Feb 28, 2012

16

MP3 பாடலில் உங்கள் போட்டோவையும் இனைக்கலாம்.

  • Feb 28, 2012
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: கோபம் வாயை திறக்க வைக்கும் ஆனால் கண்களை மூடி விடும்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வாயிலாக MP3 பாடலில் ஒரு போட்டோவை எப்படி இனைப்பது என்பது பற்றி பார்க்கலாம். உங்களில் சிலராவது சில MP3 பாடல்களை விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கும் போது விண்டோஸ் மீடியா பிளேயரின் வலது பக்கம் அந்த பாடலின் படத்துடைய போட்டோவோ அல்லது பாடிய நபரின் போட்டோவோ பார்த்திருக்க கூடும் இல்லையா? இதைப்பற்றி சிலருக்கு தெரிந்திருக்கலாம் சிலருக்கு எப்படி என்ற கேள்வி இருக்குமேயானால் அதற்கான விடையைத்தான் இப்போது பார்க்க போகிறோம். இதற்கான வழிமுறைகள் மூன்று விதங்களில் இருக்கிறது நாம் முதல் இரண்டு வழிகளை பார்க்கலாம்.

    சரி ஏதாவது ஒரு MP3 பாடலை உங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரில் திறந்து கீழிருக்கும் படத்தில் இருப்பது போல Media Library கிளிக் செய்து நீங்கள் போட்டோ இனைக்க விரும்பும் டிராக்கை தெரிவு செய்து இடது கிளிக் செய்வதன் மூலமாக திறக்கும் மெனுவில் Advanced Tag Editor செலக்ட் செய்யவும்.



    இப்பொழுது கீழிருப்பது போல ஒரு பாப் அப் விண்டோ திற்க்கும் அதில் Picture டேப் திறந்து நீங்கள் விரும்பும் போட்டோவை பிரவுஸ் செய்து அப்ளை கொடுத்து ஓக்கே கொடுக்கவும்.



    இது நான் உங்களுக்காக இனைத்திருக்கும் படம் வலது பக்கம் பாருங்கள் ஒரு போட்டோ இனைத்திருக்கிறேன்.



    இரண்டாவதாக MP3
    மென்பொருள் இருக்கிறது தேவைப்படுபவர்கள் தரவிறக்கி இன்ஸ்டால் செய்து அப்ளிகேஷனை ரன் செய்யவும் இதில் நீங்கள் போட்டோ இனைக்க விரும்பும் MP3 பாடல்களை ஏதாவது ஒரு போல்டரில் வைத்து கீழிருக்கும் படத்தில் குறிப்பிட்டு இருப்பது போல செய்து விடவும் அவ்வளவு தான் இனி உங்கள் MP3 பாடலை விண்டோஸ் மீடியா பிளேயரிலோ அல்லது www.videolan.org
    இயக்கினால் கூடவே நீங்கள் இனைத்த போடோவையும் காணமுடியும்.



    VLC பிளேயரில் நான் ஒரு MP3 பாடலை ஓட விட்ட போது நான் இனைத்திருக்கும் போட்டோவும் கூடவே தெரிகிறது.



    நண்பர்கள் கவணத்திற்கு சில நேரங்களில் உங்கள் VLC Player ஒருவேளை போட்டோவை காண்பிக்காமல் இருக்கலாம் அதற்கான தீர்வு http://forum.videolan.org
    அல்லது http://forums.mp3tag.de
    இருக்கிறது முயற்சித்து பாருங்கள் வேறேதுனும் சந்தேகம் இருப்பின் கருத்துரையில் கேளுங்கள் எனக்கும் தெரிந்தால் நிச்சியம் பதில் அளிக்கிறேன்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    16 Comments
    Comments

    16 Responses to “MP3 பாடலில் உங்கள் போட்டோவையும் இனைக்கலாம்.”

    Anonymous said...

    February 28, 2012 at 6:44 PM

    Windows 7 -ல் எப்படி செய்ய வேண்டும்


    திண்டுக்கல் தனபாலன் said...
    March 2, 2012 at 1:14 PM

    புதுசு கண்ணா புதுசு ! நன்றி சார் !


    மாணவன் said...
    April 15, 2012 at 12:12 PM

    உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் அண்ணே!


    rtvenkat said...
    April 23, 2012 at 1:09 AM

    மிக அருமை நண்பரே! உங்கள் பதிவை மிக தாமதமாகப் பார்த்திருக்கிறேன். அனைவருக்கும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி!


    ஜிஎஸ்ஆர் said...
    April 23, 2012 at 7:53 PM

    @wesmobஇதை முயற்சித்து பாருங்களேன்
    http://www.sevenforums.com/music-pictures-video/55545-mp3-album-art-embedded-but-not-showing-w-explorer.html


    ஜிஎஸ்ஆர் said...
    April 23, 2012 at 7:54 PM

    @திண்டுக்கல் தனபாலன் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    April 23, 2012 at 7:54 PM

    @மாணவன் நன்றி தம்பி... தங்களுக்கும் என் வாழ்த்துகள்


    ஜிஎஸ்ஆர் said...
    April 23, 2012 at 7:55 PM

    @rtvenkat தாமாதமாய் பார்த்தாலும் சந்தோஷம் இன்னும் நிறைய பதிவுகள் இருக்கிறது படித்து பாருங்களேன்...


    Techselva said...
    May 20, 2012 at 10:39 AM

    superb information ......


    Unknown said...
    June 4, 2012 at 4:32 PM

    Excellent info dude.
    Thanks .
    Regards
    Manimaran


    ஜிஎஸ்ஆர் said...
    June 9, 2012 at 12:21 PM

    @krishyதகவலுக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    June 9, 2012 at 12:22 PM

    @selvam sellamuthu நல்லது நண்பரே, உங்களை போன்றவர்களின் புரிதலும் கருத்துரையும், பதிவுக்கான ஓட்டுகள் மட்டுமே சரியான அங்கீகாரம்


    ஜிஎஸ்ஆர் said...
    June 9, 2012 at 12:23 PM

    @Mani Maranசந்தோஷம் மணிமாறன், இனைந்திருங்கள் தொடர்ந்தும் நம் தளத்தில்..


    Ram said...
    July 2, 2012 at 3:34 PM

    உங்கள் பதிவுகளை கடந்த மூன்று மணிநேரமாக படித்தேன். பதிவுகள் அனைத்தும் அருமை. எனக்கும் பதிவு எழுத ஆசை, நேரம்தான் கிடைப்பதில்லை. நான் விண்டோஸ் 7 உபோயோகிறேன், அதற்க்கு தகுந்தாற்போல் எழுதினால் மேலும் நன்றாயிருக்கும்.

    மிக்க நன்றி நண்பரே...!


    ஜிஎஸ்ஆர் said...
    July 25, 2012 at 11:19 AM

    @Ram அவசியம் விண்டோஸ் 7 குறித்து எழுதுகிறேன் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் முடிந்தவரை விரைவில் பதில் அளிக்கிறேன்


    ரவி சேவியர் said...
    December 26, 2012 at 1:58 PM

    Thank you its works for me.


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர