Aug 5, 2010

13

எந்த தள பதிவுத் தகவலையும் காப்பி எடுக்கலாம்

  • Aug 5, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: திறமைகளை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்தினால் அதை விட சிறப்பு ஏதுமில்லை.

    இந்த பதிவு நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படவேண்டும் என்கிற ஆவலுடன் எழுதுகிறேன் தவறான, வியாபார நோக்கத்தோடு செயல்படும் நபர்கள் இதை தயவு செய்து பயன்படுத்தாதீர்கள் எந்த விஷயத்திற்கும் மாற்று வழி உண்டு என்பதற்க்கு இதுவும் உதாரணமே, சரி நண்பர்களே பதிவுக்கு செல்லலாம்.

    நீங்கள் சில நேரங்களில் ஏதாவது தகவலை இனையத்தில் தேடுவீர்கள் , ஒரு வழியாய் தேடி கண்டுபிடித்து சென்றால் அவர்கள் படிக்க மட்டுமே அனுமதித்திருப்பார்கள் அந்த மாதிரியான தளத்தில் உங்கள் சுண்டெலியின் வலது கிளிக்கில் டெக்ஸ்ட்டை காப்பி எடுப்பதோ அல்லது செலக்ட் செய்வதை கூட அவர்கள் தடை செய்திருப்பார்கள் உங்களுக்கு குறைந்தபட்சம் பின்னாளில் உதவுவதற்காக ஒரு காப்பி எடுத்து பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம் என நினைத்தால் அதுவும் உங்களால் முடியாது, அப்படிப்பட்ட நேரத்தில் உங்களுக்கு உதவத்தான் நான் சில வழிமுறைகளை பரிந்துரைக்க போகிறேன் ஆனால் தயவுசெய்து தகவல் திருட்டுக்கு உபயோகபடுத்தாதீர்கள்.

    என் தள பதிவுகள் பகுதிக்கு மேலாக பல இடங்களில் காப்பி எடுத்து பிரசுரிக்க பட்டிருக்கிறது ஓரிரு இடங்களை தவிர மற்ற இடங்களில் நம் தளத்தின் பெயரை கூட வெளியிடவில்லை பரவாயில்லை நாம் எழுதுவது நாலு பேருக்கு உதவத்தானே என மனதை தேற்றிக்கொண்டு விடுவேன் அதனால் தான் யாரையும் பெரிதாக கவணத்தில் எடுத்துக்கொள்வதில்லை ஆனால் வியாபார நோக்கத்தோடு செயல்படும் போது கொஞ்சம் எரிச்சல் வரத்தான் செய்கிறது அந்த கோபத்தில் முன்னர் ஒருமுறை காப்பி எடுக்கப்ப்ட்ட என பதிவுகள் என ஒரு பதிவை எழுதியிருந்தேன் பின்னாளில் நான் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.

    சரி இனி அதுபோல் உள்ள தளங்களில் உங்களுக்கு தேவையான தகவலை காப்பி எடுக்க ஐந்து வழிமுறைகள் இருக்கிறது

    1)அந்த தளத்தின் தேவையான பக்கத்தை இமேஜ் ஆக மாற்றி தமிழ் OCR மென்பொருள் வழியாக எளிதாக பிரித்தெடுக்கலாம் ஆனால் இது உங்களுக்கு கால விரயம் அதிகமாகும்.

    2)அந்த தளத்தில் Ctrl+A அழுத்தி Ctrl+C அழுத்துவதன் மூலம் தகவலை காப்பி எடுத்து ஒரு நோட்பேடில் அல்லது வேறு ஏதாவது வேர்டு பைலில் பேஸ்ட் செய்து உங்களுக்கு தேவையான தகவலை காப்பி எடுத்துக்கொள்ளலாம்.

    3)அந்த தளத்தின் Source Code காப்பி எடுத்து அதில் HTML கோடிங்கை நீக்குவதன் மூலம் தகவலை காப்பி எடுக்கலாம் ஆனால் இதுவும் கணினி தொழில்நுட்பம் சார்ந்தவர்களுக்கு எளிதாக இருக்கும்.

    4)உங்கள் பிரவுசரில் ஜாவா எனாபில் செய்திருந்தால் டிசாபிள் செய்து காப்பி எடுக்கலாம்.

    5)இந்த வழிமுறை எவருக்கும் எளிமையாக இருக்கும் நான் கீழே கொடுக்கும் ஜாவா நிரலை காப்பி எடுத்து நீங்கள் காப்பி எடுக்க விரும்பும் தளத்தை திறந்த பின்னர் அதிலிருக்கும் அட்ரஸை அழித்து விட்டு அதற்கு பதிலாக இந்த ஜாவா நிரலை ஒட்டி ஒரு எண்டர் கொடுத்து விடுங்கள் இனி அந்த தளத்தில் வேண்டிய எந்த தகவலையும் நீங்கள் காப்பி எடுக்க முடியும்(மேலும் ஒரு சின்ன ட்டிரிக் அந்த தளத்தில் தகவல்களை அழிக்கவும் முடியும் ஆனால் இது உங்கள் கணினியில் மட்டுமே இந்த மாற்றம் நிகழும் இதனால் அந்த தளத்தை எந்த வித்த்திலும் பாதிக்காது) ஆனால் ஒன்று நிச்சியம் திருடானாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

    JavaScript:document.body.contentEditable='true'; document.designMode='on'; void 0



    என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தந்திருக்குமென்று நம்புகிறேன் இது உங்களுக்கு பிடித்திருந்தால் பயணுள்ளது என நினைத்தால் நீங்கள் கற்றுக்கொண்டிருந்தால் அவசியம் பதிவிற்கான வாக்கும் கருத்துரையும் அளிக்கவும் அது மேலும் பலரை சென்றடைய உதவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    13 Comments
    Comments

    13 Responses to “எந்த தள பதிவுத் தகவலையும் காப்பி எடுக்கலாம்”

    ஜிஎஸ்ஆர் said...
    August 5, 2010 at 10:42 AM

    உங்கள் பிரவுசரில் File கிளிக்கி Save Page as என்பதை கிளிக்குவதன் மூலம் Save Type as என்பதில் Text Files என்பதாக மாற்றி ஏதாவது ஒரு பெயர் கொடுத்து சேமிபத்தன் மூலமாகவும் காப்பி எடுக்கலாம்


    Mohamed Faaique said...
    August 5, 2010 at 11:21 AM

    enna villangkam ..... thnks bro...


    WebPrabu said...
    August 5, 2010 at 5:02 PM

    உங்களின் நூறாவது பதிவை இவ்வளவு விரைவாக பார்ப்பது மனதிற்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் தொடர்ந்து பல பயனுள்ள பதிவை வழங்கிட வேண்டுகிறேன். எல்லாம் வல்ல இறைவன் என்றும் உங்களுக்கு துணை இருப்பார். இந்த பதிவு சிக்கலான நேரங்களில் பலருக்கும் பயன்படும்.


    மிக்கநன்றி!!!


    ஜிஎஸ்ஆர் said...
    August 5, 2010 at 6:20 PM

    @Mohamed Faaique நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    August 5, 2010 at 6:27 PM

    @WebPrabuஇந்த சந்தோஷம் எல்லாம் உங்களை போல நண்பர்களையே சேரவேண்டும் நான் தளர்ந்து போகும் தருணங்களில் சில நண்பர்களின் கருத்துரை தான் மீண்டும் என்னை எழுத வைக்க தூண்டும் இன்னும் சொல்லப்போனால் நான் விரக்தி அடையும் நேரங்களில் உன் கருத்துரை மற்றும் நண்பர் தமிழார்வன் அவர்களின் கருத்துரையே என்னை பலப்படுத்தியிருக்கிறது எனவே இந்த சந்தோஷத்தை உங்களோடும் நம் தளத்திற்கு எப்போதும் வாக்களித்து ஊக்குவிக்கும் முகம் தெரியா நண்பர்களின் ஊக்கம் தான் என்னை எழுத தூண்டியது என்றால் மிகையில்ல இதில் பொது நலத்தோடு என் சுய நலமும் கலந்தே இருக்கிறது என் பதிவுகள் பிரபலம் அடையாமல் முடங்கி போனால் உடனே எழுதுவதை நிறுத்தவே எனக்கு எண்ணம் வருகிறது

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    நீச்சல்காரன் said...
    August 5, 2010 at 9:25 PM

    அற்புதமான தகவல். நூறாவதுப் பதிவுக்கு வாழ்த்துக்கள்.


    ஜிஎஸ்ஆர் said...
    August 7, 2010 at 9:20 AM

    @நீச்சல்காரன்நன்றி நண்பா


    மு.ம.ராஜன் said...
    August 7, 2010 at 10:33 AM

    good and super article GSR

    Thanks for this article

    congratus for 101 article..

    continue your service


    ஜிஎஸ்ஆர் said...
    August 8, 2010 at 9:08 AM

    @கோட்டை மகாநன்றி நண்பரே உங்களை போன்ற நண்பர்களின் ஊக்கமே என்னை தொடர்ந்து செல்ல ஊக்குவிக்கும்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 5:25 PM

    .ஜாவா டிசப்ளே(disable) எப்படி செய்வது ??


    .ஐந்தாவது method, சூப்பர் !! (ஸ்கிரிப்ட் -> அட்ரெஸ்பார்)


    Vengatesh TR said...
    November 26, 2010 at 5:43 PM

    .வாழ்த்துக்கள், நூறாவது பதிவுக்கு !

    .114 நாட்கள் கழித்து பார்கிறேன், வருத்தமாக உள்ளது, எனக்கு !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 7:40 PM

    @சிகப்பு மனிதன் நீங்கள் நெருப்பு நரி (Firefox) உபயோகிப்பவர் என்றால் Tools - Options find Content Tab and Tick remove the Enable JavaScript
    அவ்வளவு தான்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 9:40 PM

    .நீக்கினேன் ஜாவா ஸ்கிரிப்ட்'ஐ !

    .பகிர்ந்தமைக்கு நன்றி !


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர