பிரச்சினைக்கு தீர்வு
http://gsr-gentle.blogspot.com/2010/07/blog-post_18.html
http://sayanthan1988.blogspot.com/2010/07/blog-post_18.html
பார்மட் செய்யமுடியாத பென் டிரைவ் பிரச்சினை
http://gsr-gentle.blogspot.com/2010/07/blog-post_13.html
http://sayanthan1988.blogspot.com/2010/07/format.html
5.1 பிளேயரும் ஆடியோ சிடி காப்பியும்
http://gsr-gentle.blogspot.com/2010/07/51.html
http://usetamil.forumotion.com/-f4/51---t6431.htm
http://www.eegarai.net/-f18/51---t33559.htm
சந்தோஷம் தான்
நான் எழுதிய பதிவுகளில் முக்கால்வாசிக்கும் மேலாக பல தளங்களில் காணப்படுகிறது அதில் சில நேரடியான காப்பி சிலவை சில வார்த்தை மாற்றங்கள் இவையெல்லாம் நிச்சியம் சந்தோஷமே,நான் இதுவரை உபயோகமுள்ள பதிவுகளை தான் எழுதியிருக்கிறேன் என்பதற்கு ஆதாரம் உபயோகமில்லாத பதிவு என்றால் யாராவது காப்பி எடுப்பார்களா?
எனக்கு மட்டும் ஏன் இப்படி
நான் எழுத ஆரம்பித்த நாட்கள் முதலாகவே மின்னஞ்சல் சந்தாதாரர்கள் மெல்ல மெல்ல அதிகரித்தே வந்திருக்கிறார்கள் ஆனால் பாலோவர்களாக இருந்தவர்கள் கூட சிலர் நம் தளத்தை விட்டு வெளியேறுகிறார்கள் இது எதனால் என்பது சத்தியமாக எனக்கு புரியவில்லை ஒரு வேளை இதை பற்றி தெரியாமல் இருக்குமோ அல்லது வேறேதும் பயம் (மின்னஞ்சலை களவாடி விடுவோமோ என்கிற அச்சம்) இருக்குமோ(அதெலாம் ஒன்றும் செய்யமுடியாது நண்பர்களே), உங்களுக்கு ஒரு வேளை சந்தேகம் இருந்தால் இது பற்றி முன்னர் நீங்கள் பதிவுலக வாசகரா என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் பாருங்கள்.
வாக்கும் கருத்துரையும்
கடைசியில் இந்த பதிவுலக பித்து என்னையும் பிடித்துவிட்டதென்றே நினைக்க தோன்றுகிறது சில பதிவுகளை நாம் எழுதினால் அது புரிந்து கொள்ளாலாமலே முடங்கி போய்விடுகிறது ஆனால் உபயோகமில்லாத பதிவை எழுதுறாங்கே ஆனால் அவைங்களுக்கு உடனே பார்த்த பதிவு அருமை, சூப்பர்,ஒரு நல்ல விஷயம் வெளிவரனும்னா உங்களோட சப்போர்ட் அவசியம் நான் நிரந்த வாசகன் எல்லா பதிவுகளும் பிரமாதம் மண்ணாங்கட்டி என்றால் மட்டும் போதாது ஒரு நிமிடம் செலவழித்து அந்த பதிவு மேலும் பலரை சென்றடைய அவசியம் உங்கள் வாக்கும் கருத்துரையும் தேவை. உங்களை சொல்லி குற்றமில்லை நாம் தான் எப்போதும் நல்ல விஷங்களை அங்கீகரிப்பதில்லையே!
சரி நண்பர்களே இனி பதிவை பற்றியான விஷயத்துக்குள் வந்து விடுகிறேன் Start->Run-> டைப் notepad திறந்துகொள்ளுங்கள் இனி கீழிருக்கும் நிரலை காப்பி எடுத்து உங்கள் நோட்பேடில் ஒட்டி சேமிக்கும் போது .VBS என்கிற எக்ஸ்டென்ஷனில் சேமியுங்கள் அதாவது ஏதாவது ஒரு பெயர் கொடுத்து உதாரணத்துக்கு gsr.vbs என சேமித்தால் போதும்
Dim message, sapi
message=InputBox("Enter the text you want spoken","Speak This")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak message
இனி மேலிருக்கும் படத்தில் உள்ளது போல நோட்பேட் மாறியிருக்கும் அடுத்தாக உங்கள் சுண்டெலியால் இருமுறை கிளிக்கி திறக்கும் பாப் அப் விண்டோவில் நீங்கள் படிக்க வேண்டிய டெக்ஸ்ட்டை பேஸ்ட் செய்து ஓக்கே கொடுத்தால் போதும் நோட்பேட் படிக்க ஆரம்பித்துவிடும்.
என்ன நண்பர்களே உங்கள் வாக்குகளும் கருத்துரையும் தான் ஒரு தளத்தின் மிகச்சிறந்த மதிப்பீடாக இருக்கமுடியும் நீங்கள் அளிக்கும் ஒரு வாக்கின் மூலம் அந்த பதிவு மேலும் பலரை சென்றடைய வாய்ப்பிருக்கிறது நீங்கள் எழுதும் பதிவை பற்றிய கருத்துரைகள் மேலும் அதன் நம்பகத்தன்மையை உறுதிபடுத்துவதாக இருக்கும் முடிந்தவரை நல்ல பதிவுகளை ஆதரியுங்கள்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
14 Responses to “நோட்பேட் ஆங்கிலம் படிக்கும்”
-
Mohamed Faaique
said...
August 11, 2010 at 10:26 AMசூப்பர் பாஸ்....
சில இடங்க்ழலில் இங்கே கிளிக்கவும் என்று சொல்லி "இங்கே" என்ற வார்த்தைக்குள் லிங்க் வைத்திருப்பார்கள். அது எப்படி போஸ்... -
ஜிஎஸ்ஆர்
said...
August 11, 2010 at 10:44 AMஇந்தாங்க நண்பா நீங்கள் கேட்டது
http://www.4shared.com/document/5HUXaZ2Q/HMIL_Link.html -
Aslam Online
said...
August 11, 2010 at 1:38 PMஉங்கள் பதிவுகளை மின் அஞ்சல் வழி பெற்று வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன் வித்தியாசமானதும் தேவையானதுமான கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறீர்கள் மனம் திறந்த பாராட்டுக்களும் பிரார்த்தனைகளும் தொடர்ந்தும் எழுதுங்கள் இப்பொழுது பலருக்கும் வாசிக்க நேரம் இருந்தாலும் கமெண்ட்ஸ் போட நேரம் இல்லாமல் இருக்கலாம் அவர்கள் எல்லோரும் உங்களின் பதிவுகளை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களே முடிந்தால் உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள் நீங்கள் பயன் படுத்துகின்ற அல்லது ஒரு நல்ல வலைப்பூவை வடிவமைப்பதட்கான widjet களை இணைப்பது பற்றி ஒரு பதிவை தந்தால் என்ன உங்கள் பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் இன்னும் பலரும் இதன் மூலம் பயன் பெறகூடும்
வாழ்த்துக்கள் சகா உங்கள் பனி தொடரட்டும் -
August 11, 2010 at 9:48 PMதொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.mail open செய்தால் தங்கள் பதிவை படித்த பிறகுதான் என்னுடைய personal mail படிக்கிறேன். இதுபோல் நிறைய பேர் என்று நினைக்கிறேன். ..மொக்கையில்லாத பதிவு எழுதுவது தங்களை போன்ற ஒரு சிலரே.நல்லதை ஆதரிக்க என்றும் நாங்கள் உண்டு. வாழ்க வளமுடன் நண்பா!
-
எஸ்.கே
said...
August 14, 2010 at 3:27 PMநல்ல தகவல்களை தருகிறீர்கள் மிக்க நன்றி!
-
Vengatesh TR
said...
November 26, 2010 at 4:58 PM.உண்மையாக பதிவு எழுதும், பதிவர்கள் மட்டும் தான், இப்படி தோன்றும் !!
.copy-paste செய்யும் வலைத்தளத்தில், இது போன்று என் வலைபூ தகவல்களை திருடி விட்டார்கள் என பதிவு போடா மாட்டார்கள், ஏன் என்று உங்களுக்கே தெரியும் ..
.நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்றால், நான் ஒன்று கூறுகிறேன் ..
.உங்களுக்கே இப்படி என்றால், billgates ku, எப்படி இருக்கும், அவர்கள் உழைப்பில் உருவான operating system ஐ, மற்றவர்கள் எப்படி எல்லாம், .....
.தங்கள் எழுதானிக்கு, அடிமை !! -
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 7:23 PM@Aslam Onlineஅவசியம் எழுதுகிறேன் தற்போதும் எழுதிக்கொண்டே இருக்கிறேன்
-
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 7:23 PM@lakshuமனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது
-
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 7:24 PM@எஸ்.கேதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே
-
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 7:26 PM@சிகப்பு மனிதன்பதிவு எழுதுபவர்கள் என்றால் என்ன கடவுளா? உங்களாலும் முடியும் என்ன கொஞ்சம் நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
உண்மைதான் பில்கேட்ஸ் அவர்களை பொறுத்தவரை அதை அவர்கள் மறைமுகமாக அனுமதிக்கவே செய்கிறார்கள் காரணம் அவர்கள் கிராக் செய்வதை அனுமதிக்கும் வரை வேறு எந்த இயங்குதளத்திற்கும் மாறப்போவதில்லை அதனால் அவர்கள் நோக்கம் வெறும் பணம் மட்டுமல்ல பயணாளர்களை அவர்கள் கட்டுக்குள் இருப்பதை தான் விரும்புகிறார்கள் -
Vengatesh TR
said...
November 26, 2010 at 9:36 PM.எனக்கு புரியும் படி கூறியமைக்கு நன்றி,
-
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 9:39 PM@சிகப்பு மனிதன்சரியான புரிதலுக்கு நன்றி
-
avvavm
said...
December 14, 2010 at 6:14 PMநண்பர் GSR அவர்களுக்கு,
நண்பரே நீங்கள் நேரில் இருந்தால் கட்டிபிடித்து முத்தம் கொடுத்து இருப்பேன். (அன்பின் மிக பெரிய வெளிப்பாடு முத்தம் என்பது என் கருத்து )நல்ல படைப்பு !! -
ஜிஎஸ்ஆர்
said...
December 16, 2010 at 9:35 AM@avvavmஅத்தனை அன்பிற்கு தகுதியானவானக நான் இருக்கிறேனா?!
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>