Aug 2, 2010

15

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி

  • Aug 2, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: அறிவு ஒன்றுதான் குறைந்துகொண்டே போகும் பலனுக்கு ஆளாகாமல் இருக்கும் உற்பத்திக் கருவி.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு சமீபத்தில் நமது அண்ணா பல்கலைக்கழகம் கணிப்பொறி சம்பந்தபட்ட வார்த்தைகளுக்கு தமிழாக்கம் கொடுத்துள்ளார்கள் இது அவர்களின் மிகப்பெரிய உழைப்பு இத்தனை வார்த்தைகளை தமிழ்படுத்துவது என்பது சாதரண காரியம் இல்லை என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

    சில வார்த்தைகளை மட்டும் நான் உதாரணத்துக்கு கீழே கொடுத்திருக்கிறேன் அவர்கள் கிட்டதட்ட 4300 வார்த்தைகளுக்கு தமிழ் அறிஞர்களின் துனையோடு தமிழில் தொகுத்திருக்கிறார்கள்.

    adaptor - பொருத்தி
    add-on - கூட்டு உறுப்பு
    amplifier - பெருக்கி, மிகைப்பி
    analog - ஒப்புமை
    animation - அசைவூட்டம்
    assembler - பொறிமொழியாக்கி
    compile - தொகு
    dial-up - அழை, சுழற்று
    direct data entry - நேரடித் தரவுப் பதிவு
    disable – முடக்கு
    disclaimer - உரிமைத் துறப்பு
    disk duplication - வட்டு நகலாக்கம்
    display - காட்சியகம்
    ink jet printer - மை பீச்சு அச்சுப்பொறி
    integer - முழுஎண்
    keyboard - சாவிப் பலகை
    monitor - திரையகம்
    server - சேவையகம்
    string length - சர நீளம்
    suffix - பின்னொட்டு
    superconductor - மீக்கடத்தி
    synchronization - ஒத்தியக்கம்
    system loader - அமைப்பு ஏற்றி
    system loader - அமைப்பு ஏற்றி
    systems security - அமைப்புக் காப்பு
    tab - தத்தல்
    tag - அடையாள ஒட்டு
    task - பணிக்கடம்
    task panel - பணிக்கடச் சட்டகம்
    virus - நச்சுநிரல்


    இனி இது பற்றி மொத்த தகவலுக்காக இந்த பிடிஎப்தரவிறக்கி படித்து பயன்பெறுங்கள் நாமும் கணிப்பொறி சம்பந்தபட்ட வார்த்தைகளை முடிந்தவரை தமிழில் எழுத முயற்சிப்போம்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    15 Comments
    Comments

    15 Responses to “கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி”

    ஜெயந்த் கிருஷ்ணா said...
    August 2, 2010 at 9:09 AM

    நல்ல தொகுப்பு..
    பதிவுலகிற்கு மிகவும் பயனுள்ளவை.
    பகிர்வுக்கு மிக்க நன்றி..


    Robin said...
    August 2, 2010 at 9:14 AM

    நல்ல முயற்சி!


    Umapathy said...
    August 2, 2010 at 12:37 PM

    தமிழ் தழைக்க மற்றுமொரு தவப்பரிசு


    டிலீப் said...
    August 2, 2010 at 2:12 PM

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்


    செந்தில் குமார் தங்கவேல் said...
    August 2, 2010 at 11:38 PM

    தமில் மெல்ல இனிச் சாகும் - என்ற பாரதி வரிகளுக்கு கணிணியும், இணையத்தமிழும் உண்மையான அர்த்தத்தை சொல்லுகிறது.
    எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு..
    அண்ணன் GSR , நல்ல பதிவு , மேலும் இதுபோல் தொடர ஆசைகளும், ஆவலும்.


    ஜிஎஸ்ஆர் said...
    August 3, 2010 at 9:10 AM

    @Robinநன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    August 3, 2010 at 9:11 AM

    @Dileepஇனைந்திருங்கள் நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    August 3, 2010 at 9:35 AM

    @செந்தில் குமார் தங்கவேல் நிச்சியமாக நமக்கு தெரிய வரும் நல்ல தகவல்களை பகிர்ந்துகொள்வோம் தங்களின் கருத்துரைக்கும் புரிதலுக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    August 3, 2010 at 9:40 AM

    @வெறும்பயஉங்கள் நன்றி முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கே சேர வேண்டும்


    ஜிஎஸ்ஆர் said...
    August 3, 2010 at 9:40 AM

    @உமாபதிஉங்கள் நன்றி முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உரித்தாகட்டும்


    மாணவன் said...
    November 12, 2010 at 11:49 AM

    உங்களின் இந்த பதிவை நான் கவணிக்கவில்லை நண்பா...

    நான் ”கணினி கலைச் சொற்கள்” எனக்குத்தெரிந்த சில வார்த்தைகளை மட்டுமே பகிர்ந்துள்ளேன்
    நீங்கள் அருமையாக பதிவிட்டு பிடிஎப் புத்தகமாக உள்ள தொகுப்பையே வழங்கியுள்ளீர்கள் அருமை,

    எனது தளத்திலும் இந்த பதிவிற்கான இணைப்பை கொடுத்திவிட்டேன்...

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    என்றும் நட்புடன்
    உங்கள் மாணவன்


    ஜிஎஸ்ஆர் said...
    November 13, 2010 at 9:08 AM

    @மாணவன் நல்லது நண்பா உங்கள் விருப்பபடியே செய்யுங்கள்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 5:57 PM

    அறிவு ஒன்றுதான் குறைந்துகொண்டே போகும் பலனுக்கு ஆளாகாமல் இருக்கும் உற்பத்திக் கருவி

    .எனக்கு இந்த வரி, புரியவில்லை !



    .மீண்டும், எனக்கு தேவையான பதிவு !

    .பகிர்ந்தமைக்கு நன்றி, ஆசிரியரே !


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 9:23 PM

    @சிகப்பு மனிதன்சிந்திக்க சிந்திக்க அறிவு கூடும் தானே? மாறாக குறைவதில்லையே அதைத்தான் அப்படி எழுதியிருக்கிறேன்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 9:41 PM

    .புரியவைதமைக்கு நன்றி !


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர