Oct 23, 2011
சந்தோஷ தீபாவளி வாழ்த்துகளும் பட்டாசுகளுக்கான முன்னெச்சரிக்கையும்
இந்த நேரத்தில் என் அருமை நண்பர்களுக்கும் தள வாசகர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவிப்பதோடு கூடவே இலவசமாய் சில தகவல்களையும் அறிய தறுவது என் கடமையென நினைக்கிறேன்.
உங்கள் கவணத்திற்கு...
- பட்டாசுகள் வாங்கும் போது அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் தரமுள்ள தயாரிப்புகளை பார்த்து வாங்கவும்.
- பட்டாசுகளை ஏதாவது ஒரு பெட்டியில் போட்டு குழந்தைகள் கையில் கிடைக்காதவாறும் அதிகமான வெப்பம் படாதவாறும் பார்த்துக்கொள்ளுங்கள்.
- பட்டாசுகளை கொழுத்தும் போது கவணமாக உடையணியவும் நீளமான உடைகள் அணிவதை தவிர்க்கவும், முடிந்தவரை பட்டாசுகள் கொழுத்தும் போது கதர் ஆடைகள் அணிவது நலம்.
- பட்டாசு கொழுத்துவதற்கு நீளமான ஊதுபத்திகளை பயன்படுத்தவும். தீப்பெட்டி வைத்தோ அல்லது சாட்டை திரி கொண்டோ கொழுத்த முயற்சிக்க வேண்டாம்.
- ஒரே நேரத்தில் பல பட்டாசுகளை அடுத்தடுத்து கொழுத்த முயற்சிக்க வேண்டாம் கொஞ்சம் தவறு நடந்து ஏதாவது ஒரு பட்டாசு வெடித்தால் அது தேவையில்லாத சங்கடத்தை தந்துவிடும்.
- சாதரண வெடிகளாய் நினைக்க கூடிய சங்கு சக்கரம் மற்றும் சாட்டை, கம்பி மத்தாப்பு போன்றவைகளை வீட்டின் உள்ளே கொழுத்த வேண்டாம் சங்கு சக்கரம் போன்ற பட்டாசுகள் வெடிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளவை.
- பட்டாசுகளை கொழுத்தும் போது மிக நெருங்கி இருந்து அல்லது அதனருகிலேயே அமர்ந்து கொண்டு கொழுத்த முயற்சிக்க வேண்டாம் எப்போதும் தாங்கள் பட்டாசு தீ பிடித்தவுடன் ஓடும் நிலையில் இருக்கவும்.
- பட்டாசுகளை கொழுத்தும் முன் முடிந்த வரை அதன் நூல் திரியில் சுற்றி இருக்கும் வெள்ளை காகிதத்தை ஓரளவிற்கு நீக்கியும் அதன் திரிகளில் உள்ள வெடிமருந்தை நீக்குவதன் மூலமும் பட்டாசு திரியில் தீ வைத்தவுடன் உடனே வெடிக்க விடாமல் உங்களுக்கான பாதுகாப்பான இடைவெளியை அதிகரிக்க செய்யமுடியும்.
- மிக நீளமான சர வெடி வாலக்களை கொழுத்தும் போது மிகுந்த முன் எச்சரிக்கையுடனும் ஆட்கள் இல்லாத இடத்தை தெரிவு செய்து கொழுத்துதல் நலம் பொதுவாக சர வெடி வாலாக்கள் பலமுனையில் தெரித்து விழும் வாய்ப்பு கொண்டது.
- ராக்கெட் பட்டாசு கொழுத்தும் போது நேர் நிலையில் இருக்கட்டும் சாய்வான நிலையிலோ அல்லது படுக்க வைத்த நிலையிலோ கொழுத்த வேண்டாம், அதே போல புஸ்வானம் கொழுத்தும் போதும் நேரான நிலையில் வைத்தே கொழுத்தவும் சில நேரஙகளில் புஸ்வானம் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது கவணம் தேவை.
- எந்த காரணத்தை கொண்டும் சிறு குழந்தைகளை பட்டாசுகளின் தலையில் தீ வைக்க அனுமதிக்க வேண்டாம், அவர்களை பயமுறுத்துகிறேன் என்றோ அல்லது சந்தோஷபடுத்துகிறேன் என்றென்றி அவர்களை அருகிலோ அல்லது தூக்கி வைத்துக்கொண்டு பட்டாசுகளை கொழுத்த வேண்டாம. உங்களின் கால் இடறல் கூட தேவையில்லாத சங்கடத்தை உருவாக்கி விடும்.
- பட்டாசுகளை உங்கள் சட்டை டவுசர்களில் போட்டுக்கொண்டே பட்டாசு கொழுத்துவது சரியானதல்ல அவசியம் இது போன்ற தேவையில்லாத விஷயங்களில் கவணம் தேவை.
- கைகளில் பிடித்துக் கொண்டு பட்டாசுகளை கொழுத்த வேண்டாம் பாட்டில்கள் அல்லது கொட்டாச்சி மூடிகள் போன்றவற்றில் உள்ளே வைத்தோ அல்லது அதை கொண்டு மூடி வைத்தோ தயவு செய்து பட்டாசு கொழுத்த வேண்டாம் வெடித்து சிதறும் போது காயங்களை ஏற்படுத்தி விடும்.
- பட்டாசு ஏதாவது ஒன்றை கொழுத்தி அது வெடிகாத போது உடனே அதனருகில் சென்று பார்க்க வேண்டாம் குறைந்தது 10முதல் 15 நிமிடம் வரையாவது அதன் அருகில் செல்லாதீர்கள்.
- அதிக சத்தம் கொடுக்கும் வகையிலான பட்டாசுகள் கொழுத்தும் போது முடிந்தவரை உங்கள் காதுகளில் பஞ்சு வைத்து அடைப்பது நலம் நம் செவியானது சாதராணமாக 65 முதல் 85 வரையிலான டெசிபல் சப்தங்களை மட்டுமே தாங்கவல்லது அதற்கு மேலான சத்தம் உங்கள் காதுகளை கேட்க விடாமல் செய்து விடும்.
- உங்களுடைய குழந்தைகள் பட்டாசு கொழுத்தி முடித்து சாப்பிட உட்காரும் முன் அவசியம் அவர்களின் கைகளை சோப்பு போட்டு சுத்தமாய் கழுவி விட வேண்டியது பெற்றோர்களின் கடமை அவசியம் உங்கள் குழந்தைகளை கவணிக்க வேண்டும்.குழந்தைகளுக்கு தெரியாது பட்டாசு மருந்து ஒரு விஷம் என்பது அதனால் அவர்களை கவணித்து கை கழுவாமால் எதையும் எடுத்து சாப்பிட விடாதிர்கள்.
- கொஞ்சம் நடைமுறைக்க ஒவ்வாத விஷயங்கள் போல தோனாலம் ஆனாலும் பட்டாசு கொழுத்தும் போது இரண்டு பக்கெட் தண்ணீர் தேவைப்பட்டால் எடுக்கும் நிலையில் இருக்கட்டும். எதிர்பாராத அசம்பாவிதங்களை தவிர்க்க உதவும்.
- எதிர்பாராத விதமாக உடையில் தீ பிடித்தால் உடனே உடையை களைய முயற்சி செய்யுங்கள் மாறாக போர்வையை கொண்டோ சாக்கு கொண்டோ மூடி அனைக்க முயற்சிக்க வேண்டாம் ஒரு வேளை அது மேலும் பிரச்சினையை தரலாம். எதுவாக இருந்தாலும் எரியும் தீயின் தன்மையை பொருத்து சூழ்நிலைக்கு தகுந்தவாறு புத்திசாலிதனத்துடன் செயல்படுங்கள்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு

இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr

11 Responses to “சந்தோஷ தீபாவளி வாழ்த்துகளும் பட்டாசுகளுக்கான முன்னெச்சரிக்கையும்”
-
Shanmugam Rajamanickam
said...
1
October 23, 2011 at 7:58 PMஉங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்...
-
ஜிஎஸ்ஆர்
said...
2
October 24, 2011 at 12:13 AM@சண்முகம்தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி அதோடு மேலே இருக்கும் விஷயத்தை உங்கள் வேண்டப்பட்டவர்களுக்கும் அறிய கொடுங்கள்
-
பிரகாசம்
said...
3
October 24, 2011 at 9:29 AMஅக்கறையோடு தாங்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளவை. பதிவிற்கு நன்றிகள்
-
விச்சு
said...
4
October 24, 2011 at 4:21 PMநல்லதொரு ஞாபகமூட்டல்..
-
மாணவன்
said...
5
October 24, 2011 at 6:55 PMஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.! :-)
-
மாணவன்
said...
6
October 24, 2011 at 7:05 PMஇந்த தீபதிருநாளில் இருள் நீங்கி அனைவரது இல்லத்திலும் மனதிலும் மத்தாப்பாய் ஒளிவீசி மகிழ்ச்சி பொங்கட்டும்...1
-
ஜிஎஸ்ஆர்
said...
7
October 27, 2011 at 1:34 PM@பிரகாசம் புரிதலுக்கு நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
8
October 27, 2011 at 1:35 PM@விச்சுவாய்ப்பு கிடைத்தது பயன்படுத்தி கொண்டேன் அவ்வளவே!
-
ஜிஎஸ்ஆர்
said...
9
October 27, 2011 at 1:36 PM@மாணவன் நன்றி தம்பி இறைவன் ஆசிர்வாதம் இருந்தால் எல்லாம் நல்லபடியாய் நடக்கும் நானும் அந்த நம்பிக்கையில்...
-
smibrahim
said...
10
January 30, 2012 at 5:19 PMநான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
மேலும் படிக்க: சந்தோஷ தீபாவளி வாழ்த்துகளும் பட்டாசுகளுக்கான முன்னெச்சரிக்கையும் ~ புரியாத கிறுக்கல்கள் http://gsr-gentle.blogspot.com/2011/10/diwali-wishes-and-firecrackers.html#ixzz1kwRORoUD
ஜிஎஸ்ஆர் -
ஜிஎஸ்ஆர்
said...
11
February 5, 2012 at 5:51 PM@smibrahimபரவாயில்லையே கருத்துரை பெட்டியை சோதனை பெட்டியாக மாற்றி விட்டீர்களே இதற்கு பதிலாக பதிவை பற்றி ஏதாவது எழுதியிருக்கலாம்....
தயவுசெய்து முடிந்தவரை கருத்துரை பதிவு சார்ந்ததாக இருக்கட்டும்
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>