Aug 4, 2010

12

கணினி சம்பந்த சுருக்கப் பெயர்கள்

  • Aug 4, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:வஞ்சகம் முதலில் ஜாக்கிரதையாக இருந்தாலும் கடைசியில் காட்டி கொடுத்து விடும்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு உபயோகபடுமா என்பது சந்தேகம் தான் இருப்பினும் தெரிந்துகொள்ள விரும்புவர்கள் தொடரலாம் அதற்கு முன் ஒரு சின்ன விஷயத்தை பார்த்துவிடலாம் இந்த வலைப்பதிவு எழுத வந்து ஐந்து மாதம் ஆகிறது என நினைக்கிறேன் இது எனது 99வது பதிவு ஆனால் இந்த ஐந்து மாத காலத்தில் நான் கற்றுக்கொண்டது நாம் என்ன தான் நல்ல பதிவுகள் எழுதினாலும் அதை படிக்கிறார்களோ இல்லையோ அல்லது பயனுள்ளதா என்பதை காட்டிலும் நமக்கான ஒரு நண்பர் கூட்டத்தை உருவாக்க வேண்டும் உங்களுக்கென நண்பர் கூட்டம் இருந்தால் மட்டுமே பிரபல பதிவு, முன்னனி பதிவுகளில் இடம் பிடிக்க முடியும் நீங்கள் எழுத வந்ததும் அல்லது எழுத நினைக்கும் முன்பே தொடர்ச்சியாக உங்களால் முடிந்த அளவிற்கு வாக்களித்து கொண்டே இருங்கள், கருத்துரையும் சேர்த்து தான் அதன் வழியாக உங்களை நிறைய நபர்கள் அடையாளம் காண வழி உண்டு இப்படித்தான் பல பதிவுகள் பிரபல பதிவுகளாகவும் முன்னனி பதிவுகளாகவும் இடம் பிடிக்கிறது, மேலும் சில பல பிரபல விளக்கென்னைகள் என நினைப்பவர்கள் அவர்களுக்கு வேண்டிய சில விளக்கென்னைகளை தவிர மற்றவர்களுக்கு வாக்கோ கருத்தோ அளிக்க மாட்டார்கள் அதனால் முடிந்தவரை பிரபலங்கள் என சொல்லிதிரியும் விளக்கென்னை பதிவர்களின் பதிவிற்கு வாக்களிப்பதை விட நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கு திரும்ப வாக்களிக்கும் நபர்களை அடையாளம் கண்டு வாக்கு அல்லது கருத்துரை அளியுங்கள். அதெல்லாம் முடியாது நான் நல்ல தகவல்கள் தான் எழுதுகிறேன் விரும்புவர்கள் தானாக வந்து படிப்பார்கள், வாக்கு அளிப்பார்கள், கருத்துரை அளிப்பார்கள் என நினைத்தால் என் வலைப்பதிவு போலத்தான் உங்கள் வலைப்பதிவும் இருக்கும்.

    என் பதிவை சராசரியாக ஒவ்வொரு பதிவையும் 400 முதல் சில பதிவுகள் 1400 நபர்கள் வரை படித்திருக்கிறார்கள் இதில் மின்னஞ்சல் வழியாக வருபவர்கள் 200க்கும் குறைவில்லாமல் இருக்கிறார்கள் என் பதிவு உபயோகமானது என்பதற்கு இதுவே சான்றாக இருக்கிறது ஆனால் எனக்கு புரியாத விஷயம் இத்தனை நபர்கள் படிக்கும் போது குறைந்த்பட்சம் ஒரு 20 பேருக்காவது வாக்கும் கருத்துரையும் அளிக்க மனம் வரவில்லையே என்கிற வேதனை இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவரும் தனக்கென ஒரு வாசகர் அல்லது நட்பு வட்டாரத்தை உருவாக்கி வைத்துள்ளனர் அந்த விஷயத்தில் நான் தவறி விட்டேன்.

    சரி நண்பர்களே நான் கீழே கொடுத்திருக்கும் வார்த்தைகள் கணினியில் நாம் சில இடங்களில் உபயோகிக்கும் வார்த்தைகள் அதற்கான முழு விரிவாக்கத்தையும் கொடுத்துள்ளேன் இதை எனக்கு அனுப்பிய நண்பருக்கு நன்றி.

    ADSL - Asymmetric Digital Subscriber Line
    AGP - Accelerated Graphics Port
    ALU - Arithmetic Logic Unit
    AMD - Advanced Micro Devices
    ASCII - American Standard Code for Information Interchange
    ASIC - Application Specific Integrated Circuit
    ASPI - Advanced SCSI Programming Interface
    AT - Advanced Technology
    ATX - Advanced Technology Extended
    BIOS - Basic Input Output System
    BNC - Barrel Nut Connector
    CAS - Column Address Signal
    CD - Compact Disk
    CDR - Compact Disk Recorder
    CDRW - Compact Disk Re-Writer
    CD-ROM - Compact Disk - Read Only Memory
    CFM - Cubic Feet per Minute
    CMOS - Complementary Metal Oxide Semiconductor
    CPU - Central Processing Unit
    DDR - Double Data Rate
    DDR-SDRAM - Double Data Rate - Synchronous Dynamic Random Access Memory
    DIMM - Dual Inline Memory Module
    DRAM - Dynamic Random Access Memory
    DPI - Dots Per Inch
    DVD - Digital Versatile Disc
    DVD-RAM - Digital Versatile Disk - Random Access Memory
    ECC - Error Correction Code
    EDO - Extended Data Out
    EEPROM - Electrically Erasable Programmable Read-Only Memory
    EPROM - Erasable Programmable Read-Only Memory
    FC-PGA - Flip Chip Pin Grid Array
    FDC - Floppy Disk Controller
    FDD - Floppy Disk Drive
    FPS - Frame Per Second
    FPU - Floating Point Unit
    FSAA - Full Screen Anti-Aliasing
    FSB - Front Side Bus
    GB - Gigabytes
    GBps - Gigabytes per second or Gigabits per second
    GDI - Graphical Device Interface
    GHz - GigaHertz
    HDD - Hard Disk Drive
    HSF - Heatsink-Fan
    IC - Integrated Circuit
    IDE - Integrated Drive Electronics
    IRQ - Interrupt Request
    LAN - Local Are Network
    LCD - Liquid Crystal Display
    LDT - Lightning Data Transport
    LED - Light Emitting Diode
    MAC - Media Access Control
    MB - MotherBoard or Megabyte
    MBps - Megabytes Per Second
    Mbps - Megabits Per Second or Megabits Per Second
    MHz - MegaHertz
    MIPS - Million Instructions Per Second
    MMX - Multi-Media Extensions
    NAS - Network Attached Storage
    NAT - Network Address Translation
    NIC - Network Interface Card
    OC - Overclock (Over Clock)
    PC - Personal Computer
    PCB - Printed Circuit Board
    PCI - Peripheral Component Interconnect
    PDA - Personal Digital Assistant
    PCMCIA - Peripheral Component Microchannel Interconnect Architecture
    PGA - Professional Graphics Array
    PLD - Programmable Logic Device
    PM - Private Message / Private Messaging
    PnP - Plug 'n Play
    POST - Power On Self Test
    PPPoA - Point-to-Point Protocol over ATM
    PPPoE - Point-to-Point Protocol over Ethernet
    PQI - PQI Corporation
    PSU - Power Supply Unit
    RAID - Redundant Array of Inexpensive Disks
    RAM - Random Access Memory
    RAMDAC - Random Access Memory Digital Analog Convertor
    RDRAM - Rambus Dynamic Random Access Memory
    ROM - Read Only Memory
    RPM - Revolutions Per Minute
    SASID - Self-scanned Amorphous Silicon Integrated Display
    SCA - SCSI Configured Automatically
    SCSI - Small Computer System Interface
    SDRAM - Synchronous Dynamic Random Access Memory
    SECC - Single Edge Contact Connector
    SODIMM - Small Outline Dual Inline Memory Module
    SPARC - Scalable Processor ArChitecture
    SOHO - Small Office Home Office
    SRAM - Static Random Access Memory
    SSE - Streaming SIMD Extensions
    SVGA - Super Video Graphics Array
    TB - Terabytes
    TBps - Terabytes per second
    TEC - Thermoelectric Cooler
    UART - Universal Asynchronous Receiver/Transmitter
    USB - Universal Serial Bus
    UTP - Unshieled Twisted Pair
    VCD - Video CD
    VPN - Virtual Private Network
    WAN - Wide Area Network
    XGA - Extended Graphics Array
    XMS - Extended Memory Specification


    இதிலிருந்து ஒரு பத்து வார்த்தைகளையாவது தாங்கள் புரிந்து கொண்டிருந்தால் எனக்கு சந்தோஷமே நூறாவது பதிவாக வீடியோவில் சில மாற்றங்கள் எடிட் செய்வது பற்றி பதிவிட இருக்கிறேன் நிச்சியம் அது ஒரு சிறப்பு பதிவாக இருக்கும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    12 Comments
    Comments

    12 Responses to “கணினி சம்பந்த சுருக்கப் பெயர்கள்”

    ஜெயந்த் கிருஷ்ணா said...
    August 4, 2010 at 11:05 AM

    Useful Info.. Thanks for Sharing


    பிரகாசம் said...
    August 4, 2010 at 1:15 PM

    நூறாவது பதிவு வெளியிட இருக்கும் தங்களுக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள். அண்மையில்தான் தங்களின் பதிவுகளை நான் வாசித்து வருகிறேன். இன்னும் தங்களின் அனித்துப் பதிவுகளையும் வாசிக்க முடியாவிட்டாலும் வாசித்தவரை அனைவருக்கும் உபயோகப்படக்கூடிய பதிவுகள் தந்தமைக்கு நன்றிகள்.


    Mohamed Faaique said...
    August 4, 2010 at 2:05 PM

    BEST WISHES


    தமிழ் நாடன் said...
    August 4, 2010 at 2:09 PM

    அன்பின் ஜிஎஸ்ஆர்,

    இதற்கெல்லாம் ஏன் மனஉளைச்சல் கொள்கிறீர்கள்?

    உங்களை எப்போது ”பிரபல” காய்ச்சல் பிடித்தது? பிரபலமானது எல்லாமும் தரமானதாக இருப்பது இல்லை. பல தரமான பதிவுகள் படிப்பார் இன்றி வீணாகப்போகின்றன. இதனால் இழப்பு படிக்காமல் விட்டவர்களுக்குத்தான். எழுதுபவர்களுக்கு இல்லை.

    சும்மா கவலைப்படாம எழுதுங்க.அங்கீகாரம் தானக வரும். தாமாக தேடிக்கொள்வது அங்கீகாரம் இல்லை அது விளம்பரம். நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    அதே சமயம் எண்ணிக்கை முக்கியமில்லை. தரம்தான் முக்கியம். அதையும் கருத்தில் கொள்ளுங்கள்.


    நீச்சல்காரன் said...
    August 5, 2010 at 1:42 AM

    //நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கு திரும்ப வாக்களிக்கும் நபர்களை அடையாளம் கண்டு வாக்கு அல்லது கருத்துரை அளியுங்கள்///
    மன்னிக்கவும். இதில் எனக்கு உடன் பாடுயில்லை


    ஜிஎஸ்ஆர் said...
    August 5, 2010 at 8:57 AM

    @வெறும்பய தொடர்ச்சியான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    August 5, 2010 at 8:58 AM

    @பிரகாசம்தங்களின் சரியான புரிதலுக்கு, தொடர்ச்சியான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    August 5, 2010 at 8:59 AM

    @Mohamed Faaique நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    August 5, 2010 at 9:00 AM

    @தமிழ் நாடன்அன்பின் ஜிஎஸ்ஆர்,

    \\இதற்கெல்லாம் ஏன் மனஉளைச்சல் கொள்கிறீர்கள்?\\
    நானும் ஒரு சராசரி மனிதன் தானே நண்பரே அதனால் தான் சில நேரம் என்னை இப்படி எழுத வைத்து விடுகிறது.


    \\உங்களை எப்போது ”பிரபல” காய்ச்சல் பிடித்தது? பிரபலமானது எல்லாமும் தரமானதாக இருப்பது இல்லை. பல தரமான பதிவுகள் படிப்பார் இன்றி வீணாகப்போகின்றன. இதனால் இழப்பு படிக்காமல் விட்டவர்களுக்குத்தான். எழுதுபவர்களுக்கு இல்லை.\\
    சில நேரங்களில் புத்திக்கு தெரியும் ஆனால் மனதிற்கு தெரிவதில்லை இறுதியில் மனமே வெற்றி பெற்று விடுகிறது சமீபத்தில் ஒருவரின் பதிவு படிக்க நேர்ந்தது உபயோகமில்லாத பதிவுகளை எழுதிக்கொண்டு பிரபலம் ஆகிவிட்டாராம் அவருக்கு சப்போர்ட்டாக சில,பல நபர்கள், அதை படித்த பின் தான் இந்த வார்த்தையை எழுத தோன்றியது. (சில நேரம் மனதில் வைத்து இருப்பதால் நமக்கு தான் பிரச்சினை அதனால் தான் சில நேரங்களில் ஒரு வடிகாலாக எழுதிவிடுகிறேன்)

    \\சும்மா கவலைப்படாம எழுதுங்க.அங்கீகாரம் தானக வரும். தாமாக தேடிக்கொள்வது அங்கீகாரம் இல்லை அது விளம்பரம். நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.\\
    எந்த ஒரு படைப்பாளிக்கும் அங்கீகாரம் என்பது முக்கியம் இவர்களிடம் எனக்கான அங்கீகாரத்தை எதிர்பார்த்தால் நானும் பத்தோடு பதினொன்றாக கலந்து என்னை பற்றியும் என் பதிவுகளை பற்றியும் எழுத வைக்க முடியும், இவர்களிடம் எனக்கான அங்கீகாரத்தை எதிர்பார்க்கவில்லை அப்படி இருந்தால் நிறைய நண்பர்களை பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளமுடியும் ஆனால் நான் என்னை வெளிப்படுத்த விரும்பாதவன் , (இவ்வளவு ஏன் என்னை சுற்றி உள்ளவர்களுக்கே நான் இது போல் எழுதுவது தெரியாது) ஆனால் என் பதிவுகளுக்கு நம் தளத்திற்கு ஒரு அங்கீகாரம் எதிர்பார்க்கிறேன் அதற்கான தகுதி இருக்கிறதென்றே நம்புகிறேன். நம் தளத்தில் பார்த்தீர்களா நண்பரே பயனுள்ள தளமா என கேள்வி கேட்டு அதில் வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தினேன் அதில் இரண்டு நபர்கள் தான் பயனற்ற தளம் என வாக்களித்திருக்கிறார்கள்.

    \\அதே சமயம் எண்ணிக்கை முக்கியமில்லை. தரம்தான் முக்கியம். அதையும் கருத்தில் கொள்ளுங்கள்.\\
    நிச்சியமாக நண்பா, எண்ணிக்கை என்பது முக்கியமில்லை என்பதே உணர்ந்தே இருக்கிறேன் நான் இது வரை எழுதிய பதிவுகள் எல்லாமே விண்டோஸ் சம்பந்த பட்ட பிரச்சினைகள் தீர்வு அவசியம் தெரிந்திருக்க வேண்டிய தீர்வு சம்பந்தபட்ட பிரச்சினைகளை பற்றித்தான் எழுதியிருக்கிறேன் ஒரு சாதாரண கணினி பாவனையாளரின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாத்தான் பதிவுகளை எழுதியிருக்கிறேன் நான் எண்ணிக்கையை உயர்த்துவதென்றால் தினம் ஒரு பதிவு கணினி சம்பந்தமாகவே எழுதமுடியும் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை ஆனால் அது எல்லோருக்கும் பயன்படாது என்பது தெரியும்,நான் எழுதிய பதிவுகளில் சில பதிவுகள் தவிர மற்ற எல்லாமே நல்ல பதிவுகள் தான்.
    தாங்கள் என் மன ஓட்டத்தை சரியாகவே புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்
    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    ஜிஎஸ்ஆர் said...
    August 5, 2010 at 9:08 AM

    @நீச்சல்காரன்மன்னிக்கவும் நண்பா நீங்கள் தவறாக எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் (புரிந்து கொண்டிருக்கிறீர்கள்)உங்களுக்கு திரும்பவும் நேரமிருந்தால் ஒரு முறை வாசித்து பாருங்களேன் நான் என் கருத்துகளை மறைமுகமாக தான் சொல்லியிருக்கிறேன் பதிவுலகத்தில் நடப்பதை தான் சுட்டி காட்டியிருக்கிறேன் (இவ்வளவு ஏன் நான் என் பதிவுகளுக்கு யார் வாக்களித்திருக்கிறார்கள் என கூட பார்ப்பதில்லை கருத்துரை அளித்தாலும் அதை யார் எவர் என நான் பார்ப்பதில்லை சமீபத்தில் என் பதிவில் அவர் பெயரை கிளிக்கினால் ஆபாச தளங்களுக்கு செல்லும் படியாக இருந்திருக்கிறது நான் அதை கவணிக்கவில்லை எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் என்னிடம் விபரத்தை சொல்லிய போது தான் நானும் கவணித்தேன் ஆனால் இதுவரை அந்த கருத்துரையை நீக்கவில்லை)

    தங்களின் கருத்துரைகும் சரியான புரிதலுக்கும் நன்றி நண்பரே


    Vengatesh TR said...
    November 26, 2010 at 5:35 PM

    .தேவையான தகவலை, தேவையான நேரத்தில், தான் பார்த்திருக்கிறேன் ! (abbrevations)


    .உங்கள் பகிர்வு குணத்திற்கு என்றும் அழியா-புகழ் உண்டு, நீங்கள் வருத்தபடாதீர்கள் !


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 9:22 PM

    @சிகப்பு மனிதன்அதெல்லாம் வருத்தமில்லை நண்பா சில நேரங்களில் வருத்தப்பட்டிருக்கிறேன்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர