Showing posts with label பொது தகவல். Show all posts
Showing posts with label பொது தகவல். Show all posts

Dec 30, 2012

20

தங்கத்தின் தரமும், செய்கூலி சேதார கொள்ளையும்! சுங்க வரியும்!

  • Dec 30, 2012
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: ஒரு மரத்திலுள்ள பழங்களை எண்ணி விடலம் . ஒரு பழத்தால் உருவாகப் போகும் மரங்களை எண்ண முடியாது.

    வணக்கம் நண்பர்களே பல மாதங்களாக எழுத முடியாத நிலை இப்பொழுதும் கூட அதே நிலை தான் ஆனால் சமீபத்தில் பேஸ்புக் தளத்தில் தங்கத்தை பற்றிய ஒரு கட்டுரையை காண நேர்ந்தது அதன் உந்துதல் தான் இந்த பதிவு. இந்த பதிவையே உங்களை வாழ்த்துவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு உங்களை வாழ்த்த விரும்புகிறேன் . அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் -2013, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்.

    நம் எல்லோருக்கும் தெரியும், நாம் வாங்கும் ஆபரணங்கள் பெரும்பாலும் 22 கேரட் வகையை சேர்ந்தது அதைத்தான் 916 என்பார்கள், இன்னும் சில இடங்களில் KDM அதாவது (Cadmium) இதில் இந்த KDM நகைகள் தற்போது அதிகளவில் மார்கெட் செய்யப்படுவதில்லை பல நாடுகளில் தங்கத்தில் KDM பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டு விட்டது.

    KDM என்றால் என்ன? எதனால் இது தங்கத்தொழிலில் தடை செய்யப்பட்டது இப்படி ஒரு கேள்வி உங்களுக்கு இப்ப வந்திருக்கும் தானே? KDM (Cadmium) ஒரு கெமிக்கல் கலவை அதாவது சாதரணமாக தங்கத்தோடு வெள்ளி, மற்றும் செம்பு மட்டுமே கலந்து ஆபரணங்கள் செய்வார்கள், ஆனால் KDM நகையை பொருத்த வரை தங்கத்தோடு கலப்பதற்கு Cadmium எனும் ரசயானக்கலவையை பயனபடுத்துவார்கள், இதனால் தங்கத்தின் நிறம் பளிச்சென இருக்கும் ஆனால் இதை தொழில் முறையாக செய்பவருக்கு நிச்சியம் உடல் நிலை பாதிக்க படும் மற்றபடி இதை அணிபவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    பொதுவாக தங்கம் 8 Ct , 9 Ct, 10 Ct, 12 Ct, 14 Ct, 15 Ct, 16 Ct, 18 Ct, 19 Ct ,20 Ct, 21 Ct, 21.6 Ct, 22 Ct ,23 Ct, 24 Ct இந்த நிலைகளில் மட்டுமே காணப்படுகிறது 8 Ct க்கு கீழே இருப்பவற்றை தங்கம் என்பதாக கணக்கில் எடுப்பதை விட ஏதோ ஒரு உலோகம் என்று வேண்டுமானல் வைத்துக்கொள்ளலாம். நமது நாட்டை பொருத்தவரை 18 Ct முதல் 24 Ct Purity தங்கம் மட்டுமே பெரும்பாண்மையாக பயன்படுத்த படுகிறது அதே நேரத்த்தில் 8 Ct முதல் 16 Ct வரையிலான Purity தங்கம் மேலை நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அதிகம் பயன்படுத்த படுகிறது.

    தங்கத்தை பொருத்தவரை 24 Ct என்பது சுத்த தங்கம் அதாவது இதன் Purity என்பது 999.99% என்பதாகும் அதாவது 24 Ct தங்கத்தில் 0.01% வெள்ளியும், செம்பும் கலக்கபட்டிருக்கும், ஆனால் உலக அளவில் 99.9% Purity என்பது 24 Ct சுத்த தங்கமாக ஏற்றுக்கொள்ளபட்டிருக்கிறது, ஆனால் மிகவும் மென்மையாக இருப்பதால், 24 Ct தங்கத்தில் ஆபரணங்கள் செய்ய முடியாது இந்த 24 Ct தங்கத்தை தொழில்முறை ரீதியாக 24 பார்ட் என்கிறார்கள் அதாவது 24 பார்ட் என்பது 999.99% Purity தஙகமாகும் இதில் வெறும் 0.01% அளவு மட்டுமே வேறு உலோகம் சேர்க்கபட்டிருக்கிறது, 22 Ct என்பது 22 பார்ட் அதாவது 91.66 Purity தங்கமாகும். அதாவது சுருக்கமாக சொலவதானால் ஒரு பார்ட் என்பது 4.1666 % Purity ஆக கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் வெளி நாட்டு நகைகளில் உதாரணமாக மத்திய கிழக்கு நாடுகள் (வளைகுடா நாடுகள்) மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் 22 Ct தங்கம் 91.7 % Purity ஆக காணப்படும் சாத்தியக்கூறுகள் தெரிகிறது. ஆனால் நம் ஊரை பொருத்த வரை 91.66 % Purity என்பது அப்படியே இருந்தால் சந்தோஷம் தான்.

    தங்கத்தின் Purity-யை எப்படி தெரிந்துகொள்வது?

    24 Ct X 4.1666 = 99.99 % Purity
    23 Ct X 4.1666 = 95.83 % Purity
    22 Ct X 4.1666 = 91.66 % Purity
    20 Ct X 4.1666 = 83.33 % Purity
    18 Ct X 4.1666 = 74.99 % Purity

    இதை முறையை வேறு விதமாகவும் கையளாலம்.

    24 Ct / 24 Ct = 100 % Purity
    23 Ct / 24 Ct = 95.83 % Purity
    22 Ct / 24 Ct = 91.66 % Purity
    20 Ct / 24 Ct = 83.33 % Purity
    18 Ct / 24 Ct = 0.75 % Purity

    மேலே சொன்னது உங்களுக்கு புரித்திருக்கும் தானே? இப்படியே 8 Ct முதல் 22 Ct வரையிலான தங்கத்தின் Purity-யை தெரிந்துகொள்ளலாம். வழக்கமான கணித முறைகள் போலவே புள்ளிகளுக்கு அடுத்த வரும் இலக்கங்களை முழுமையான எண்ணாக மாற்றிக்கொள்ளலாம், உதாரணத்திற்கு 18 X 4.1666 = 74.99 % Purity என்பதை 75 % Purity என்பதாக கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

    சரி நீங்கள் 22 Ct தங்கத்தில் 1 Gram அளவில் தங்க நகையை வாங்குகிறீர்கள் என வைத்து கொள்வோம் இந்த 22 Ct தங்கம் முழுவதும் தங்கம் தானா? இந்த 1 Gram தங்கத்தில் உண்மையில் எத்தனை கிராம் சுத்தமான தங்கமும், எத்தனை மில்லி கிராம் செம்பும், வெள்ளியும் கலக்கபட்டிருக்கிறது என்பதை எந்த நகை கடையும் சொல்வதில்லை, ஆனால் அவர்கள் நேரடியாக சொல்லாவிட்டாலும் 916 KDM அல்லது 22 Ct என்று மட்டும் தான் சொல்வார்கள் எத்தனை பேருக்கு தெரியும் இது தான் தங்கத்தின் Purity என்பது, பெரும்பாலோனோர் இதை ஒரு தரப்படுத்தும் குறியீடாக தான் புரிந்து வைத்திருக்கிறார்கள் (ISO முத்திரை போல) என்பது நான் கண்ட உண்மை.

    உங்க கிட்ட 1 Gram (22 Ct) இருந்தால், அதை 24 Ct Purity தங்கமா மாத்தும் போது எத்தனை கிராம் 24 Ct தங்கம் கிடைக்கும்னு பார்க்கலாம்.

    Formula 1: 1 Gram x 22 Ct / 24 Ct = 0.917 Milli Gram
    Formula 2: 1 Gram / 1.09 = 0.917 Milli Gram

    இதில் இரண்டாவது பார்முலா என்பதில் 1.09 என்பது எப்படி வந்தது என கேள்வி எழுமேயானால் அதற்கான பதில் இது தான் 24 Ct / 22 Ct = 1.09, இதில் சிறிய அளவிலான மைக்ரோ மில்லி கிராம் அளவில் சிறிய மாறுதல்கள் இருக்கும்.

    இதே போல உங்க கிட்ட 1 Gram (24 Ct) இருந்தா அதை நீங்க 22 Ct நகையா மாத்தும் போது எத்தனை கிராம் 22 Ct தங்கம் கிடைக்கும்னு பார்க்கலாம்.

    Formula 1: 1 Gram X 24 Ct / 22Ct = 1.09 Gram (22 Ct)
    Formula 2: 1 Gram / 0.9166 = 1.09 Gram (22 Ct)

    தங்கத்தில் உலோகம் கலக்கும் அளவு.

    • 24 Ct தங்கத்தில், செம்பும், வெள்ளியும் 0.01% அளவில் கலந்து இருக்கும்.
    • 22 Ct தங்கத்தில், செம்பும், வெள்ளியும் 8.3 % அளவில் கலந்து இருக்கும்.
    • 18 Ct தங்கத்தில், செம்பு, வெள்ளி, நிக்கல் சேர்ந்து 25% அளவில் கலந்து இருக்கும்.
    • 14 Ct தங்கத்தில், செம்பு, வெள்ளி, நிக்கல், துத்தநாகம் மற்றும் பல்லேடியம் போன்றவை சேர்த்து 41.5 % அளவில் கலந்து இருக்கும்..

    நம்மில் பலரும் 50 ரூபாய்க்கு காய்கறி வாங்க சென்றால் ஆயிரம் கேள்வி கேட்டு, கத்தரிக்காயை அமுக்கி பார்த்து, வெண்டைக்காயை உடைச்சு பார்த்து வாங்குற நாம நகைக்கடைக்கு போன அந்த தங்கம் சுத்தமானது தானா? அதன் Purity சரிதானா? என எதையும் யோசிக்க மாட்டோம், கடைக்காரன் கொடுக்கிற ஒரு கூல்ட்டிரிங்க்ஸோ அல்லது டீயையோ குடிச்சிட்டு அவன் சொல்ற விலைக்கு வாங்கிட்டு வந்துகிட்டே இருப்போம், இப்படி நாம நம்புற ஒரு நகை கடைக்காரன் நம்ம கிட்ட எப்படி கொள்ளையடிக்கிறான் தெரியுமா, நம்மள ஏமாத்துறதுக்காகவே செய்கூலி, சேதாரம் வச்சுருக்காங்க.

    சேதாரம்னா என்ன ஒரு பொருளை இனி உபயோகிக்கவே முடியாத என்கிற அளவில் இருப்பதை தான் சேதாரமாகி விட்டது என்று எடுத்துக்கொள்லலாம். 1 கிராம் நகை எடுக்கிறதுக்கு 30 % செய்கூலி சேதாரம் கொடுக்க வேண்டியிருக்கு அதாவது பொருளோட மதிப்புக்கு 3/1 பாகத்துக்கு மேல கொடுக்க வேண்டியிருக்கு 1000 ரூபாய்க்கு நகை வாங்கின 300 ரூபாய் செய்கூலி சேதாரமா கொடுக்க வேண்டியிருக்கு.

    ஒரு பொருளை செய்வதற்கு செய்கூலி என்பது நியாயமானது வெறும் தங்க துகள்களாக, தங்க கட்டிகளாக இருப்பதை நமக்கு பிடித்த விதத்தில் டிசைன்கள் செய்து தருவதற்கு நாம் நிச்சியம் செய்கூலி கொடுத்து தான் ஆகவேண்டும். ஆனால் இதில் சேதாரம் என்பது தான் பகல் கொள்ளையாக இருக்கிறது தங்கத்தை பொருத்தவரை கழிவு என்பதே இல்லை, அப்படியே பயன்படுத்த முடியாத தங்கமாக இருந்தால் அதை நம்மிடம் தந்துவிட்டு அதற்கான பணத்தை பெற்றுக்கொள்வது தானே முறை, ஆனால் பொருளை நமக்கு தராமலே அவர்களே வைத்துக்கொண்டு நம்மிடம் சேதாரம் என்பதாக பணம் பறிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

    உங்களுக்கு தெரியுமா தங்க பட்டறைகளில் கூட்டி பெருக்கி குப்பயை கூட வெளியே அள்ளி போட்டு விடமாட்டார்கள் அத்தனையும் சேர்த்து வைத்து சலித்து விடுவார்கள், சலித்து முடித்தவுடன் குப்பையை வெளியே அள்ளி போட்டு விடுவார்கள் என நினைத்தால் அது தான் இல்லை அதையும் அவர்கள் இதற்கென்றே இருக்கும் சிறிய தொழிலாளிகளிடம் விற்று விடுவார்கள். இந்த குப்பை மண்ணை வாங்கியவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இதில் இருந்து ஏதாவது கிடைக்க கூடும், அப்படி கிடைக்குமென்று தான் நினைக்கிறேன் இல்லையென்றால் இந்த கழிவை வாங்க மாட்டார்கள் தானே? ஆக எப்படி பார்த்தாலும் நகை பட்டறைகளில் இருந்து சில பல மில்லி கிராம் தங்க துகள்கள் வெளியில் செல்லுமே தவிர கிராம் கணக்கில் போவதற்கான வாய்ப்பு மிக குறைவு, ஆனால் நாம் நகை வாங்கும் போது 30% செய்கூலி சேதாரம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் உண்மையில் நெடு நாட்களாக நகை கடைகளில் வாடிக்கையாளனை நூதனமாக ஏமாற்றி கொள்ளை அடிக்கபடுகிறது, எல்லாவற்றுக்கும் சட்டம் போடும் அரசு கூட இந்த பகல் கொள்ளை விஷயத்தில் அக்கரை எடுத்ததாய் தெரியவில்லை ஒருவேளை அரசு அதை மறைமுகமாக மனப்பூர்வமாக நகைக்கடை வியாபாரிகளை அனுமதிக்கிறது என்பதாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

    இந்தியாவில், தமிழகத்தில் பெரிய சில கடைகளில் மட்டுமே தங்கத்தின் Purity தெரிந்துகொள்ளும் வசதி இருக்கிறது மற்ற பெரும்பாலன கடைகளில் Purity பற்றி தெரிந்துகொள்ள வசதியில்லை, ஆனால் வெளி இடங்களில் Purity சோதனை செய்வதற்காகவே சில கடைகள் இயங்குகின்றன, ஆனால் நகை ஒரு இடத்தில் வாங்கி அதன் பின்னர் வேறொரு கடைக்கு சென்று சோதனை செய்வதென்பது நடைமுறைக்கு ஒவ்வாத காரியம்.. நம்பிக்கையோடு நகையை வாங்கும் நம்மை போன்ற மக்களை மறைமுகமாய் இப்படி பகல் கொள்ளை அடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது.

    வெளி நாட்டில் இருப்பவர்கள் ஆபரண தங்கம் வாங்க நினைத்தால் அங்கேயே 22Ct நகைகளாக வாங்குவது நல்லது, தங்கத்திற்கான Purity உத்ராவாதம் கிடைக்கும், செய்கூலியும் குறைவாய் இருக்குமென்று கேள்விபட்டிருக்கிறேன், அதே நேரத்தில் கொஞ்சம் புத்திசாலித்தனமாய் தங்க பிஸ்கட் வாங்கி வந்து ஊரில் செய்து கொள்ளலாம் என நினைத்தால் Purity-க்கு எந்த இந்தியாவில் எந்த உத்ரவாதமும் இல்லை வெளிநாட்டு நண்பர்கள் வாயிலாக அறிந்த வரை இந்தியாவில் தான் செய்கூலி சேதாரம் என்பது மிகவும் அதிகம். அதே நேரத்தில் வணிக நோக்கோடு தங்கம் வாங்க நினைத்தால் தங்க பிஸ்கெட்கள் வாங்கி வருதல் நலம், இந்தியாவில் நல்ல விலையும் கிடைக்கும். ஆனால் மத்திய அரசின் புதிய விதிப்படி ஆண் நபர் ஒருவர் இந்திய ரூபாய் 10,000 மதிப்பிலான தங்கம் மட்டுமே கொண்டு வரமுடியும், பெண் நபர் ஒருவர் 20,000 ரூபாய் மதிப்பிலான நகை மட்டுமே கொண்டு வரமுடியும் அதற்கு மேல் இருந்தால் கஸ்டம்ஸில் பணம் கட்ட வேண்டியதிருக்கும் ஒவ்வொரு பத்து கிராம் நகைக்கும் 450 ரூபாய் வீதம் + 3% வரி உட்பட கட்ட வேண்டியிருக்கும், பணம் கட்டி நகையை கொண்டு செல்ல விருப்பம் இல்லாதவர்கள் உங்கள் ஆபரணங்களை ஏர்போர்ட்டிலேயே வைத்து அதற்கான அடையாள சீட்டை பெற்றுக்கொள்வதன் மூலம் திரும்பி செல்லும் போது உங்கள் நகையை பெற்றுக்கொள்ள முடியும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Jan 10, 2012

    3

    தங்க நாணயம் 99

  • Jan 10, 2012
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: மனிதன் பிறப்பது மெய்ஞனாக ஆனால் இறப்பதோ வஞ்சகனாக.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் ஒரு கதையின் வழியாக இன்றைய எதார்த்த மனிதனின் நிலையை சொல்லிவிட முடியுமா என்றால் சொல்லிவிட முடியும் என்பது தான் உண்மை முன்பெல்லாம் குறும்படம் பற்றி அதிகம் தெரியாது ஆனால் இப்பொழுது யூடியுப்பில் நான் அதிகம் விரும்பி தேடி பார்ப்பது குறும்படங்களை தான்.. உண்மையில் ஆச்சரியமாய் இருக்கிறது 10 நிமிடத்திற்குள் எத்தனை அழகாய் ஆழமாய் அந்த உணர்வுகளை நமக்குள் உள்வாங்க வைத்துவிடுகிறார்கள் அதிலும் கனேஷ்குமார் டீம் ஒன்று இருக்கிறது அவர்களின் நகைச்சுவை குறும்படங்கள் நன்றாயிருக்கும் நேரமிருந்தால் பாருங்களேன்.

    நான் விரும்பும் தளங்களில் pkp
    , urssimbu
    , www.mybloggertricks.com
    இவைகளும் அடங்கும் இதில் பிகேபி
    குறித்தும் சிலம்பரசன்
    குறித்தும் சில பதிவுகளில் சுட்டிக்காட்டியிருக்கிறேன் ஆனால் பலமுறை பாகிஸ்தான் நண்பர் Mohammad Mustafa Ahmedzai எழுதும் www.mybloggertricks.com
    குறித்து ஏதாவது ஒரு பதிவில் வெளிப்படுத்த நினைப்பேன் ஆனால் குறிப்பிடுவதற்கான இடம் இல்லாததால் இதுவரை அவரை பற்றி குறிப்பிடமுடியவில்லை மேலும் அவர் எழுதுவது எல்லாமே பிளாக்கர் தொழில்நுட்பம், HTML நிரல்கள் தான் என்பதால் அதை எடுத்து மீண்டும் ஒரு மறுபதிப்பு செய்வதில் விருப்பமில்லை இவருடைய தள பதிவுகள் அதிலும் பிளாக்கர் தொழில்நுட்ப பதிவுகள் பரவலாய் இனையதளத்தில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என பேதமில்லாமல் பரவிக்கிடக்கிறது. மேலும் பிளாக்கர் தொழில்நுட்ப தளங்களின் தகவல்களுக்கு பிளாக்கர் தொழில்நுட்ப தளங்கள்
    .

    இப்படித்தான் சில நாட்களுக்கு முன்னர் Mohammad Mustafa Ahmedzai
    ஒரு குட்டி கதையை தன் தளத்தில் சொல்லியிருந்தார் அதையே கொஞ்சம் சுருக்கமாக நமது நடையில் உங்களுக்கு சொல்லுகிறேன், ஒரு வேளை நான் விரும்பியது போல யோசித்த்து போல உங்களையும் யோசிக்க வைக்கலாம்.

    ஒரு ஊரில் ஒரு நிலச்சுவான்தார் இருக்கிறார் அவரிடம் ஏரளாமான செல்வம், பணம், பொருள் இருக்கிறது அந்த ஊரில் 80% நிலங்களுக்கு சொந்தக்காரார், அந்த ஊரில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப்பேர் இவருடைய பண்ணையில் தான் வேலைபார்க்கிறார்கள் இவரிடம் கூலி வாங்கி தான் ஜீவனம் செய்கிறார்கள் ஆனால் இப்படிபட்ட செல்வந்தருக்கு மனதில் நிம்மதியில்லை ஆனால் என்ன குறை என்பதையும் அவரால் உணர்ந்துகொள்ள முடியவில்லை ஆனால் தன்னிடம் கூலி வாங்கி ஜீவணம் செய்யும் கூலித்தொழிலாளி தன் குழந்தையுடன் குடும்ப சந்தோஷமாக இருக்கிறானே இது எப்படி முடிகிறது என தன் வீட்டு மேனேஜரிடம் கேட்கிறார் உடனே மேனேஜர் அதற்கான ஒரு காரணத்தை சொல்லுகிறார் மேலும் கூடவே ஒரு ஆலோசனையும் சொல்லுகிறார்.

    ஆலோசனையின் படியே 99 தங்க்காசுகளை ஒரு பையில் இட்டு அதை அந்த ஏழை கூலித்தொழிலாளியின் வீட்டு வாசலில் இரவிலேயே போட்டுவிடுகிறார்கள் விடிந்த்தும் கூலித்தொழிலாளி கதவை திறக்கும் போது வாசலில் ஒரு பை இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் எடுத்து பிரித்து பார்க்கிறார் அதில் 99 தங்க காசுகள் ஒரு பக்கம் சந்தோஷம் ஒரு பக்கம் அதிர்ச்சி ஆனால் சந்தோஷத்தை கொண்டாடமல் மீண்டும் அந்த தங்க காசுகளை எண்ணி பார்க்கிறார் அதே 99 தங்ககாசுகள் மட்டுமே இருக்கிறது ஆனாலும் மீண்டும் எண்ணி பார்க்கிறார் அப்போதும் 99 தங்ககாசுகள் மட்டுமே இருக்கிறது அங்கும் இங்கும் தேடிப்பாத்தும் 100 தங்கக்காசுகள் கிடைக்கவில்லை ஆனால் இப்போது இவருக்கு 99 தங்கக்காசு கிடைத்த போது சந்தோஷப்படாமல் இல்லாத ஒரு தங்க காசுக்கு ஏங்குகிறார் 99 தங்க்காசுகளை 100 ஆக எப்படியும் மாற்றி விட முடிவு எடுக்கிறார்.

    கூலித்தொழிலாளி தன் மேனேஜரிடம் சென்று தனக்கு கொஞ்சம் பணத்தேவை இருப்பதாக சொல்லி தன்னை கூடுதல் நேரம் வேலை செய்ய அனுமதிக்கும்படி கேட்கிறார் அதற்கு மேனேஜரும் சம்மதிக்கிறார் அன்று முதல் எப்படியும் ஒரு தங்க காசு வாங்கி தன்னிடம் இருக்கும் 99 தங்க காசுகளை 100 தங்க காசுகளாக சேர்த்துவிட வேண்டுமென்ற வெறியில் பல மணி நேரம் உழைக்கிறார் இப்படி போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய மகன் அப்பா எனக்கு விளையாட்டு பொருள் வேண்டும் என கேட்கிறான் ஆனால் அதுவரை மகனிடம் கோபப்படாத தந்தை இப்போது மிகுந்த கோபத்துடன் இப்படி தேவையில்லாத செலவுகளுக்கு எல்லாம் பணத்தை வீணாக்க முடியாது என்பதாக கடினமான வார்த்தைகளை பிரயோகித்து மகனுடன் கூட நேரம் செலவலிக்காமல் ஒரு தங்க காசு மட்டுமே குறியாய் இருக்கிறார்.

    இதிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிந்துகொள்ள முடிகிறதா? இப்படித்தான் இன்று நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நமக்கு கிடைப்பதை வைத்து நாம் சந்தோஷப்படுவதில்லை 10 ரூபாய் கிடைத்தால் 20 ரூபாய் கிடைக்காதவென மனது ஏங்கும் இலட்ச ரூபாய் கிடைத்தால் மனம் கோடிக்கு (தெருக்கோடிக்கு அல்ல) ஆசைப்படும். நமக்குள்ளே இருக்கும் சந்தோஷத்தை நாம் பணத்திற்காகவும், செல்வத்திற்காகவும் மனதை ரணமாக்கி நம் சந்தோஷத்தையும் இழந்து நம் குடும்பத்தினர் சந்தோஷத்தையும் சேர்த்தே அழித்து விடுகிறோம்.

    உலகத்தில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் எல்லோரையும் பார்த்து நமக்கு பொறாமையோ, ஆற்றாமையோ இருக்கும் பொதுவாக அவர்களுக்கு என்ன அவர்களிடம் எல்லாம் இருக்கிறது என்பதாக நினைப்போம் ஆனால் அவர்கள் நிலையோ நாம் மேலே பார்த்த கூலித்தொழிலாளி கதையாகத்தான் இருக்கும்.

    எல்லாவற்றிலும் விதி விலக்குகள் இருப்பது போல பெரும் கோடீஸ்வரர்களிலும் சில விதி விலக்குகள் இருக்கிறார்கள் உதாரணத்திற்கு : வார்ன் பப்பட், பில்கேட்ஸ் போன்றவர்கள் தம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுப்பதற்கு தயாராய் இருக்கிறார்கள் அதிலும் வார்ன் பப்பட் கிட்டத்தட்ட தன் பெருவாரியான சொத்துக்களை டிரஸ்டுகளுக்கும் பொது நலன்களுக்கும் கொடுத்துவிட்டார் சமீபத்தில் கூட தன்னிடம் இருப்பதில் 1 மில்லியன் டாலர்கள் மட்டும் எனக்கு போதும் என்பதாக ஒரு செய்தி வந்திருந்தது இவர்களை போல செய்து விட யாருக்கும் மனம் வரும்?

    இன்னொருவர் இருக்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ் இவரு மேஜிக்கல் போன் (ஐபோன்) சொந்தக்கார்ர் முன்னவர்கள் தன்னிடம் இருப்பதை டிரஸ்டுகளுக்கு அள்ளிக்கொடுத்தனர் ஆனால் இவரோ இவர் வரும் முன்பே இயங்கிகொண்டிருந்த டிரஸ்டையும் தான் வந்ததும் நிறுத்தி விட்டார்...பார்த்தீர்களா மனிதர்கள் பலவிதம் அதில் ஒவ்வொருவரும் ஒரு விதம்...

    இந்த வாழ்க்கையில இப்ப இருக்கிற இந்த நிமிடம் நமக்கு சொந்தமானது முடிந்தவரை எதிர்ப்பார்ப்புகளை குறைத்துக்கொண்டாலே நமக்கு நிம்மதி வந்துவிடும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவச்சு வாழ பழகுவோம்?...பதிவு கோர்வையில்லாமல் இருக்கலம் ஆனால் சொல்ல வந்த விஷயம் புரிந்திருக்குமென்று நம்புகிறேன் விரும்பினால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், இது பற்றிய தங்களின் கருத்துக்களையும் பகிருங்களேன்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Oct 23, 2011

    11

    சந்தோஷ தீபாவளி வாழ்த்துகளும் பட்டாசுகளுக்கான முன்னெச்சரிக்கையும்

  • Oct 23, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: நிதானத்தை கடைபிடி அது வெற்றியின் முதல் படிக்கு வழி வகுக்கும்

    வணக்கம் நண்பர்களே, தள வாசகர்களே, தீபாவளிக்கு இன்னும் முழுதாய் இரண்டு நாட்கள் இருக்கிறது ஆனாலும் வரும் நாட்களில் இந்த பதிவை எழுத முடியுமாவென சந்தேகம் அது தான் முன் கூட்டியே உங்கள் அனைவருக்கும் தீபவாளி நல் வாழ்த்துகள் பொதுவாக சந்தோஷ தருணங்களிலும் இது போன்ற விழா காலங்களிலும் கவணமாக இருக்க வேண்டும், பொதுவாக தீபாவளி என்றாலே புத்தாடையும், பட்டாசுகளும் நினைக்கு வருவதை நம்மாள் தவிர்க்க முடியாது அதே நேரத்தில் தீபாவளி இரவு செய்திகளில் தீபாவளி அன்று நடந்த வெடி விபத்துகளைய்ம் நாம் அவசியம் காண நேரிடும் காணும் நேரத்தில் சிறிதாய் உச் கொட்டி விட்டு நம் சொந்த வேலையை பார்க்க தொடங்கி விடுவோம் எந்தவொரு பிரச்சினையும் நமக்கு நேரடியாய் வரும் போதும் அனுபவப்படும் போது மட்டுமே அதன் பாதிப்பும் வலியும் புரியும்.



    இந்த நேரத்தில் என் அருமை நண்பர்களுக்கும் தள வாசகர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவிப்பதோடு கூடவே இலவசமாய் சில தகவல்களையும் அறிய தறுவது என் கடமையென நினைக்கிறேன்.

    உங்கள் கவணத்திற்கு...

    • பட்டாசுகள் வாங்கும் போது அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் தரமுள்ள தயாரிப்புகளை பார்த்து வாங்கவும்.

    • பட்டாசுகளை ஏதாவது ஒரு பெட்டியில் போட்டு குழந்தைகள் கையில் கிடைக்காதவாறும் அதிகமான வெப்பம் படாதவாறும் பார்த்துக்கொள்ளுங்கள்.

    • பட்டாசுகளை கொழுத்தும் போது கவணமாக உடையணியவும் நீளமான உடைகள் அணிவதை தவிர்க்கவும், முடிந்தவரை பட்டாசுகள் கொழுத்தும் போது கதர் ஆடைகள் அணிவது நலம்.

    • பட்டாசு கொழுத்துவதற்கு நீளமான ஊதுபத்திகளை பயன்படுத்தவும். தீப்பெட்டி வைத்தோ அல்லது சாட்டை திரி கொண்டோ கொழுத்த முயற்சிக்க வேண்டாம்.

    • ஒரே நேரத்தில் பல பட்டாசுகளை அடுத்தடுத்து கொழுத்த முயற்சிக்க வேண்டாம் கொஞ்சம் தவறு நடந்து ஏதாவது ஒரு பட்டாசு வெடித்தால் அது தேவையில்லாத சங்கடத்தை தந்துவிடும்.

    • சாதரண வெடிகளாய் நினைக்க கூடிய சங்கு சக்கரம் மற்றும் சாட்டை, கம்பி மத்தாப்பு போன்றவைகளை வீட்டின் உள்ளே கொழுத்த வேண்டாம் சங்கு சக்கரம் போன்ற பட்டாசுகள் வெடிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளவை.

    • பட்டாசுகளை கொழுத்தும் போது மிக நெருங்கி இருந்து அல்லது அதனருகிலேயே அமர்ந்து கொண்டு கொழுத்த முயற்சிக்க வேண்டாம் எப்போதும் தாங்கள் பட்டாசு தீ பிடித்தவுடன் ஓடும் நிலையில் இருக்கவும்.

    • பட்டாசுகளை கொழுத்தும் முன் முடிந்த வரை அதன் நூல் திரியில் சுற்றி இருக்கும் வெள்ளை காகிதத்தை ஓரளவிற்கு நீக்கியும் அதன் திரிகளில் உள்ள வெடிமருந்தை நீக்குவதன் மூலமும் பட்டாசு திரியில் தீ வைத்தவுடன் உடனே வெடிக்க விடாமல் உங்களுக்கான பாதுகாப்பான இடைவெளியை அதிகரிக்க செய்யமுடியும்.

    • மிக நீளமான சர வெடி வாலக்களை கொழுத்தும் போது மிகுந்த முன் எச்சரிக்கையுடனும் ஆட்கள் இல்லாத இடத்தை தெரிவு செய்து கொழுத்துதல் நலம் பொதுவாக சர வெடி வாலாக்கள் பலமுனையில் தெரித்து விழும் வாய்ப்பு கொண்டது.

    • ராக்கெட் பட்டாசு கொழுத்தும் போது நேர் நிலையில் இருக்கட்டும் சாய்வான நிலையிலோ அல்லது படுக்க வைத்த நிலையிலோ கொழுத்த வேண்டாம், அதே போல புஸ்வானம் கொழுத்தும் போதும் நேரான நிலையில் வைத்தே கொழுத்தவும் சில நேரஙகளில் புஸ்வானம் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது கவணம் தேவை.

    • எந்த காரணத்தை கொண்டும் சிறு குழந்தைகளை பட்டாசுகளின் தலையில் தீ வைக்க அனுமதிக்க வேண்டாம், அவர்களை பயமுறுத்துகிறேன் என்றோ அல்லது சந்தோஷபடுத்துகிறேன் என்றென்றி அவர்களை அருகிலோ அல்லது தூக்கி வைத்துக்கொண்டு பட்டாசுகளை கொழுத்த வேண்டாம. உங்களின் கால் இடறல் கூட தேவையில்லாத சங்கடத்தை உருவாக்கி விடும்.

    • பட்டாசுகளை உங்கள் சட்டை டவுசர்களில் போட்டுக்கொண்டே பட்டாசு கொழுத்துவது சரியானதல்ல அவசியம் இது போன்ற தேவையில்லாத விஷயங்களில் கவணம் தேவை.

    • கைகளில் பிடித்துக் கொண்டு பட்டாசுகளை கொழுத்த வேண்டாம் பாட்டில்கள் அல்லது கொட்டாச்சி மூடிகள் போன்றவற்றில் உள்ளே வைத்தோ அல்லது அதை கொண்டு மூடி வைத்தோ தயவு செய்து பட்டாசு கொழுத்த வேண்டாம் வெடித்து சிதறும் போது காயங்களை ஏற்படுத்தி விடும்.

    • பட்டாசு ஏதாவது ஒன்றை கொழுத்தி அது வெடிகாத போது உடனே அதனருகில் சென்று பார்க்க வேண்டாம் குறைந்தது 10முதல் 15 நிமிடம் வரையாவது அதன் அருகில் செல்லாதீர்கள்.

    • அதிக சத்தம் கொடுக்கும் வகையிலான பட்டாசுகள் கொழுத்தும் போது முடிந்தவரை உங்கள் காதுகளில் பஞ்சு வைத்து அடைப்பது நலம் நம் செவியானது சாதராணமாக 65 முதல் 85 வரையிலான டெசிபல் சப்தங்களை மட்டுமே தாங்கவல்லது அதற்கு மேலான சத்தம் உங்கள் காதுகளை கேட்க விடாமல் செய்து விடும்.

    • உங்களுடைய குழந்தைகள் பட்டாசு கொழுத்தி முடித்து சாப்பிட உட்காரும் முன் அவசியம் அவர்களின் கைகளை சோப்பு போட்டு சுத்தமாய் கழுவி விட வேண்டியது பெற்றோர்களின் கடமை அவசியம் உங்கள் குழந்தைகளை கவணிக்க வேண்டும்.குழந்தைகளுக்கு தெரியாது பட்டாசு மருந்து ஒரு விஷம் என்பது அதனால் அவர்களை கவணித்து கை கழுவாமால் எதையும் எடுத்து சாப்பிட விடாதிர்கள்.

    • கொஞ்சம் நடைமுறைக்க ஒவ்வாத விஷயங்கள் போல தோனாலம் ஆனாலும் பட்டாசு கொழுத்தும் போது இரண்டு பக்கெட் தண்ணீர் தேவைப்பட்டால் எடுக்கும் நிலையில் இருக்கட்டும். எதிர்பாராத அசம்பாவிதங்களை தவிர்க்க உதவும்.

    • எதிர்பாராத விதமாக உடையில் தீ பிடித்தால் உடனே உடையை களைய முயற்சி செய்யுங்கள் மாறாக போர்வையை கொண்டோ சாக்கு கொண்டோ மூடி அனைக்க முயற்சிக்க வேண்டாம் ஒரு வேளை அது மேலும் பிரச்சினையை தரலாம். எதுவாக இருந்தாலும் எரியும் தீயின் தன்மையை பொருத்து சூழ்நிலைக்கு தகுந்தவாறு புத்திசாலிதனத்துடன் செயல்படுங்கள்.
    நான் கொடுத்துள்ளவை எல்லாம் சில விஷயங்கள் மட்டுமே உங்களுக்கு தெரிந்த பாதுகாப்பு எச்சரிக்கை தகவல்களை கருத்துரையில் பகிர்ந்துகொள்ளுங்கள் எனக்கும் என்னைப்போல பிறருக்கும் உதவியாய் இருக்கும்.மீண்டும் ஒரு முறை தீபாவளி வாழ்த்துகள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Oct 17, 2011

    6

    இனையமும் பொழுதுபோக்கும் காமமும்

  • Oct 17, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: சரியான சந்தர்ப்பதில் சொல்லவேண்டியதை தெளிவாக சொல்ல வேண்டும்.

    வணக்கம் நண்பர்களே கடந்த சில பதிவுகளாகவே ஜோதிடம் சாந்த பதிவுகளை பார்த்தோம் இனி இந்த பதிவின் வாயிலாக இனைய பயன்பாட்டையும் அதில் நிறைந்திருக்கும் பொழுதுபோக்கு அம்சமும் அதனால் ஏற்படும் குடும்ப சிதைவுகளையும் கொஞ்சம் பார்க்கலாம் தலைப்பை பார்த்து வேறு ஏதாவது இருக்குமென்று எண்ணி வந்தால் உங்கள் நினைப்புக்கு மாறான சிந்தனைகளை மட்டுமே இந்த பதிவில் காணமுடியும்.

    நானெல்லாம் பனிரெண்டு வருடங்களுக்கு முன் இனையம் உபயோகிக்க தொடங்கியதே வெறும் பொழுதுபோக்காக தான் ஆனால் அந்த நேரத்தில் இனையம் என்பது பொழுதுபோக்கு சாராமல் தொழில்நுட்பங்களை சார்ந்து இயங்கி கொண்டிருந்த்து ஆனால் இப்போதெல்லாம் இனையம் தொழில்நுட்பம் என்பதை விட சினிமா, கிசுகிசு, அரட்டை, காமம், இன்னும் பல இத்யாதிகள் என நீண்ட பட்டியலோடு இயங்குகிறது.

    நம் தமிழை பொருத்தவரை இனையத்தில் காமமும், சினிமாவும், பொழுதுபோக்கும் மிக பிரதானமான இடத்தை பிடித்திருக்கிறது அதற்காக உடனே கேள்வி கேட்க வேண்டாம் தமிழில் பயனுள்ள தளங்கள் இருக்கின்றனவா? நிச்சியமாய் இருக்கிறது ஆனால் என்னால் வகைப்படுத்தி தர இயலாது பலரும் பலவிதமான தேடல்கள் சார்ந்து இயங்குகின்றனர்.

    தமிழ் எப்பவுமே சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தே வந்திருக்கிறது சினிமா இல்லையென்றால் நம் மக்கள் உயிருடன் இருப்பார்களா என்று கூட நினைக்க தோன்றுகிறது நாமும் செய்தித்தாள்களில் பொதுவாக சினிமாவிற்கும், நடிகைகளின் கிசுகிசுவிற்கும் கொடுக்கும் முக்கியத்தும் நம் நாட்டின் பிராந்திய நலனோ எல்லோக்கோடு பிரச்சினைகளையோ அல்லது அண்டை நாட்டுடனா உறவின் பிரச்சினைகளை எல்லாம் படிப்பது இல்லை! நாம் பார்த்து என்ன ஆகிவிடப்போது என்பதான கேள்வி? அதனால் தான் என்னவோ தமிழக அரசியல் கூட சினிமாவை சார்ந்திருக்கிறது நாமும் அதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம், பார்த்துகொண்டிருக்கிறோம்.

    அடுத்ததாக அடல்ட் தளங்கள் முன்பெல்லாம் கூகுளில் தமிழ் என்று தொடங்கும் போது அதன் முடிவு எழுதுக்கள் வேறு விதமாக இருக்கும் இப்பொழுது அப்படியில்லை ஆனாலும் எண்ணிக்கை குறைவில்லை என்றே நினைக்கிறேன் இளம் சமுதாயம் கெட்டுபோவதற்கு இன்றையை நிலையில் அலைபேசியும், இனையமும் பெருமளவில் உதவி செய்கிறது.

    குறிப்பாக நான் இந்த பதிவு எழுத தொடங்கிய நோக்கமே சமீபத்தில் மகேஷ் என்பவரின் மனைவி பேஸ்புக்கால் வந்த வினை என்பதாக ஒரு செய்தியை படித்த போது இந்த உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பது கேள்வியாய் இருக்கிறது. காதல் என்றால் என்ன? அர்த்தம் என்ன? இப்படி நிறைய கேள்விகளை நமக்குள் எழுவதை நம்மாள் தவிர்க்க முடியவில்லை ஒரு பெண்ணிற்கு பத்து காதலர்களுடன் உறவு என்பதை பார்க்கும் போது கலச்சாராமும் பாரம்பரியமும் நிறைந்த தமிழகத்தில் தான் வாழ்கிறோமா! என் சந்தேகம் வருகிறது .

    பேஸ்புக் எனும் சமுதாய தளம் வந்த போது இந்தளவிற்கு இதன் வீரியம் இருக்குமென்று நினைக்கவில்லை மேலும் பொதுவாகவே நான் சமுதாய தளங்கள் பொழுதுபோக்கு தளங்கள் அதிகம் விரும்புவதில்லை. பேஸ்புக் தளம் வழியாக பல குடும்ப பிரச்சினைகளையும் , கள்ளக்காதலையும், அன்றாடம் செய்திகளில் பார்க்க முடிகிறது. நான் எப்பவும் சிந்திக்கும் விஷயம் இது தான் முகம் அறியாத நண்பர்களோடு எப்படி இவர்கள் தொடர்புகொண்டு வீழ்த்துகிறார்கள் தங்களை பற்றிய தகவல்களை பொதுவெளியில் வெளியிடுகிறார்கள், தங்களின் நிழற்படங்களையும் வெளியிடுகிறார்கள் ஆனால் அந்த நிழல்படத்தை யாரும் எளிதாக பயன்படுத்த முடியும் என்பதோ அல்லது அந்த புகைப்படத்தின் வழியாக ஒருவரின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் வரை நிகழக்கூடும் என்பதை கூட யோசிக்க மாட்டார்களா? ஆனால் இதில் ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால் சிலர் தெரிந்தே தங்களின் புகைப்படத்தை பொதுவெளியில் வெளியிடுகிறார்கள் ஆனால் பாவம் எத்தைனையோ நபர்களுக்கு தெரியாது அவர்களின் புகைப்படங்களும் இருக்குமென்பது சில விஷயங்களை குறிப்பிட்டு எழுதமுடியவில்லை ஆனால் கூகுலிடம் கொஞ்சம் சூசகமாக தேடினால் எல்லாம் தெரிந்துவிடும்.

    இதை படிக்கும் சிலராவது பேஸ்புக் உபயோகிப்பதை விருப்பமாக கொண்டிருக்கலாம் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் உங்கள் நண்பர்கள் கூட்டத்தில் உங்களுக்கு எத்தனை நண்பர்களை தெரியும், சரி பரவாயில்லை ஒரு பொழுதுபோக்கிற்காக பேஸ்புக் பயன்படுத்துகிறீர்கள் தாரளமாக பயன்படுத்துங்கள் ஆனால் அது உங்களை பாதிக்காதிருக்கட்டும். இனையம் என்பது பொதுவெளியாய் இருந்து போய் கொலைக்களமாக மாறிக்கொண்டு வருகிறது.

    என்ன நண்பர்களே படிச்சிங்களா இது உங்களுக்கு பிடித்திருக்க வாய்ப்பில்லை என்றே நம்புகிறேன், இப்படித்தான் முன்புஉடை குறைப்பது தான் நாகரீகமா? என்று ஒரு பதிவு எழுதினேன் முடிந்தால் படித்து பாருங்கள் அவசியம் கருத்துரைகளை படித்து பாருங்கள் உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்கள். பொதுவாக இந்த மாதிரியான விஷயங்கள் படிப்பதை சுவராஸ்யமாக இருப்பதில்லை மேலும் இது பற்றியாதான விவாதங்களை நீங்கள் விருப்பபட்டால் கருத்துரையில் விவாதிக்கலாம்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Oct 3, 2011

    11

    அயல் தேசத்து அநாதை

  • Oct 3, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: உதாரணமாய் நடப்பதே சிறந்த போதனை.

    வணக்கம் நண்பர்களே பொதுவாகவே கவிதைகளை பொருத்தவரை பத்து பக்கத்தில் எழுதி புரிய வைக்க வேண்டிய விஷயத்தை வெறும் பத்து வரிகளுக்குள் எழுதி சாட்டையில் அடித்தாற் போல புரிய வைத்துவிடும். இப்படித்தான் இந்த கவிதையும் இருக்க போகிறது ஒவ்வொரு வரியிலும் ஏக்கமும், சோகமும், விரக்தியும் ஒவ்வொரு வரிகளிலிலும் தெறிக்க போகிறது.. முகம் அறியா நண்பர் வழியாக வந்தடைந்த ’ஒரு சிறு கவிதையை’, வெளிநாட்டு நண்பர்களுடன் கிடைத்த கலந்துரையாடலாலும் அவர்களுடான பேச்சின் போதான மனநிலையையும் மனதில் உருவகபடுத்தி என் அரைகுறை கவிதை ஞானத்தோடு எழுதியதை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.

    என் மற்ற கவிதைகளை படித்து ரசித்தவர்கள், இந்த கவிதையை படித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், நடைமுறை வாழ்க்கையில் அவர்களை நேசிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள், அவர்களும் மனிதர்களே!ஆம் உணர்ச்சிகளை மாற்றி வைத்த மனிதர்கள்!.

    அயல் தேசத்து அநாதை



    இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
    வந்தவனுக்கோ சென்று விட ஆசை
    இதோ
    அயல்தேசத்து அநாதைகளின் ..
    கண்ணீர் கதை !

    விசாரிப்புகளோடும்
    எதிர்பார்ப்புகளுடனும் வருகின்ற ...
    தொலைபேசி அழைப்புகளை நினைத்து
    பரிதாபப்படத்தான் முடிகிறது !

    நாங்கள் பூசிக்கொள்ளும்
    நறுமணத்தில் வேண்டுமானால்...
    வாசனைகள் இருக்கலாம்!
    ஆனால் வாழ்க்கையில்...?
    வசந்தமில்லாமால் தான் தவிக்கிறோம்!

    தூக்கம் விற்ற காசில்தான்...
    துக்கம் அழிக்கின்றோம்!
    ஏக்கம் என்ற நிலையிலேயே...
    இளமை கழிக்கின்றோம்!

    எங்களின்
    நிலாக்கால நினைவுகளையெல்லாம்...
    ஒரு
    விமானப்பயணத்தூனூடே விற்றுவிட்டு!

    கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே
    கடல் தாண்டி வந்திருக்கிறோம் !
    மர உச்சியில் நின்று ...
    ஒரு
    தேன் கூட்டை கலைப்பவன் போல!

    அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
    எழுந்த நாட்கள் கடந்து விட்டன!
    இங்கே
    அலாரத்தின் எரிச்சல் கேட்டு
    எழும் நாட்கள் கசந்து விட்டன!

    பழகிய வீதிகள்
    பழகிய நண்பர்கள்
    கல்லூரி நாட்கள்
    தினமும்
    ஒரு இரவு நேர
    கனவுக்குள் வந்து வந்து
    காணாமல் போய்விடுகிறது!

    நண்பர்களோடு
    ஆற்றில் பிடித்த மீன்
    பம்பரம் - சீட்டு - கோலி என
    சீசன் விளையாட்டுக்கள் !

    இவைகளை
    நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
    விசாவும் பாஸ்போட்டும் வந்து...
    விழிகளை நனைத்து விடுகிறது.!

    வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த
    நண்பர்களின் திருமணத்தில் !
    மாப்பிள்ளை அலங்காரம் !
    கூடிநின்று கிண்டலடித்தல் !
    கல்யாணநேரத்து பரபரப்பு!

    பெண்வீட்டார் மதிக்கவில்லை எனக் கூறி
    வறட்டு பிடிவாதங்கள்!
    சாப்பாடு பரிமாறும் நேரம்...
    நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
    மறுவீடு சாப்பாட்டில்
    மணமகளின் ஜன்னல் பார்வை!
    இவையெதுவுமே கிடைக்காமலே போய்விட்டது...

    கண்டிப்பாய் வரவேண்டும் என்ற
    சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
    சங்கடத்தோடு-ஒரு
    தொலைபேசி வாழ்த்தூனூடே...
    தொலைந்துவிடுகிறது
    நண்பர்களின் நீ..ண்ட நட்பு!

    எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
    நாங்கள்
    அயல்தேசத்து அநாதைகள் தான்!

    காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற
    சொந்தங்களின்... நண்பர்களின் ...
    துக்கச் செய்திக்கெல்லாம்
    ஊர் நினைவுகள் மட்டும்தான்...
    ஆறுதல் தருகிறது!

    ஆம்
    இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
    ஒரு கடலைத்தாண்டிய
    கண்ணீரிலையே... கரைந்துவிடுகிறார்கள்;!
    இறுதிநாள் நம்பிக்கையில்தான்...
    இதயம் சமாதானப்படுகிறது!

    இருப்பையும் - இழப்பையும்
    கணக்கிட்டுப் பார்த்தால்
    எஞ்சி நிற்பது
    இழப்பு மட்டும்தான்...

    பெற்ற குழந்தையின்
    முதல் ஸ்பரிசம் ...
    முதல் பேச்சு...
    முதல் பார்வை...

    இவற்றின் பாக்கியத்தை
    தினாரும்-திர்ஹமும்-டாலரும்
    தந்துவிடுவதில்லை?

    கிள்ளச்சொல்லி
    குழந்தை அழும் சப்தத்தை...
    தொலைபேசியில் கேட்கிறோம்!

    கிள்ளாமலையே
    நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
    யாருக்குக் கேட்குமோ ?

    பெற்ற குழந்தையின் முகத்தை கூட
    தொலைபேசி வழியாகத்தான்
    உருவகபடுத்தி
    சிலாகித்து கொள்கிறோம்
    யாருக்கு புரியும் எங்கள் ஏக்கம்!.....

    ஒவ்வொருமுறை
    ஊருக்கு வரும்பொழுதும்...
    பெற்ற குழந்தையின்
    முதல் பார்வை...
    நெருங்கியவர்களின்
    மவுணம், திடீர்மறைவு ...

    இப்படி புதிய முகங்களின்
    எதிர்நோக்குதலையும்...
    பழையமுகங்களின்
    மறைதலையும் கண்டு...
    மீண்டும்
    அயல்தேசம் செல்லமறுத்து
    அடம்பிடிக்கும் மனசிடம்...

    குழந்தைகளின் எதிர்காலமும்...
    எதிர்கால பயமும்...
    பொருளாதாரமும் வந்து...
    சமாதானம் சொல்லி
    அனுப்பிவிடுகிறது
    மீண்டும் அயல்தேசத்திற்கு!



    இப்படிக்கு

    அயல் தேசத்து அநாதை


    என்ன நண்பர்களே படிச்சிங்களா உங்கள் நண்பர்களோ அல்லது உங்கள் உடன் பிறந்த சகோதரர்களோ இது போல வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்ககூடும் உங்களுக்கு அவர்கள் ஏக்கம் தெரியாது எதையும் நாமாக நேரிடையாக அனுபவப்படும் போது மட்டுமே அதன் வலியும் தாக்கமும் புரியும் ஆனாலும் இந்த கவிதையை படித்து முடிக்கும் போது வெளிநாட்டில் இருக்கும் உங்களின் வேண்டப்பட்டவர்களின் வலிகளையும் வேதனைகளையும் உங்களால் உணர முடியும் என்றே நம்புகிறேன்..

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Sep 29, 2011

    14

    ச்சும்மா இரண்டு கணக்கு..

  • Sep 29, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: வாழ்க்கை மேடு பள்ளம் நிறைந்தது

    வணக்கம் நண்பர்களே அதிகமான பதிவுகள் எழுதுவதற்கு போதிய நேரமின்மையும்,அயற்சியும் காரணமாய் இருக்கிறது, தொடர்ந்து தளம் வந்து சேரும் நண்பர்கள் இனைந்திருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.இனி இந்த பதிவின் வழியாக இரண்டு கணக்குகள் பார்க்கலாம் இரண்டிற்கும் சூத்திரம் ஒன்றும் வேண்டியதில்லை, இதற்கென கொஞ்சம் நேரம் செலவழித்து உங்கள் கணித திறமையை சோதித்து தான் பாருங்களேன். இந்த கணக்குகளுக்கான விடையை நான் சில தினங்கள் கழித்து வெளியிடுகிறேன் அதற்கு முன்பாக நீங்கள் விடையை கண்டுபிடித்து பின்னுட்டத்தில் தெரிவியுங்கள் இதற்காக பின்னுட்டங்களை மட்டுப்படுத்த போவதில்லை.

    முதல் கணக்கு

    உங்களிடம் ஆயிரம் ரூபாய் இருக்கிறது, அதே நேரத்தில் அந்த ஆயிரம் ரூபாயை பத்து பெட்டிகளில் போட்டு வைத்திருக்கிறீர்கள் என்பதாக நினைவில் வைக்கவும், இனி உங்களிடம் நான் ஐம்பது ரூபாய் கேட்கிறேன் என்பதாக வைத்துக்கொள்ளுங்கள், எனக்கு நீங்கள் பணம் தரும் பொழுது பெட்டிகளாக மட்டுமே தரவேண்டும், தேவைக்கு ஏற்றார்போல ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு எடுத்தெல்லாம் தரக்கூடாது.

    நான் தங்களிடம் கேட்ட ஐம்பது ரூபாயை உதாரணமாக ஒரு பெட்டியில் 10 ரூபாய், மற்றொரு பெட்டியில் 20 ரூபாய், வேறொரு பெட்டியில் 20 ரூபாய் இருந்தால் எனக்கு எளிதில் கொடுக்கலாம்.அதே நேரத்தில் ஒரு பெட்டியில் இருந்து வேறொரு பெட்டிக்கு பணம் மாற்றி எடுத்தெல்லாம் கொடுக்க கூடாது.

    இந்த மாதிரியாக நான் ஒன்று முதல் ஆயிரத்துக்குள் எவ்வளவு பணம் கேட்டாலும் பெட்டிகளாய் மட்டும் எடுத்துகொடுக்க வேண்டும்

    இனி கீழிருக்கும் பெட்டிகளை பாருங்கள் பத்து பெட்டி இருக்கிறது ஒவ்வொரு பெட்டியிலும் தலா ரூ100 இருக்கிறது ஆக மொத்தம் ஆயிரம் இருக்கிறது இது உதாரணத்துக்கு மட்டுமே.





























    Box 1Box 2Box 3Box 4Box 5Box 6Box 7Box 8Box 9Box 10
    100100100100100100100100100100




    நான் தங்களிடம் பணம் ஒன்று முதல் ஆயிரம் வரை எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம், நான் எவ்வளவு பணம் கேட்டாலும் நீங்கள் பெட்டிகளாக மட்டுமே எடுத்து தரவேண்டும், உதாரணத்திற்கு நான் முந்நூறு கேட்டால் நீங்கள் மூன்று பெட்டிகளை எடுத்து தரலாம், அதே நேரத்தில் நான் வெறும் ஒரு ரூபாய் மட்டும் கேட்டால் ஒரு ரூபாய் உள்ள ஒரு பெட்டியை மட்டுமே எடுத்து கொடுக்கலாம், இப்படியாக நான் எந்த தொகை கேட்டாலும் பெட்டிகளாக மட்டுமே தரவேண்டும்.

    நான் எவ்வளவு பணம் கேட்டாலும் தரக்கூடிய வழியில் பணம் பெட்டியில் இருக்கவேண்டும் என்றால் ஒவ்வொரு பெட்டியிலும் எவ்வளவு பணம் போடு வைப்பீர்கள்.விடையை கண்டுபிடித்து பின்னுட்டத்தில் தெரிவியுங்கள்.

    இரண்டாவது கணக்கு

    நீங்கள் ஒரு வியாபாரி தங்களிடம் மொத்தம் நான்கு எடைக்கற்கள் இருக்கிறது அதன் மொத்த எடை 40 கிலோ மட்டுமே இந்த நான்கு எடைக்கற்களும் எந்த எடையில் வேண்டுமானாலும் இருக்காலம் ஆனால் 40 கிலோவிற்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும்.

    நான் உதாரணத்திற்கு நான்கு எடைக்கற்களின் எடை கொடுத்திருக்கிறேன் இதே போல நீங்கள் விரும்பும் வைகையில் எடைக்கற்களின் எடையை வைத்துக்கொள்ளலாம்.



















    Weight KgWeight KgWeight KgWeight Kg
    5101213




    இனி கணக்கிற்கான கேள்விக்குள் வருகிறேன் உங்களிடம் வரும் வாடிக்கையாளர் 1 கிலோ முதல் 40 கிலோ வரையிலான பொருள்களை வாங்க வரலாம், உதாரணாமாக நான் தங்களிடம் வந்து 27 கிலோ அளவில் அரிசி கேட்கிறேன் என்பதாக வைத்துக்கொள்ளுங்கள், தங்களிடம் முறையே 5 கிலோ, 10 கிலோ, 12 கிலோ எடைக்கற்கள் இருந்தால் எனக்கான 27 கிலோ எடைகான பொருளை கொடுத்து விட முடியும்.

    ஒரு வேளை நான் தஙகளிடம் வெறும் 1 கிலோ அளவிளான பொருளை கேட்டால் உங்களிம் இருக்கும் 12 கிலோ, 13 கிலோ எடைக்கற்களை ஒரு பக்கத்தில் 13 கிலோ எடைக்கல்லையும் மற்றொரு பக்கத்தில் 12 கிலோ எடைக்கல்லையும் வைத்து , 12 கிலோ எடைக்கல் இருக்கும் பகுதியில் எனக்கான 1 கிலோ அளவிலான பொருளை எடை போட்டு கொடுத்து விட முடியும்.

    இனி இரண்டாவது கணக்கிற்கான கேள்வி நான் உங்களிடம் 1 கிலோ முதல் 40 கிலோ வரையிலான எந்த எடையில் பொருள் கேட்டாலும் தங்களால் கொடுக்க முடியவேண்டும், அப்படியானால் உங்களிடம் எந்த எடையில் எடைக் கற்கள் இருந்தால் கொடுக்க முடியும்? நான்கு எடைக்கற்கள் எந்த எடையில் இருக்க வேண்டும்.

    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Jul 7, 2011

    20

    வடக்கு மேற்கு பக்கம் தலை வைத்தால் மந்தபுத்தி (அறிவியல் உண்மை)

  • Jul 7, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: எப்படி பாரட்டுவதென்று தெரியாமல் அறியாத விஷயத்தை குறை சொல்லாதீர்கள்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் எத்தனையோ நண்பர்கள், பெரியோர்கள் இதனை பற்றி தெரியாமல் இருக்க கூடும் ஆனால் நம் வீட்டு பெரியோர்கள் சொல்வார்கள் டேய் வடக்கு பக்கம் தலை வைக்காதடா.. ஏன் என கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்ல தெரியாது ஆனால் அவர்கள் சொல்வதில் விஞ்ஞானம் இருக்கிறது அந்த விஞ்ஞான அறிவியல் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    நமக்கு எல்லோருக்கும் தெரியும் நம் பூமியே சுற்றிலும் ஒரு காந்த படுகை இருக்கிறது நமது கிரகங்களும் (Planet) காந்த முனைவுகளை கொண்டுள்ளது நம் கிரகங்கள் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதியை நோக்கி காந்த துருவம் அமைந்திருக்கிறது இதை சாதரணமாக நம்மிடம் இருக்கும் திசை காட்டும் கருவியில் (Compass) பார்த்தாலே தெரியும். திசை காட்டும் கருவியின் மேல்முனை எப்போதும் வடக்கு நோக்கி இருக்கும் எதிர் முனை தெற்கு பகுதியை நோக்கியே இருக்கும் இந்த காந்த சக்தியை முன்பே விஞ்ஞானம் வளராத காலத்திலேயே நம் முன்னொர்கள் வடக்கு பக்கம் தலை வைக்காதே என்று சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் தெற்கு கிழக்கு பகுதிகளில் சரி சமமான ஈர்ப்பு சக்தி இருக்கிறது அதனால் நாம் தூங்கி எழும் போது சுறுசுறுப்பாகவும் மனது ரிலாக்ஸாகவும் உடல் நலக்குறைவு இல்லாமால் எழுந்திருக்க முடியும்.

    நமது கிரகங்கள் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுற்றி வருகிறது மேலும் சூரியனின் காந்த துருவம் கிழக்கில் இருந்து பூமிக்குள் வருகிறது இதன் அழுத்தம் நம் தலை வழியாக வெளியேற பார்க்கும் போது அதிகபடியான வெப்பம் எதிர் நோக்கி எழும்பும் போது நம் தலையில் ஒரு வித ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு நோய்வாய் ஏற்படும் நிலையும் வருகிறது. இதன் அடிப்படையிலேயே தான் வீட்டின் முகப்பு கூட வைக்கப்படுகிறது இது நம் இந்தியாவில் இதை கடைபிடிக்கிறார்கள் வேறு இடங்களில் குறைவாகவே இருக்கிறது.

    மேலும் இது பற்றிய ஆராய்ச்சியில் வடக்கு மற்றும் மேற்கு பக்கம் தலை வைத்து படுப்பதால் நோய்கள் அதிகமாகவும் உடம்பில் சோர்வுத்தன்மையும் மூளையை மந்த புத்தி ஆக்குவதாகவும் சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் இரவு உணவு எப்போதும் கஞ்சனை போல சாப்பிட வேண்டும் அதாவது மதிய உணவு உண்பது போல உண்ணக்கூடாது உறங்கும் போது கிழக்கு பக்கம் தலை வைத்து மேற்கு பக்கம் கால் நீட்டவும் அல்லது தெற்கு பகுதியில் தலை வைத்து வடக்கு பக்கம் கால் நீட்டவும். இதற்கு எதிர்மறையான நிலையில் உறங்குபவர்கள் எப்பொழுதும் எரிச்சலும் சோம்பேறித்தனமும், தன்னம்பிக்கையும் இழந்து காணப்படுவார்களாம்.

    சரி என்ன பெரிய தூக்கம் தூங்கின பின் நமக்கு என்ன தெரியபோகுது? எப்படி தூங்குனா தான் என்ன என கேள்வி கேட்பவர்களுக்கு உங்கள் இரவு தூக்கம் சரியில்லை என்றால் அன்றைய தினம் விடிந்ததும் உங்களால் அசூசையான நிலையை உணரமுடியும் பின்ன என்ன எடுத்ததுக்கெல்லாம் எரிச்சல் வரும் வீட்டில் சண்டை வரும் அதோடு அலுவகம் சென்றால் அங்கு சொல்லவே வேண்டாம் உங்கள் தூக்கம் தான் பிரச்சினைகளை விடுபட வைக்கும் சரியான தூக்கமின்மையும் மேலும் சில வியாதிகளை பரிசாக தரும் சரியான நேரத்தில் தூங்கி எழுபவரின் மூளைக்கும் மன உளைசல் அல்லது இன்ன பிற காரணங்களால் தூங்காதவர்களின் மூளையும் EGG (ELECTRICAL ACTIVITY IN THE BRAIN) என்கிற பரிசோதனையில் அதிகம் வித்யாசம் வருவதாக சொல்கிறார்கள்.

    நாம் சரியாக தூங்காத போது நம் உடலின் தசைகளும் ரிலாக்ஸாக ஆவதில்லையாம் மாறாக முறுக்கு கூடி அதனாலே முதுகு வலி, கை கால் வலி வரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவம் சொல்கிறது அதே போலவே தூங்குவதும் எழுந்திருப்பதும் ஒரு சரியான நேரத்தை வழமையாக்கி கொள்வது நல்லது அதனால் உடல் சரியான இயக்கதில் இருக்கவும் செய்யும்.

    வடக்கு மேற்கு பக்கம் தலை வைத்து படுத்தால் மந்த புத்தி சுகவீணம், தன்னம்பிக்கை குறைவு வரும்.

    தெற்கு கிழக்கு தலை வைத்து படுப்பதால் காந்த சக்தியால் நமக்கு இழப்பு ஏற்படுவதில்லை தேவையில்லாதா அசூசகமான நிலை வருவதில்லை.


    ஓவ்வொரு நபருக்கும் தூக்கத்திற்கான அளவுகள் இருக்கிறது.

    குழந்தைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்க வேண்டும்

    இளைஞர்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வேண்டும்

    வயது வந்தவர்கள் 7 முதல் 8 மணி வரை தூங்க வேண்டும்.

    கர்ப்பமான பெண்கள் வழமையாக தூங்கும் நேரத்தை விட மேலும் சில மணி நேரங்கள் உறங்குவது நல்லது.


    நண்பர்களே ஒரு அன்பான வேண்டுகோள் இதற்கு பெயரும் காதலாமே! பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிரவும்.

    மேலும் தகவல்களுக்கு wikipedia

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    May 24, 2011

    20

    பணம் பத்தும் செய்யுமாமே!

  • May 24, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: பணத்தை விட நாம் நேசிக்க உலகில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.

    வணக்கம் நண்பர்களே ஐந்து மாத இடைவெளிக்கு பின்னர் இன்று எழுதியிருக்கிறேன் சரி நண்பர்களே இனி நம் பதிவிற்குள் செல்லும் முன் உங்கள் அனைவரின் நலமும் அறிய விழைகிறேன்.

    பணம் என்பதை பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இந்த பணம் தனக்கென ஒரு இடத்தை நமக்கே தெரியாமல் ஆக்ரமித்துகொண்டிருக்கிறது, சில நேரம் நாமே இது போன்ற சிக்கல்களில் வழிய சென்று மாட்டிக்கொள்வதும் உண்டு, சில நேரம் விலகிச்சென்றாலும் விக்ரமாதித்தன் போல நம்மை துரத்தவும் செய்யும் பணம்.

    இந்த உலகத்தில் எல்லாவற்றிற்கும் பணம் தேவையாய் இருக்கிறது அன்றாட தேவைகள் முதல் அத்யாவசிய தேவைகள், ஆடம்பர தேவைகள் வரை பணத்தை சுற்றியே எல்லாமும் நடக்கிறது யோசித்து பாருங்கள் ஒரு வேளை சாப்பிட வேண்டும் என்றாலும், சிறுநீர் கழிப்பதென்றாலும் கூட பணம் தேவைப்படுகிறது இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா நமக்கு தேவையான உணவுக்கும் பணம் தேவைப்படுகிறது, நம் உடலுக்கு தேவையில்லை என நினைத்து வெளியேற்றும் சிறுநீருக்கும் பணம் தேவைப்படுகிறது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் பணம் தான் இந்த உலகத்தை ஆள்கிறது.

    உலகில் முதன் முதலாய் இந்த பண்டமாற்று முறை வந்த போது யாருமே சிந்தித்து இருக்க மாட்டார்கள் பின்னாளில் வெள்ளைத்தாளில் அச்சிடப்பட்ட ஒரு காகிதம் வரும் அது தான் உலகத்தை மாற்றப்போகிறது என்பதை என்ன அதிசியம் இன்று பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்கிற நம்பிக்கை நமக்குள்ளும் இருக்கிறது தானே.

    நம்மிடம் கொஞ்சம் பேச்சு திறமையும் பணமும் இருந்துவிட்டால் நமக்குள் கானல் நீராய் நம்பிக்கை வருவது இயல்பு தானே! இப்படி நாம் பணத்தை மட்டுமே நம்பி பணத்திற்காகவே வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் ஆனால் இதையெல்லாம் வெறுக்கின்ற மனிதர்கள் எங்கோ ஒருபக்கம் ஞானிகளாக வாழ்ந்துகொண்டு தானே இருக்கிறார்கள்.

    பொதுவாக பேச்சு வழக்கில் சொல்வார்கள் ”பணம் பத்தும் செய்யும்” என்று எங்கே உங்களில் யாராவது பணம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என உறுதியாக சொல்ல முடியுமா நிச்சியமாய் முடியாது பணத்தை விட உலகில் உன்னதமான விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது அன்பு, காதல், விட்டுகொடுத்தல், இப்படி அடுக்கடுக்காய் சொல்லிக்கொண்டே போகலாம்.

    பசிக்கும் போது நம்மிடம் இருக்கும் பணத்தை தின்று நம் பசியை தீர்க்க முடியுமா?

    நோய்வாய் பட்டிருக்கும் ஒருவரிடம் அன்பை காட்டாமல் வெறும் பணத்தை பாதுகாவலனாய் வைக்க முடியுமா?

    விண்ணில் ராக்கெட் விடலாம், செயற்கைகோள் நிறுவலாம் ஆனால் இறந்த ஒருவரின் உயிரை வாங்க முடியுமா?

    முலைப்பாலுக்கு அழும் குழந்தையின் பசியை நம்மிடம் இருக்கும் பணம் தீர்த்து விடுமா?


    இங்கு நான் பணம் தேவையில்லை என்கிற விவாதத்துக்கு வரவில்லை ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை தான் சொல்ல விரும்புகிறேன். இந்த பணத்திற்கு ஒரு விஷேச குணம் இருக்கிறது ஒரு முறை பணத்தை விரும்ப தொடங்கிவிட்டால் அதன் பின்னால் அதன் மீது காதல் என்பதை விட பணத்தின் மீதான வெறி அதிகமாக இருக்கும். இதற்கு இன்னொரு குணமும் உண்டு அதாவது இருப்பவரிடம் மேலும் மேலும் சேரும் இல்லாதவனுக்கு அவன் விரும்பும் போது கைக்கு வருவதில்லை இந்த இடத்தில் நீங்கள் நினைக்கலாம் உழைத்தால் முடியும் என்கிற முட்டாள்தனமான வாசகத்தில் எனக்கு நம்பிக்கையில்லை உங்களுக்கு தெரிந்த எத்தனையோ நபர்கள் கடுமையான உழைப்பாளியாக இருப்பார்கள் அவர்களின் வாழ்க்கை தரம் என்னவோ மோசமானதாக இருக்கும்.

    பணம் உள்ளவனிடம் பணம் சேரும் என்பார்கள் அது எப்படி என பார்த்தால் உங்களேயே இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள் உங்களிடம் தேவைக்கு மேல் பணம் இருந்தால் நீங்கள் நினைப்பது போல ஒரு தொழிலை தொடங்கலாம், வெற்றியும் பெறலாம் மேலும் சம்பாதிக்கலாம் ஒருவேளை உங்கள் கணக்கு தவறானல் மீதம் இருப்பதை வைத்து நீங்கள் வாழ்ந்து விடுவீர்கள் அதே நேரத்தில் தங்களிம் குறைவான பணம் மட்டும் இருக்கிறது என்றால் உங்களால் தைரியமாக ஒரு தொழிலை தொடங்கமுடியமா? அப்படியே உங்களிடம் திறமை இருந்தாலும், உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தாலும் பயமே அதிகம் இருக்கும் இதை இழந்தால் என்ன செய்வது இந்த விஷயத்தில் தான் பணம் பணத்தோடு சேர்கிறது.

    பெரிய கோடீஸ்வரர்களாக இருப்பவர்களின் வாழ்க்கையை பாருங்கள் புரியும் அவர்களிடம் இருக்கும் பணம் வெறும் கணக்குக்கு மட்டுமே இருக்கும் அத்தனையும் அவர்களுக்கு உபயோகபடுமா என்றால் பதில் கேள்விக்குறியாக தான் இருக்கும். ஒரு நிலைக்கு மேல் இருக்கும் எல்லாம் வெறும் பொருளாக மட்டுமே இருக்கும் அதனால் பயன் இருக்காது இதைத்தான் முனோர்கள் சொன்னார்கள் “ அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதாக.

    எழுத்தில் நிறைய தடுமாற்றம் இருக்கும் ஒருவேளை சொல்ல வந்த விஷயம் கோர்வையாக இல்லாமல் கூட இருக்கலாம் மன்னிக்கவும் செரிவான எழுத்திற்கு மன அமைதியும் அவசியமாகிறது.நேரம் கிடைத்தால் படித்து பாருங்கள் எதிர் காலத்தில் பணம் எப்படி இருக்கும்


    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Dec 30, 2010

    27

    புது வருட வாழ்த்துகள்-2011

  • Dec 30, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: வேலை செய்யாமல் அதிர்ஷ்டமில்லை என புலம்புவதில் பலனில்லை.

    வணக்கம் நண்பர்களே புதிய வருடம் பிறக்க போகிறது இந்த நேரத்தில் நமது வலைத்தளம் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துகளை தங்களுக்கு தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வருடம் உங்களுக்கு சகல செல்வத்தையும் மன அமைதியையும் தரட்டும், எப்பொழுதும் சிந்தித்து செயல்படும் திறன் கிடைக்கட்டும், உங்கள் குடும்பத்தாருடனும் நட்புகளுடனும் நெருங்கிய பந்தம் நிலைக்கட்டும்.

    புது வருடம்-2011



    பூத்தது புது வருடம்
    பூத்து குழுங்கட்டும் புது வசந்தம்

    நடந்து முடிந்தது முடிந்தது - இனி
    நடப்பவை நல்லபடியாக நடக்கட்டும்.

    எதிர்காலத்தை திட்டமிடுவோம்
    எண்ணங்களை வசப்படுத்துவோம்

    கடந்த வருடம்- நம்
    கஷ்டங்களை கொண்டு போகட்டும்

    புது வருடம் – பல
    புதுமைகள் காண உதவட்டும்

    நினைவுகளாய் இருக்கும் கனவுகள்
    நிஜமாய் மாறட்டும்

    இன்னொரு ஜென்மம் உண்டென்றால்
    இந்த சொந்தங்கள் தொடரட்டும்

    நம் வீட்டு சொந்தங்கள்
    நலம் வாழ நாளும் பிராத்திப்போம்


    இனையம் என்பது கண்ணுக்கு தெரியாத உயிர்கொல்லி கவனமாயிருங்கள் நயவஞ்சகர்கள் நாகரீகமாக பேசி உங்கள் தலை எழுத்தை மாற்றிவிடுவார்கள், இனைய வழியிலான நட்பு என்றால் கொஞ்சம் கவணமாக இருங்கள் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காரணம் இங்கு இருவருக்குமே முக மூடி உண்டு.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Sep 3, 2010

    24

    உடை குறைப்பது தான் நாகரீகமா?

  • Sep 3, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: அளவோடு பேசுங்கள் அதையும் ஆழ்ந்து யோசித்து பேசுங்கள்.

    இப்போதெல்லாம் அடிக்கடி யோசிப்பது நாம் எந்த காலக்கட்டத்தில் இருக்கிறோம் எனபதை பற்றித்தான், மனிதன் தோன்றிய காலத்தில் நிர்வாணமாகத்தான் இருந்தான் பின்னர் அவனாகவே நாகரீகம் எனும் பாதையில் சுயமாக மாறத்தொடங்கினான் வெற்றுடம்புடன் திரிந்த மனிதன் தன் அந்தரங்களை மறைக்க இலை தழைகளை கொண்டு மறைக்க ஆரம்பித்தான் அந்தரங்கள் மறைக்கப்படாமல் வெளிவருவதை அன்றே விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. பொதுவாகவே ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலியல் அமைப்பு வெவ்வேறாக இருந்தாலும் பெண் என்கிற விஷயத்தில் ஆண் விருப்பம் கொண்டுள்ளான் என்பது இயற்கையாகவே இருக்கிறது அது நமக்கும் தெரியும்.

    முன்பெல்லாம் நம் முன்னோர்கள் எப்படி இருந்தார்கள் என பார்த்தோமேயானால் ஆண்கள் கோவணமும், வேட்டியுமாக இருந்திருக்கின்றனர், பெண்கள் பதினாறு முழம் சேலை கட்டியிருந்திருக்கிறார்கள் இந்த காலகட்டத்தில் இருவருமே மேலாடை அணிந்திருக்கவில்லை பின்னர் மீண்டும் ஒரு நாகரீகத்தின் வளர்ச்சியில் மேலாடையும் போடத்தொடங்கினர் பின்னர் நாகரீக வளர்ச்சியில் வீடு வாகனம் இன்னும் பல இத்யாதிகள் எல்லாம் மாறின, இப்படி போய்க்கொண்டிருந்த நாகரீக மாற்றத்தில் மீண்டும் சைக்கிளிங் போல பழைய விஷங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினோம்.

    இயற்கைக்கு இசைவாய் வாழ்கிறோம் என்கிற பெயரில் வீடுகள் இயற்கையை ஒத்ததாக அமைத்தனர் மீண்டும் பழைய ஒரு நிலைக்கு செல்ல விரும்பினர் இது வரவேற்கபட வேண்டிய ஒன்றுதான் ஆனால் இதில் ஒரு வில்லங்கமான விஷயத்தையும் சேர்த்துகொள்ள வேண்டிய அவசியமில்லையே என்கிற ஆதங்கத்தை தவிர்க்க முடியவில்லை, உடை நாகரீகம் இதில் பழைய நிலைக்கு நேரடியாக செல்லவிட்டாலும் மறைமுகமாக அந்த நிலைக்கு சென்று விடுவோமோ என்கிற அச்சம் வருகிறது.

    பொதுவாகவே ஆண்களுக்கு அதிக உடை விஷயங்கள் இல்லை வேஷ்டி, பேண்ட், கைலி, சட்டை என ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்கிவிடலாம் ஆனால் பெண்களை பொருத்தவரை எத்தனை உடைகள் எத்தனை நாகரீங்கள் இன்னும் ஏன் இப்போதெல்லாம் பெண்களும் ஆண்கள் அணியும் பேண்ட் டீசர்ட் என அணிய தொடங்கிவிட்டார்கள், சரி அணிந்தால் என்ன இதில் என்ன தவறு இருக்கிறது? சரி ஆண்கள் வெறும் வேஷ்டியோடு இருந்தாலும் அது மற்றவர்களை அதிகம் பாதிப்பதில்லை இன்னும் நேரடியாக சொல்லப்போனால் காமத்தை தோற்றுவிப்பதில்லை ஆனால் பெண்கள் அப்படியில்லையே அவர்களின் சிறு கவனக்குறைவான உடையலங்காராம் கூட பார்ப்பவர்களை முகம் சுழிக்க செய்துவிடுமே அதோடு ஒரு தவறான கண்ணோட்டத்தையும் உருவாக்கும் என்பது தெரியாதா?

    முன்பெல்லாம் பெண்கள் சுடிதார் அணிந்தார்கள் அதோடு சால்வையும் போர்த்திகொண்டார்கள் அப்போது நிச்சியமாக அது நல்ல உடையாகத்தான் இருந்தது ஆனால் அதே சுடிதார் இப்போது வேறொரு வடிவம் பெற்று இருக்கிறது இப்போது உள்ள சுடிதார் எப்படியிருக்கும் என்பதற்கு படம் இனைக்க விரும்பவில்லை காரணம் உங்களுக்கே தெரியும் உடல் அவையங்களை அச்சு பிசகாமல் அளவெடுத்து காண்பிக்கும் உடைதான் நாகரீகமா? முன்பெல்லாம் உடல் அவயங்களை மறைக்கதானே ஆடை அணிந்தோம் ஆனால் இப்போது எடுத்துக்காட்டும் வகையில் ஆடை தேவைதானா? மேலும் இருக்கமான டீசர்ட் மற்றும் பேண்ட் இதை பற்றியும் அதிகம் சொல்லவோ அதற்காக போட்டோவோ இனைக்கவேண்டியதில்லை எல்லாமே உங்களுக்கு தெரியும் ஆனாலும் மாறுவதில்லை யாருக்காக இந்த ஆடை அலங்கரிப்பு?

    சமீபத்திய ஆராய்ச்சியில் பெண்கள் தான் ஆண்களின் தவறான கண்ணோட்டத்துக்கு வித்திடுவதாக வெளியிட்டு இருந்தார்கள் உடனே கோபப்படவேண்டாம் ஆராய்ச்சிக்காக பங்கெடுத்தவர்கள் எல்லோருமே பெண்கள்தான், மேலும் இப்போதெல்லம் நாம் நம்முடைய தனிமையை இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ரோட்டில் நடந்து சென்றாலும் நம்மையும் அறியாமல் மொபைல் போனில் உள்ள கேமரா கொண்டு படம் எடுத்து விடுகிறார்கள் நாம் நினைப்போம் நம்மை யார் போட்டோ எடுக்க போகிறார்கள் என நினைத்தால் நாம்தான் ஏமாந்துகொண்டிருக்கிறோம் இப்போதெல்லாம் மார்பிங் வழியாக போட்டோவையே மாற்றிவிடுகிறார்கள் இதனால் எவ்வளவு பாதிப்பு? இருந்தாலும் சர்வ சாதரணமாக பேஸ்புக் மற்றும் ஆர்குட்டில் எந்த தயக்கமும் இல்லாமல் போட்டோவை வெளியிடுவது ஆச்சரியமளிக்கிறது சரி அவர்கள் என்ன படிக்காதவர்களா என்றால் நன்கு படித்தவர்க்ள் இதன் விளைவுகளை யோசிக்கமாட்டர்களா? கொஞ்சம் பொறுமையாய் கூகுளில் தேடிப்பார்த்தால் நம் போட்டோ கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

    பழைய காலத்து பெண்கள் போல முழுவதும் மூடி சுற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் சேலையாவது அணியலாமே, சுடிதார் அணியும்போது கொஞ்சம் இறுக்கமில்லாமல் அணிந்தால் உங்கள் உடலை அப்படியே எடுத்துக்காட்டாதே? உடலை மறைக்க தானே உடை? நீங்கள் அழகாக சேலை உடுத்தி சென்று பாருங்கள் உங்களை பார்ப்பவரின் கண்ணோட்டம் நல்லவிதமாகவே இருக்கும் அதே வேளையில் கொஞ்சம் நாகரீகம் என்கிற பெயரில் மேலே சொன்ன உடைகளை அணிந்து செல்லுங்கள் உங்களை பார்ப்பவர்களின் கண்களில் வித்யாசம் தெரிவதை உங்களால் உணரமுடியும்.

    நிர்வாணம் என்பது கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை ஆனால் அரைகுறை ஆடைகள் ஆபாசத்தை தோற்றிவிக்கிறது என்றால் நிச்சியம் மிகையில்லை. நாம் ஆடை அணிவது உடலை மறைக்கவும் கொஞ்சம் அழகுக்காவும் தானே! அதே ஆடையே நமக்கு பாதுகாப்பில்லாத நம்மை சமுதாயத்தில் தவறாய் பிரதிபலிக்க கூடிய நாகரீகம் எனும் பெயரில் உடுத்தும் ஆடை நமக்கு தேவைதானா? வெளிநாட்டினர் நம்மை வியந்து பார்த்த்தில் நம் ஆடைக்கும் பங்கு உண்டுதானே இப்போதும் வெளிநாட்டு பெண்கள் நம் இந்தியாவில் சேலை உடுத்துவதை பார்த்திருப்பீர்கள் தானே. வெளிநாட்டினர் எப்படியெல்லாம் உடை உடுத்துகிறார்கள் என கேள்வி வேண்டாம் அவர்களின் கலாச்சாரமும் சூழ்நிலையும் வேறு ஆனால் நமக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறதே, குறைந்தபட்சம் நம் கலாச்சார காவலர்களாக இல்லாவிட்டாலும் மனதில் தவறான சிந்தையை விதைக்க நம் உடை ஒரு காரணமாய் இருக்கவேண்டாமே.

    பெற்றோர்களின் கவணத்திற்கு இப்போது நமது உணவு முறை மாற்றத்தினால் நமது குழந்தைகள் சீக்கிரமே பெரியவர்களாகி விடுகின்றனர் அதிலும் பெண் குழந்தைகள் பத்து முதல் பதிநான்கு வயதுக்குள் பெரிய பெண்களாகி விடுகின்றனர் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் உருவத்தில் பெரியவர்களாக இருக்கின்றனர் சில இடங்களில் பார்த்திருக்கிறேன் குழந்தைகள் தானே என்று சிலவிதமான உடைகளை அணிவித்து விடுகிறார்கள் பெற்றோர்களை முதலில் புரிந்துகொள்ளுங்கள் உங்கள் குழந்தையின் மீது உங்களுக்குள்ள கண்ணோட்டமும் மற்றவர்களின் கண்ணோட்டமும் ஒரே மாதிரியாய் இருக்காது அன்றாடம் செய்திகளில் பார்க்கத்தானே செய்கிறோம் குழந்தைகளும் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

    மேலும் நம் குழந்தைகளுக்கு நாம் ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் உங்களுக்கு தெரியும்தானே உங்கள் குழந்தைகளை பொருத்தவரை நீங்கள் தான் முதலில் ஹீரோ உங்களிடமிருந்துதான் குழந்தைகள் நல்ல விஷயங்களையும் கெட்ட விஷய்ங்களையும் கற்றுக்கொள்கின்றனர்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Aug 1, 2010

    10

    ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு

  • Aug 1, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: எல்லோவற்றையும் பார்க்கும் கண்கள் தன்னைப் பார்த்து கொள்வதில்லை

    பெண்களுக்கு எதிரானவனோ அல்லது பெண்ணுரிமை பேசுபவர்களுக்கு எதிராணவனோ இல்லை, காரணம் எனது பார்வையில் பெண்கள் பெருமையாகவே மதிக்கப்படுகிறார்கள் என்பதே பெண்கள் மதிக்கபடுவதையே ஆண்களும் விரும்புகின்றனர்

    ஆதிகாலம் தொட்டே பெண்ணிற்க்கு மரியாதையும் மதிப்பும் இருந்துகொண்டேதான் இருக்கிறது அந்த காலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதிருந்தால் நமக்கு வீரப்பெண்மனி ஜான்சி ராணியோ அல்லது வேலு நாச்சியாரோ கிடைத்திருப்பார்களா இல்லை அன்னை தெரசா தான் கிடைத்திருப்பாரா?

    ஒரு ஆண் ஒரு பெண்ணை மிகவும் மதிப்போடு தான் பார்க்கிறான், நீங்க சொல்லலாம் பேருந்தில் தொடங்கி அலுவலகம் வரை தொல்லை, இருக்காதான் செய்கிறது அவை எல்லாம் வக்கிரம் கொண்ட ஆண் சமூகம் தானே இப்படி செய்கிறது சரி நானும் உங்கள் கருத்திற்கு உடன்படுகிறேன் யாரோ ஒரிருவர் தவறு செய்வதால் மொத்த ஆண்களையும் குற்றம் சொல்வதா ஆண் என்பதால் பெற்ற தகப்பனை வெறுத்து விடுகிறோமா என்ன?

    சரி எத்தனையோ இடங்களில் ஆண்களும் பெண்களால் பாதிக்கபட்டுகொண்டுதான் இருக்கின்றனர் என்ன வெளியில் சொல்வதில்லை எவ்வளவு அடிச்சாலும் தாங்கிகிட்டு ரொம்ப நல்லவன் மாதிரி இருப்பான் என்ன கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைனு சொல்லிகிட்டு போவான் அது தான் அவனோட தன்னம்பிக்கை எந்த பிரச்சினையானளும் அதை சமூகம் அறிந்துவிடக்கூடாது என நினைத்து பிரச்சினைகளை மறந்து விடுவான் அல்லது மறைத்து விடுவான் ஆனால் பெண்கள் அப்படியில்லை சின்ன பிரச்சினை என்றாலும் மற்றவர்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் தேடத்தான் செய்கிறார்கள் ஒருவிதத்தில் பெண்களின் கண்ணீர்தான் அவர்களின் மிகப்பெரிய ஆயுதமும் அதே நேரத்தில் பலவீணமும் என்ன சரிதானே?

    பெண்களின் மேல் அதிக அன்பும் போற்றுதலும் வைத்திருக்கிறான் என்பதை நான் இப்படித்தான் எடுத்துகொள்கிறேன் பெண்ணின் ஒவ்வொரு வளர்ச்சியையும் மாற்றத்தையும் கொண்டாடிக்கொண்டே தான் இருக்கிறான் ஒரு பெண் பருவ மாற்றம் அடைந்து பூப்படைந்துவிட்டால் அதை விழாவாக கொண்டாடுகிறார்கள் அடுத்து திருமணம் முடிந்து ஒரு வாரிசை சுமக்க ஆரம்பிதவுடன் எத்தனை சடங்ககள் சம்பிராதாயங்கள் செய்கின்றான் பெண் தாயாகும் போது அதை இந்த உலகம் எத்தனை சந்தோஷமாக கொண்டாடுகிறது யாராவது அதை வெறுக்கிறார்களா என்ன?

    ஆண்கள் பெண்களை வெரும் அழகுப்பொருள்களாக மட்டுமே பார்க்கின்றனர் இருக்கலாம் ஆண்கள் அழகு என்பதை ஆராதிக்கதானே செய்கின்றனர் உங்கள் அழகை ஆராதிப்பது உங்களுக்கு பெருமைதானே உங்கள் அழகை மெருகூட்டதானே வித விதமான ஆடைகள் சிகையலங்காரங்கள் ஆபரணங்கள் இப்படி எல்லாமே சரி நீங்களே சொல்லுங்க ஒரு பெண்ணுக்கு எது அழகு? 10,000ரூபாய் பட்டுச்சேலையும் 10பவன் நெக்லஸ் போட்டால் பெண்களுக்கு அழகு வந்துவிடுமா, இல்லை நாகரீகம் என்கிற பெயரில் அரைகுறை ஆடையும் டிஸ்கோ பப்பு என இருந்தால் அது அழகா ஒரு பெண்ணுக்கு மாங்கலயம் என்பது எவ்வளவு அழகு தெரியுமா 10பவன் நகையில இல்லாத அழகு ஒரு ஆண் கட்டும் மஞ்சல் கயிறில் இருக்கிறது தெரியுமா? அது உங்களை கட்டுபடுத்துவதற்கு அல்ல அப்பொழுதும் உங்களை போற்றவை காக்கவே ஒரு தாலி கயிரு கழுத்தில் கிடந்தா ரோட்டுல போறவங்க பார்த்தாலும் அடுத்த நிமிஷமே தாலி கண்ணில் பட்டதுமே அவனையறியாமல் அவன் தலை குணியும் அந்த தாலி உங்களுக்கு பெருமைதானே? அது உங்களை காக்கும் வேலிதானே இப்பெல்லாம் பெண்கள் தாலியை மறைத்துகொள்கிறார்கள் அதுதான் நாகரீகத்தின் உச்சமா என்ன தாலிதான் உங்களுக்கு பிரச்சினை என்றால் ஏன் திருமணம் செய்துகொள்கிறீர்கள் தவிர்த்து விடலாமே?

    சரி உடை விஷயத்தில் தான் எவ்வளவு மாற்றங்கள் ஒரு பெண்ணுக்கு சேலையில் இல்லாத அழகா அரைகுறை ஆடையில் இருக்கிறது ஒரு பெண்ணின் குணத்தை அவளின் உடையும் வெளிப்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியாதா எது நாகரீகம்? நாகரீகம் பிறந்த காலத்தில உடை இல்லாத போது துணிகளுக்கு பதிலாக இலைகளை கட்டிகொண்டு நடந்தனரே பின்னர் படிப்படியார் ஆடை தரித்து தங்கள் உடலை மறைத்துகொண்டனரே அப்படி வளர்ந்த நாகரீகம் மீண்டும் உள்ள ஆடைகளை குறைப்பது தான் நாகரீகமா என்ன உங்களின் உடைகளே கொண்டு இந்த சமுதாயம் மதிப்பிடும் என்பது தெரியாதா ஆள் பாதி ஆடை பாதி என்பதன் அர்த்தம் படித்த நல்ல பதவியில் உள்ள பெண்களுக்கு கூடவா தெரியாது இல்லை நாகரீகம் கண்னை மறைத்து விட்டதா. சிலர் நாகரீகம் எனும் பெயரில் அரைகுறை ஆடை இட்டு காண்பவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கை வைக்கிறார்கள் சரி நீங்களே சொல்லுங்க அழகா சேலை உடுத்தி மங்களகரமாய் இருப்பது அழகா இல்லை அரைகுறை ஆடையுடன் பார்ப்பவரின் உணர்ச்சிகளை தூண்டுவது அழகா?

    அந்த காலத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விவாகரத்து என்பது அதிகம் கேட்க்கப்படாத வார்த்தையாகவே இருந்த்து இப்பொழுதெல்லாம் திருமணம் முடிந்த ஒரு நாளிலே பெண்களும் ஆண்களும்தான் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றம் செல்கிறார்கள் நாம் இதை கொஞ்சமாவது நினைத்து பார்க்கிறோமா பெற்ற தாய் தந்தையரின் நிலைமையை சரி அவர்க்ள் வயதானவர்கள் நாம் பெற்ற குழந்தைகள் வளரும் பிள்ளைகள் அவர்கள் எதிர்காலத்தையாவது சிந்திக்கின்றோமா என்றால் அதுவும் இல்லை சரி குடும்ப நல நீதிமன்றம் வரை வந்திருக்கிறார்களே பிரச்சினைதான் என்னவென்று பார்த்தால் எனது கணவன் நான் டிவி பார்க்கும்போது டிவியை அனைத்துவிட்டார் என்றோ தூங்கும் போது குறட்டை விட்டார் எனவோ இருக்கும் ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடிகிறது விட்டுக்கொடுத்தல் சகிப்பு தன்மை புரிந்துகொள்ளும் தன்மை இவை எல்லாவற்றையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் நான் தொலைபேசியில் அழைதால் பேசவில்லை கடைக்கு அழைத்தேன் வரவில்லை இதெல்லாம் ஒரு காரணமா?

    உங்களுக்கு தெரியாதாத இந்த காலத்தில் பொருளாதார தேவை என்பது மிக முக்கிய பிரச்சினையாக இருக்கிறது நீங்கள் உங்கள் கனவனோ அல்லது மனைவியையோ அலைபேசியில் அழைக்கிறீர்கள் ஒரு வேளை அலுவலக உயரதிகாரியிடம் அலுவலக பணியில் இருக்கும் போது எடுத்து பேச முடியாது இது ஆண் பெண் இருவருக்கும் தான் அல்லது பேருந்தில் பயணம் செய்கிறீர்கள் எடுத்து பேச முடியாது சத்தம் கேக்காத்தும் ஒரு காரணமாக இருக்கலாம் இதையெல்லாம் புரிந்துகொள்ள கூடிய விஷயம்தானே இதெல்லாம் ஒரு பிரச்சினை என்று குடும்ப நீதிமன்றம் செல்வது சரிதானா?

    சரி அடுத்தது ஒருவர் மேல் ஒருவர் சந்தேகம் ஒரு குடும்பத்தில் பண பிரச்சினை வேறு சில பிரச்சினைகள் எல்லாமே நாம் தீர்த்து விடலாம் சந்தேகம் எனும் பேய் நுழைந்தால் பின்னர் எல்லாவற்றிலுமே சந்தேகம்தான் சுருக்கமாக சொல்லப்போனால் மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி அப்படித்தான் தொட்டதுக்கெல்லம் குற்றம் அதுக்காக தவறுகளை கண்டும் காணாமல் செல்வதில்லை இந்த உலகத்தில இருக்கிற எல்லா உயிரினங்களும் மற்ற சக உயிரிணங்கள் மீது அன்பு வச்சுருக்கு ஆனால் அவற்றுக்கு எல்லாம் ஐந்தறிவுதான் மனிதர்களாகிய நமக்கு ஆறாவது அறிவும் உண்டு இருந்தும் என்ன செய்ய நாம் தான் எதையும் ஆரய்ந்து பார்ப்பதில்லையே.

    கணவன் மனைவி சம்பாஷனைகள் குறைந்து வருகிறது காரணம் இருவரும் வேலைக்கு சென்று வருவதால் இருவருக்குமே உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உளைச்சல் இருக்கதான் செய்யும் ஆனால் இதில் ஆண்கள் மட்டும் மனைவியிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு உண்டு அது உண்மைதான் ஒருவேளை அது அவனின் ஆளுமையை உணர்த்துவதற்காக கூட அப்படி நடக்கலாம் என்னைப்பொருத்த வரை ஆனும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துகொள்ளாமை தான் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது ஒருத்தர் மேல் ஒருத்தர் அன்பா இருங்க மனம் விட்டுப்பேசுங்க, சின்ன சின்ன பிரச்சினைகளை வராமல் தடுக்க விட்டுகொடுத்து போங்க விட்டுக்கொடுக்குறதால பெரிசா என்னங்க இழந்துற போறோம் விட்டுக்கொடுத்தலிலும் புரிந்துகொள்வதிலும் தான் வாழ்க்கையின் சுவை பன்மடங்கு அதிகரிக்கும்

    ஆண்களை அடிமை படுத்த நினைக்கிற பெண்களும்,பெண்களை அடிமைபடுத்துற ஆண்களும் புரிஞ்சுக்குங்க நீங்க ஒருத்தர் இல்லாமல் இன்னொருவர் இல்லை சரி ஆண்களே இல்லாத பெண்கள் மட்டுமே உள்ள ஒரு உலகம் இல்லையென்றால் பெண்களே இல்லாத ஆண்கள் மட்டும் உள்ள உலகம் கற்பனை பண்ணிபாருங்க எவ்வளவு கொடுமை என தெரியும் உங்களுக்கு தெரியுமா உளவியாலகவும் மருத்துவ உலக் அடிப்படையில் பார்த்தாலும் ஒரு ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் விரும்புகின்றனர் சரி நம்ம வீட்ட எடுத்துக்குவோம் நீங்க ஒரு தாய் உங்களுக்கு உங்க மகன் மேல் கொஞ்சம் அதிகமாகவே அன்பு இருக்கதான் செய்யும் சரி நீங்கள் ஒரு தந்தை உங்களுக்கு மகள் மேல் அன்பு அதிகாமவே தான் இருக்கும் இதற்கு பெரிய ஆராய்சியெல்லாம் தேவையில்லை நம்மை நாம் புரிந்துகொள்ள் முயற்சித்தாலே புரிந்துவிடும்

    ஒரு ஆண் அல்லது பெண் இருவருக்குமே அழகு என்பது வெரும் நிறத்திலோ அல்லது விலையுயர்ந்த ஆடையிலோ ஆபரணங்களிலோ இல்லை அது நிரந்திரமும் இல்லை அது தானே இயற்கை வயது கூடும் தோறும் வாலிபம் மாறிக்கொண்டேதானே வருகிறது. புற அழகை விட்டு அக அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் அன்பால் ஆளுமை செய்வோம் விட்டுக்கொடுப்போம் ஆணும் பெண்ணும் ஒன்றுதான் பால் மட்டுமே வேற என்பதை புரிந்துகொள்வோம் ஒன்று படுவோம் மேம்படுவோம்


    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    May 23, 2010

    6

    (Amicus Curiae)அமிக்கஸ் குயூர்ரி தெரியுமா?

  • May 23, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: மகிழ்ச்சியும் துயரமும் எப்போதும் அடுத்தடுத்தே இருக்கின்றன.

    நான் சமீபத்தில் தெரிந்துகொண்ட ஒரு விஷயத்தை இந்த பதிவின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் சாதரணமாக குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்கை விசாரிப்பார்கள் ஆனால் சில நேரங்களில் குற்றவாளிகளுக்கே தெரியாது அவர்கள் நீதிமன்றத்தின் விசாரனையில் இருக்கிறார்கள் என்பது அது பற்றித்தான் பதிவு.

    நான் மேலே குறிப்பிட்டுள்ள இந்த அமிக்கஸ் குயூர்ரி என்பவர் நீதிமன்றத்தின் நேரடி விருப்பம் அல்லது வருட வருமாணம் 17,000 க்கு குறைவாக உள்ளவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்கள், மற்றும் வழக்கறிஞர் வைத்து வாதாட வசதி இல்லாதவர்கள் போன்றவர்களுக்கு நீதிமன்றம் இது போன்ற அமிக்கஸ் குயூர்ரியை நியமிக்கும் அந்த அமிக்கஸ் குயூர்ரி என்பவர் ஜுடிசனல் கீழாக வருபவர் மிகவும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால் இவரே ஒரு நீதிமன்றத்துக்கு சமமானவர் இவரின் விசாரனை தகவல்களை மட்டும் வைத்து சம்பந்தபட்டவரை விசாரிக்கமலே நீதிமன்றம் நீதி வழங்கலாம்.

    இந்த அமிக்கஸ் குயூர்ரி சாதரணமாக அதிக மக்கள் ஈடுபட்டுள்ள பொதுநலம் சம்பந்தபட்ட பிரச்சினைகளை மட்டும் தான் கையில் எடுக்கிறது அதாவது சமுதாயத்திற்கு அதிகம் பிரச்சினைகள் விளைவிக்க கூடியவர்கள் மற்றும் மாபியா கும்பல்கள்(சிவில் வழக்குகள் மற்றும் குற்ற வழக்குகள்) இவர்களுக்கு எதிராகவும் மேலும் அரசு பொதுநல வழக்குகளுக்கும் அமிக்கஸ் குயூர்ரி நியமிக்க படுகிறார்.

    அமிக்கஸ் குயூர்ரி வெறும் ஒரு வழக்கிறிஞர் மட்டுமல்லமால் இந்த நேரத்தில் ஒரு புலனாய்வு துறை அதிகாரியின் தைரியத்தோடும் சாதுரியத்துடனும் செயல்படுவார்கள் இவர்களை பிரித்து அறிவது என்பது முடியாத காரியம் மேலும் ஒரு வழக்கறிஞர் சில வழக்குகளுக்கு எதிராக தன்னையே அமிக்கஸ் குயூர்ரியாக நியமிக்க மனு கோரலாம் இருப்பினும் அதை பரிசீலித்து முடிவெடுப்பது நீதி மன்றமே.

    இந்த முறையில் இவர்கள் காண்பதே ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும் காரணம் நீதிமன்றமும் தான் தனக்கு பதிலாக அமிக்கஸ் குயூர்ரியை நியமிக்கிறது அதற்காக இந்த அமிக்கஸ் குயூர்ரி சொல்வதை அவர் தரும் அறிக்கையை மட்டுமே வைத்து தீர்ப்பளிப்பதில்லை அதை ஒரு பெஞ்ச் கூடி அதனை அலசி ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவார்கள்.

    உதாரணத்துக்கு நாம் ஒரு குற்றவாளி ஆனால் நம்மீது இது வரை வழக்குகள் இல்லை எந்தவிதமான தெளிவுகள் அல்லது புகார் எதுவும் இல்லாத பட்சத்திலும் நீதிமன்றத்துக்கு தேவைப்பட்டால் நமக்கு எதிராக ஒரு அமிக்கஸ் குயூர்ரி நியமித்து குற்றத்தை வெளியே கொண்டுவருவார் மேலும் குற்றவாளியுடைய விவாதம் கேட்காமலே தீர்ப்பு வழங்கி தண்டனை வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    May 4, 2010

    13

    உலகெங்குக்குமான அவசர உதவி எண்

  • May 4, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: வாழ்க்கை பயணம் செய்யும் வழியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    ஒவ்வொரு நாட்டிலும் அதில் உள்ள மாநிலங்களிலும் மக்களின் சேவைக்காக அவசர உதவி எண் வழங்கபட்டிருக்கும் இதில் மருத்துவ வசதி, தீயனைப்பு படை, அவரச போலீஸ், ஆம்புலன்ஸ் இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் கொடுத்து இருப்பார்கள் நாம் ஒவ்வொருவரும் இதுபோல அவசர உதவி எண்களை ஞாபகம் வைத்திருக்கிறோமா என்றால் நிச்சியம் இல்லையென்கிற பதிலாகத்தான் இருக்கும்.

    நாம் நமது தமிழ்நாட்டில் உள்ள அவசர உதவி எண்களை நாம் எப்படியாவது தெரிந்து வைத்துகொள்ளலாம் ஒரு வேளை நீங்கள் வேறு ஒரு மாநிலம் அல்லது வேறு நாட்டிற்கு சென்றிருக்கிறீர்கள் அங்கு உங்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது அப்போது உங்களுக்கு அவசர உதவி எண் இருந்தால் எளிதாக தொடர்பு கொள்ளலாமே அதை தெரியப்படுத்த தான் இந்த பதிவு.

    உங்கள் அலைபேசியில் 911 என்கிற இந்த மூன்று இலக்க அவசர அழைப்பு எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள், இந்த எண் எப்படி எல்லா நாட்டிற்கும் பொருந்தும் என நினைக்கிறீர்களா ஒவ்வொரு நாட்டிற்குமான தொலை தொடர்பு சேவையில் இந்த 911 என்கிற அவசர அழைப்பு எண் இருக்கும் நீங்கள் அலைபேசி சேவையை உபயோகிப்பவர்களாக இருந்தாலும் இந்த எண் அழைப்பதற்கு தடையில்லை.

    நீங்கள் 911 அழைக்கும் போது அதுவாகவே உங்களுக்கு அருகில் உள்ள உதவிக்கான மையத்தை சென்றடையும் பின்னர் அதன் மூலம் உங்களுக்கு உதவிகள் கிடைக்க்கூடும் மேலும் இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களால் அழைப்பு ஏற்படுத்தி பேசி உதவி கேட்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் 911 என்கிற எண்ணிற்கு அழைப்பு ஏற்படுத்தி விட்டீர்கள் என்றால் அவர்களாகவே உங்கள் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

    மேலும் ஒரு சின்ன தகவல் உங்கள் அலைபேசி நம்பர்பேட் (Keypad) பூட்டு (Lock) இடப்பட்டிருந்தாலும் இந்த 911 என்கிற எண் மட்டும் டயல் செய்ய இயலும் வேறு எந்தவொரு எண்ணும் இது போல டயல் செய்ய முடியாது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் இந்த எண்ணின் அவசியம், நண்பர்களே குறித்து வைத்துக்கொள்ளுங்கள் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு இது பயன்படக்கூடும், இது உங்களுக்கு புதியதாக அல்லது உபயோகமானதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Mar 17, 2010

    9

    தாலிக்கு அர்த்தம் என்ன?

  • Mar 17, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: பெண் நாணத்தோடு அழகை மறைக்கும் போது தான் மேலும் அழகாகிறாள்.

    திருமணம் முடிந்த பெண்களை நம்மாள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும் அவர்கள் அணிந்திருக்கும் மங்களகரமான மஞ்சல் கயிறு (அது தான் தாலி) அதை உறுதிப்படுத்திவிடும், அது என்ன பெண்களுக்கு மட்டும் அடையாளமாக தாலி அப்ப ஆண்களுக்கு இல்லையா? முன்பெல்லாம் ஆண்கள் அவர்களின் கால் விரல்களில் பெண்கள் அணியும் மிஞ்சி (சரியான தமிழ் பெயர் தெரியவில்லை) போல அணிவார்களாம் ஆனால் அது எப்படி நாளடைவில் இல்லாமல் போனது பற்றி போதிய தகவல்கள் இல்லை அதனால் அதை விட்டுவிடுவோம் சரி பெண்கள் மட்டும் கழுத்தில் திருமணம் முடிந்ததன் அடையாளமாக கழுத்தில் தாலி அணிகிறார்கள் ஆண்களும் காலில் மிஞ்சி அணிவதற்கு பதிலாக வேறு ஏதாவது கழுத்தில் அடையாளமாக அணிந்திருக்கலாமே என கேள்வி கேப்பவர்களுக்காக பெண்கள் பொதுவாகவே (பழங்காலத்து பெண்கள்) தரையை பார்த்துதான் நடக்கிறார்கள் (இப்பொழுதுதான் இருவரும் சரிசம்மாகிவிட்டோமே) அதனால் அவர்கள் திருமணமான ஆண்களை அடையாளம் கண்டுகொள்ளத்தான் ஆண்களுக்கு காலில் மிஞ்சி அணிந்தார்கள் ஆண்கள் எப்படி நடப்பார்கள் என்பதுதான் எல்லாருக்குமே தெரியுமே அதனால்தான் பெண்களுக்கு கழுத்தில் தாலி

    மன்னிக்கவும் நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டு வேறு எங்கோ செல்கிறேன் இப்பவும் ஆண்கள் திருமணத்தின் போது பெண்களின் கழுத்தில் தாலி கட்டுகிறோம் அந்த தாலிக்கு சில அர்த்தங்கள் இருக்கின்றன நம்மில் இது எத்தனை பேருக்கு தெரியும் அப்படி தெரிந்தவர்களுக்கு மீண்டும் ஞாபகபடுத்திகொள்ளவும் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவும் தான் இந்த பதிவு

    தாலியை நன்கு கவணித்து பாருங்கள் அதை சுற்றி மொத்தம் ஒன்பது இலைகள் உள்ளது போல தோற்றமளிக்கும் கவனிக்காதவர்கள் பார்த்துக்கொள்ளவும் அந்த ஒன்பது இலைகளும் வெரும் வடிவமைப்புக்காக செய்யப்பட்டதல்ல அவை ஒவ்வொன்றிற்கும் காயத்திரி மந்திரத்தில் ஒவ்வொரு அர்த்தம் உண்மையும் பொதிந்துள்ளது

    தாலியின் இலைகள்:
    1)வாழ்க்கையை உண்மையாக புரிந்துகொள்ளவேண்டும்
    2)மேண்மை பெற வேண்டும்
    3)ஆற்றல் மிக்கவராய் இருத்தல் வேண்டும்
    4)தூய்மை அவசியம் வேண்டும்
    5)தெய்வீகம் தேவை
    6)உத்தம குணம் தேவை
    7)விவேகம் முக்கியம்
    8)தன்னடக்கம் கட்டாயம் தேவை
    9)தொண்டு மனப்பாண்மை வேண்டும்

    மேற்சொன்ன இத்தனை அம்சங்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் தாலி அதுவே பெண்களை காக்கும் வேலி

    குறிப்பு : சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், என் பதிவு பிடித்திருந்தால் அனைவருக்கும் சென்றடைய நீங்களும் மனது வையுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர