Jul 18, 2021

3

தமிழ் வழி ஜோதிடம் கற்க மற்றும் சந்தேகங்களுக்கு!

 • Jul 18, 2021
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஏதாவது ஒன்று நம்பிக்கையை தருகிறதென்றால் அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்

  வணக்கம் நண்பர்களே, நமது தளத்தில் பதிவுகள் எழுதியே பல வருடங்கள் கடந்து விட்டது ஆனால் இரண்டு நபர்கள் குறித்து பதிவு செய்ய வேண்டும் என நினைத்தேன், ஜோதிடம் மூட நம்பிக்கை என நினைப்பவர்கள் தயவுசெய்து பொறுமையாக கடந்து செல்லவும் அதே நேரத்தில் தமிழ் வழியாக ஜோதிடத்தை கற்றுக்கொள்ள அல்லது அது குறித்தான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய விரும்புவர்களுக்காக இங்கே இரண்டு ஜோதிட புலிகளை பரிந்துரை செய்கிறேன், இவர்கள் இருவரும் உங்களுக்கு உதவுவார்கள் ஆனால் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வார்கள் கேட்ட உடன் பதில் கிடைக்காது ஆக கொஞ்சம் பொறுமை அவசியம்!

  ஒருவர் பேஸ்புக்கில் இருக்கிறார் மஹாலக்ஷ்மி ஜோதிட நிலையம்

  மற்றொருவர் யூடியுப்பில் இருக்கிறார் அமர்நாத் ஆஸ்ட்ரோ அனாலிசிஸ்

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர் நாகு
  Read more...

  Dec 30, 2013

  12

  குழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்!

 • Dec 30, 2013
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: பொறுமையால் பெற்றவரும் உண்டு வாழ்வை இழந்தவரும் உண்டு.

  வணக்கம் நண்பர்களே கடந்த ஒரு வருட காலமாக எழுதவதற்கு நேரமில்லை என்பதை விட எழுதுவதற்கான மனநிலை இல்லை என்பது தான் சரியாய் இருக்கும். ஒவ்வொரு வருடமும் நாட்காட்டியில் வருடங்களின் எண்ணிக்கை கூடிகிறதே தவிற குறிப்பிட்டு சொல்லும் அளவில் எந்த மாற்றமும் நிகழ்ந்ததாய் தெரியவில்லை என்றாலும் வயசு கூடுவதை போலவே, மன உளைச்சல் பல மடங்கு கூடியிருக்கிறது, பிறக்கும் புத்தாண்டாவது எனக்கும் உங்களுக்கும் இறைவன் வெற்றிப் படிக்கட்டுகளை அமைத்து தர எல்லாம் வல்ல இறைவனை உங்களோடு சேர்ந்து நானும் பிராத்திப்பதோடு, இந்த பதிவின் வழியாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் -2014, தெரிவிப்பதோடு எல்லா வல்ல இறைவன் எல்லா நலமும் வளமும் அருளட்டும்.

  நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற கூட்டான்மையான சமூகத்தில் தனி மனிதனாக யாரும் சாதித்து விட முடியாது, நம்மை சுற்றியிருக்கும் குடும்பத்தார், உறவினர், சமுதாயம், நண்பர், இவர்களாலே தான் எந்த ஒரு மனிதனும் கட்டமைக்கபடுகிறான், இங்கே நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க முடிவதில்லை, நமக்கான வாழ்க்கையில் நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை நம்மை சுற்றியுள்ளவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

  கீழிருக்கும் பச்சை நிற எழுத்துக்கள், நான் சமீபத்தில் நான்கு முறை கண்ட மூடம் கூடம் திரைப்படத்தில் வரும் வசனங்கள் ஆகும், இதை வெறும் சினிமா வசணமாக பார்ப்பதை தவிர்த்து வாழ்வில் நடக்கும் எதார்த்தத்தின் பின்னனியோட பொருத்தி பார்க்க முடிந்தால் நான் சொல்வது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவரும்.

  ”ஒரு காலத்துல எல்லோருக்குமே பொதுவா இருந்த இந்த பூமியில நாம எல்லோரும் அம்மனமா தான் பொறந்தோம், ஆனால் நடுவுல உங்கள மாதிரி ஒரு குடும்பம் நாகரீகம்னு ஒன்னு ஆரம்பிச்சு உங்க தேவைக்கு அதிகமா எடுக்க ஆரம்பிச்சதால, எங்கள மாதிரி ஒரு கூட்டம் எடுக்கிறதுக்கு ஒன்னுமே இல்லாம இன்னைக்கு வரைக்கும் அம்மனமாவே இருந்துகிட்டு இருக்கோம், எங்களோட அடிப்படை வாழ்க்கை திட்டம் தான் உங்க மேல்தட்டு நாகரீக வாழ்க்கை.

  நூறு மாம்பழம் இருக்கிற ஒரு மாமரத்துக்கு கீழ நூறு பேரு பசியோட நின்னாங்கனா அங்க ஆளுக்கு ஒரு பழம் சேரனும்கிறது இயற்கையோட தர்மம், ஆனால் அந்த நூறு பேர்ல உங்கள மாதிரி திறமையும், பலமும் அதிகமா இருக்கிற அஞ்சு பேரு மத்தவங்கள விட சீக்கிரமா ஆளுக்கு அஞ்சு பழங்கள் எடுத்துட்டாங்கனா இருபது பேரு ஒரு பழம் கூட கிடைக்காம பசியில வாடி வேற வழியே இல்லாம அந்த அதிகமா பழம் வச்சுருக்கிவன்கிட்ட பிச்சை கேட்டு நிப்பாங்க, இப்ப அதிகமாக பழம் வச்சுருக்கிவன் இந்த ஒன்னுமே இல்லாதவங்களா வச்சு அஞ்சு மாமரம் நட்டு ஒவ்வொரு மரத்திலிருந்தும் நூறு, நூரு பழங்களை பறிக்க வச்சு அவங்களுக்கு சம்பளம்ங்கிற பேர்ல அவங்க எடுத்துக் கொடுத்த நூறு பழத்திலிருந்து ஒரு பழத்தை எடுத்து கொடுப்பான், இது தான் இங்க நடக்கிறது.

  ஒருத்தன் கிட்ட இருந்து எடுக்கிறது மட்டும் திருட்டு இல்லை, ஒருத்தனை எடுக்க விடாம பண்றதும் திருட்டு தான்.”


  இந்திய பிரதமர் முதல் சாதரண குடிமகன் வரை அனைவருமே அவர்களை சுற்றியுள்ள சமூகத்தால் கட்டமைக்கபட்டவர்கள் தான், இங்கே ஆசைப்படுவதற்கு நமக்கு உரிமை இருக்கிறது ஆனால் அடைவதென்பதற்கோ யாராருடைய உதவிகளோ தேவைப்படுகிறது அதாவது நம்மை சுற்றியுள்ள சமுக மக்களின் உதவி என்பது தேவையாய் இருக்கிறது.டாடாவாக இருந்தாலும் அம்பாணியாய் இருந்தாலும் அவர்களின் உற்பத்தி பொருளை நாம் வாங்கினால் மட்டுமே அவர்கள் கோடீஸ்வரர்கள், நம் தெருவில் அகர்பத்தி தயாரித்து விற்கும் அண்ணன் முன்னேற முடியாமல் அப்படியே இருப்பதற்கும் நாமே தான் காரணம்.

  சமீபத்தில் நடந்த டெல்லி அரசியல் விஷயத்தை கவணித்தால் ஒரு விஷயம் புரியும் ஆண்டுகள் பல ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை காணமால் போகச்செய்தது ஆம் ஆத்மி கட்சிதான் என்றாலும் அந்த வெற்றி அவர்களுக்கு கிடைத்த வெற்றி என்பதை விட திரு.அரவிந்த் கெஜ்ரிவால் என்னவாக வேண்டுமென்பதை, டெல்லி வாழ் மக்கள் தான் தீர்மானித்தார்கள் என்று வேண்டுமானல் சொல்லலாம்.

  மேற்சொன்னது வெறும் உதாரணம் மட்டும் தான் கொஞ்சம் ஆழமாக நிதானமாக யோசித்தால் உலக கோடிஸ்வரர்களையும், தெருவில் பிச்சை எடுப்பவரையும் இரண்டு விதமாக உருவாக்கியது நம் சமூகம் தான் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

  நம் வீட்டில் கூட பெரியவர்கள் அவர்களால் சாதிக்க முடியாமல் போன ஒன்றை அல்லது அவர்கள் விரும்பி கிடைக்காத ஒன்றை குழந்தைகள் மேல் தினிப்பார்கள், தெரிந்தே குழந்தைகளில் சிந்தனை வேகத்தை தடை செய்து அவர்களின் விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளி நம் சொந்த விருப்பு, வெறுப்புகளை தினித்து கொண்டிருக்கிறோம் இதுவும் ஒரு வகையான கட்டமைப்புகான தொடக்கம் என்றாலும் ஏதேனும் ஒரு துறையில் வெற்றியாளானய் இருக்க வேண்டியவனை தவறான கருத்து தினிப்புகளால் வெறும் குமாஸ்தா ஆகிய கதைகள் தான் இன்று நிறைய நடந்து கொண்டிருக்கிறது.

  பெரும்பாலனவர்களின் நோக்கம் அவர்களின் குழந்தைகள் நன்கு படித்து உயர்ந்த பதிவியில் அமரவேண்டும் என்பது தான் பெரும் ஆசையாய் இருக்கிறது, அதாவது மேற்சொன்னது போல தவறான கட்டமைப்புகளை கொண்டுதது தான், ஏனையவர்களின் குழந்தைகளிடம் இருக்கும் பண்முக திறமைகளை யாரும் அறிந்து ஊக்குவிப்பதில்லை, இன்றைய நிலையில் குழந்தைகள் கடிவாளம் போடப்பட்ட குதிரைகளாகதான் கல்விச் சாலையில் ஓட வைக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் தான் என்னவோ இலக்குகள் தவறும் போது அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல் தளர்ந்து போகின்றனர் இன்னும் சிலர் விபரீதமான முடிகளுக்கும் சென்று விடுகின்றனர்.

  கல்வி அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை அதே நேரத்தில் கல்வியில் மந்தமாக இருக்கும் குழந்தையிடம் வேறு திறன்கள் நிச்சியம் ஏதாவது இருக்கும், இசையை பற்றி, வணிகத்தை பற்றிய, புதிய ஆராய்ச்சிகளுக்கான யுத்திகள் கூட சாதரண மாணவனிடம் இருந்து வரலாம், அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டியாக இருந்து செயல்பட வேண்டியவர்கள் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள், சமூக மக்கள் தான், இன்றைய மக்கள் நினைப்பது போல மருத்துவமும், இன்ஜினியரும், நிர்வாக மேலான்மையும், சாப்ட்வேர் துறையில் மட்டுமே படிக்க வேண்டும் என்றால் வேறு துறைகள் வந்திருக்கவே முடியாது, கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்க முடியாது, இசை இருந்திருக்காது, சினிமா இருந்திருக்காது, பெரிய கண்டுபிடிப்புகளை, மாற்றங்களை நிகழ்த்தியவர்கள் எல்லாம் சாதரண மனிதர்களே அவர்களை சரியான முறையில் கட்டமைத்தது நம் சமூகம் தான்.

  குழந்தைகளுக்கு இலக்குகளை நிர்ணயிப்பதை தவிருங்கள், சிறந்த ஒன்றை தேர்ந்தெடுக்க பழக்குங்கள், அதாவது நீ படிச்சு விஞ்ஞானி ஆகனும் என்று கட்டாயப்படுத்தும் போது, உங்கள் குழந்தைக்க்கு விஞ்ஞானத்தில் ஆர்வம் இல்லையென்றால் நீங்கள் என்ன தான் முயன்றாலும் உங்கள் குழந்தை விஞ்ஞானி ஆகப்போவதில்லை, படிப்பு மற்றும் இன்ன பிற விஷயங்கள் யாவும் வெறும் அறிவு சம்மபந்தபட்டவை மட்டும் அல்ல மனம் சம்பந்தப்பட்டதும் தான். விரும்பி செய்யும் பொழுதுதான் வேகமாக செய்வதுடன் அதில் தனித்தன்மையை வளர்த்துக்கொள்ள முடியும்.

  Sande, Mande, Hujde, Thasde, Apil, Mego, Januri, Febre,Junyary, Furby,Mrch,Aprde, Ag, இது உங்களுக்கு புரியுதா? நிச்சியம் புரிய வாய்ப்பில்லை ஆனால் இவையெல்லாம் நாம் தினசரி பயன்படுத்தும் வார்த்தைகள் தான், என்ன கொஞ்சம் எழுத்துபிழைகள் இருக்கிறது, இதை பற்றி தெரிந்துகொள்ள பீகாரின் ஆசிரியை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். விடீயோவை பாருங்கள். மேலும் சில வீடியோக்கள் யூடியுப்பில் இருக்கிறது

  இந்தளவிற்கு இல்லையென்றாலும் தமிழகத்தின் ஆசிரியர்கள் திறனும் பரிசோதனைக்கு உட்படுத்தத்தான் வேண்டியிருக்கிறது. குரு ஸ்தானத்தில் இருப்பவர்கள் நிலை இப்படியிருந்தால் படிக்கும் மாணவர்களின் நிலை எப்படியிருக்கும். ஆசிரியர்களுக்கு பண்முக திறமை இல்லாதிருந்தாலும் கூட குறைந்தபட்சம் அவர்கள் சம்பந்தபட்ட துறைகளிலாவது தகுதியானவர்களாய் இருந்தால் நலம்.

  எனது மூத்த மகனுக்கு நான்கு வயதே பூர்த்தியாகி உள்ள நிலையில் KG1 படிக்கிறான், கொஞ்சம் விளையாட்டு ஆர்வம் எதையும் புரிந்துகொள்வதில், பதில் சொல்வதில் சிறப்பாகவே இருக்கிறான் ஆனால் அவனுக்கு எழுதுவதில் ஆர்வம் குறைவு எழுத முயற்சிக்கும் போதெல்லாம் கை வலிக்கிறது என்று அடம்பிடிப்பான், சமீபத்தில் அவனுடைய ஆசியர்கள் வரசொல்லியிருந்தார்கள் என்னவென்று கேட்ட பொழுது ஒன்றும் எழுத மாட்டேன்கிறனாம், விளையாட்டுத்தனம் அதிகம் இருக்கிறதாம், வீட்டில் பெற்றோர்கள் கவணம் எடுத்து சொல்லிக்கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.

  நான்கு வயது குழந்தையிடம் விளையாட்டுத்தனம் இல்லை என்றால் தான் ஆச்சர்யம்? நாங்களே எல்லாம் கற்றுக்கொடுப்பதாய் இருந்தால் பின்னர் உங்களுக்கு ஏன் இரு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு தொகையை அடைத்துக் கொண்டிருக்கிறோம்? 20 மாணவர்கள் இருக்கும் வகுப்பறையில் ஒவ்வொரு மாணவனுக்கும் தனியாக நேரம் ஒதுக்க முடியாது என்பது நமக்கு புரிந்த விஷயம் தான், எந்த ஒரு மாணவன் குறிப்பிட்ட விஷயத்தில் பின் தங்கியிருக்கிறானோ அவனுக்கு தனிக்கவணம் எடுத்து பயிற்சி அளிக்க வேண்டும் அது தான் ஆசிரியர்களுக்கு சிறப்பு, 90 % மதிப்பெண் எடுக்கும் மாணவனை 100% மதிப்பெண் எடுக்க வைப்பதல்ல சிறந்த ஆசிரியருக்கான தகுதி, 35% மதிப்பெண் எடுக்கும் மாணவனை 90% மதிப்பெண் எடுக்க வைப்பதே ஒரு சிறந்த ஆசிரியரின் தகுதியும் திறமையும் ஆகும். உண்மையை சொல்லப் போனால் கல்வித்துறை என்பது காசு பார்க்கும் துறையாகி வருடம் பல கடந்து விட்டது.

  கல்யாணத்தை பண்ணிப்பார், வீட்டை கட்டிப்பார் என்பதை என்ன அடிப்படையில் முன்னோர்கள் ஏன் சொல்லி வைத்தார்கள் என்று தெரியவில்லை ஆனால் வீட்டை கட்டிப் பார்ப்பது என்பது கடினமாகத்தான் இருக்கிறது, ஆம் ஏதோ ஒரு ஆவேசத்தில் தவறுதலாய் எடுக்கப்பட்ட முடிவில் கடந்த வருடம் மார்ச்-2013ம் வருடம் கணவு இல்லம் கட்ட தொடங்கினேன், கிட்டத்தட்ட ஒன்பது மாதம் நிறைவடைந்த வேளையில் பேஸ்மெண்ட்டிற்கு மேல் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க முடியவில்லை, எல்லாவற்றிலும் பிரச்சினைகள், வங்கி கடனுக்கு முயற்சித்தாலும், பார்க்கலாம் என்பதோடு வங்கி மேலாளர்கள் பேச்சை நிறுத்திக்கொள்கிறார்கள், நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த உதவிகளும் கை கொடுக்கவில்லை, இன்னும் சில நண்பர்கள் என்ன நினைத்தார்கள் என்றே தெரியவில்லை மின்னஞ்சலுக்கு கூட பதில் அனுப்பவதில்லை, அதனிலும் என் குடும்ப உறவுகளோ, உறவினர்களோ, என் தோல்வியை கொண்டாட தயாராய் இருக்கிறார்கள், யாரோ சொன்னது போல”வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும்.” என்கிற வகையில் நிறைய தோல்விகளை பெற்று வைத்திருக்கிறேன். சரி நடகட்டும் என்ன செய்ய நான் மேலே சொன்னமாதிரி ஆசைபடுவதற்கு மட்டுமே நமக்கு உரிமை இருக்கிறது என்கிற அங்கலாய்ப்புகளோடு நிறுத்திக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை, அதே நேரத்தில் முயற்சி திருவினையாக்கும் என்பதில் எல்லாம் சுத்தமாகவே நம்பிக்கையில்லை, அதற்காக முயற்சியை கைவிடுவதாகவும் இல்லை, இறைவன் எந்த நோக்கத்திற்காக நம்மை படைத்தானோ, அந்த இலக்கை சென்றடையும் வரை, நம்மால் முடிந்தவரை வாழ்வின் இறுதி நாள் வரை வாழ்க்கை புதிருக்கு விடை தேடிக்கொண்டும், புதிர்களை விடுவித்து வெற்றி பெற முயற்சித்து கொண்டே இருப்போம். வாழ்க்கை என்பதே போராட்ட களம் தானே அதில் போராட படைக்கப்பட்ட போராளிகள் நாம் இறுதி வரை போராடித்தானே ஆகவேண்டும்.

  என்ன செய்வது உலகம் ஒரு நாடகமேடை அதில் வாழ்க்கை என்பது நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஒரு எபிசோடு, நாம் அனைவருமே நடிகர்கள் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரங்கள், சிலருக்கு எளிமையான புதிர்களுடனான கதாபாத்திரம், வேறு சிலருக்கு சிக்கலான புதிர்களை கொண்டதான கதாபாத்திரம், இந்த புதிர்கள் இல்லாவிட்டால் வாழ்க்கையிலும் பெரிதாய் சுவராஸ்யம் இருக்காது, ஏற்ற இறக்கங்களுடன் கணவுகளோடு கமிட்மெண்ட் நிறைந்தது தான் இந்த வாழ்க்கை.

  என்ன நண்பர்களே மிக நீளமாய் குழப்பமாய் எழுதி விட்டோனோ? உங்களுக்கு பிடித்த கருத்தை எடுத்துக்கொள்ளுங்கள்,உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.ஆரோக்கியமான, புத்திசாலித்தனமான சமூகத்தை படைப்பதில் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள், நாம் செய்கின்ற செயல்களின் விளைவுகளை நேரடியாக சில நேரம் உணர முடியாவிட்டாலும், நம்முடைய நல்ல செயல்கள் நல்ல சமூகத்தை படைக்கும் என்பது மட்டும் நிதர்சன உண்மையாக இருக்கிறது.

  குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர் நாகு
  Read more...

  Dec 30, 2012

  22

  தங்கத்தின் தரமும், செய்கூலி சேதார கொள்ளையும்! சுங்க வரியும்!

 • Dec 30, 2012
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: ஒரு மரத்திலுள்ள பழங்களை எண்ணி விடலம் . ஒரு பழத்தால் உருவாகப் போகும் மரங்களை எண்ண முடியாது.

  வணக்கம் நண்பர்களே பல மாதங்களாக எழுத முடியாத நிலை இப்பொழுதும் கூட அதே நிலை தான் ஆனால் சமீபத்தில் பேஸ்புக் தளத்தில் தங்கத்தை பற்றிய ஒரு கட்டுரையை காண நேர்ந்தது அதன் உந்துதல் தான் இந்த பதிவு. இந்த பதிவையே உங்களை வாழ்த்துவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு உங்களை வாழ்த்த விரும்புகிறேன் . அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் -2013, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்.

  நம் எல்லோருக்கும் தெரியும், நாம் வாங்கும் ஆபரணங்கள் பெரும்பாலும் 22 கேரட் வகையை சேர்ந்தது அதைத்தான் 916 என்பார்கள், இன்னும் சில இடங்களில் KDM அதாவது (Cadmium) இதில் இந்த KDM நகைகள் தற்போது அதிகளவில் மார்கெட் செய்யப்படுவதில்லை பல நாடுகளில் தங்கத்தில் KDM பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டு விட்டது.

  KDM என்றால் என்ன? எதனால் இது தங்கத்தொழிலில் தடை செய்யப்பட்டது இப்படி ஒரு கேள்வி உங்களுக்கு இப்ப வந்திருக்கும் தானே? KDM (Cadmium) ஒரு கெமிக்கல் கலவை அதாவது சாதரணமாக தங்கத்தோடு வெள்ளி, மற்றும் செம்பு மட்டுமே கலந்து ஆபரணங்கள் செய்வார்கள், ஆனால் KDM நகையை பொருத்த வரை தங்கத்தோடு கலப்பதற்கு Cadmium எனும் ரசயானக்கலவையை பயனபடுத்துவார்கள், இதனால் தங்கத்தின் நிறம் பளிச்சென இருக்கும் ஆனால் இதை தொழில் முறையாக செய்பவருக்கு நிச்சியம் உடல் நிலை பாதிக்க படும் மற்றபடி இதை அணிபவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.

  பொதுவாக தங்கம் 8 Ct , 9 Ct, 10 Ct, 12 Ct, 14 Ct, 15 Ct, 16 Ct, 18 Ct, 19 Ct ,20 Ct, 21 Ct, 21.6 Ct, 22 Ct ,23 Ct, 24 Ct இந்த நிலைகளில் மட்டுமே காணப்படுகிறது 8 Ct க்கு கீழே இருப்பவற்றை தங்கம் என்பதாக கணக்கில் எடுப்பதை விட ஏதோ ஒரு உலோகம் என்று வேண்டுமானல் வைத்துக்கொள்ளலாம். நமது நாட்டை பொருத்தவரை 18 Ct முதல் 24 Ct Purity தங்கம் மட்டுமே பெரும்பாண்மையாக பயன்படுத்த படுகிறது அதே நேரத்த்தில் 8 Ct முதல் 16 Ct வரையிலான Purity தங்கம் மேலை நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அதிகம் பயன்படுத்த படுகிறது.

  தங்கத்தை பொருத்தவரை 24 Ct என்பது சுத்த தங்கம் அதாவது இதன் Purity என்பது 999.99% என்பதாகும் அதாவது 24 Ct தங்கத்தில் 0.01% வெள்ளியும், செம்பும் கலக்கபட்டிருக்கும், ஆனால் உலக அளவில் 99.9% Purity என்பது 24 Ct சுத்த தங்கமாக ஏற்றுக்கொள்ளபட்டிருக்கிறது, ஆனால் மிகவும் மென்மையாக இருப்பதால், 24 Ct தங்கத்தில் ஆபரணங்கள் செய்ய முடியாது இந்த 24 Ct தங்கத்தை தொழில்முறை ரீதியாக 24 பார்ட் என்கிறார்கள் அதாவது 24 பார்ட் என்பது 999.99% Purity தஙகமாகும் இதில் வெறும் 0.01% அளவு மட்டுமே வேறு உலோகம் சேர்க்கபட்டிருக்கிறது, 22 Ct என்பது 22 பார்ட் அதாவது 91.66 Purity தங்கமாகும். அதாவது சுருக்கமாக சொலவதானால் ஒரு பார்ட் என்பது 4.1666 % Purity ஆக கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் வெளி நாட்டு நகைகளில் உதாரணமாக மத்திய கிழக்கு நாடுகள் (வளைகுடா நாடுகள்) மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் 22 Ct தங்கம் 91.7 % Purity ஆக காணப்படும் சாத்தியக்கூறுகள் தெரிகிறது. ஆனால் நம் ஊரை பொருத்த வரை 91.66 % Purity என்பது அப்படியே இருந்தால் சந்தோஷம் தான்.

  தங்கத்தின் Purity-யை எப்படி தெரிந்துகொள்வது?

  24 Ct X 4.1666 = 99.99 % Purity
  23 Ct X 4.1666 = 95.83 % Purity
  22 Ct X 4.1666 = 91.66 % Purity
  20 Ct X 4.1666 = 83.33 % Purity
  18 Ct X 4.1666 = 74.99 % Purity

  இதை முறையை வேறு விதமாகவும் கையளாலம்.

  24 Ct / 24 Ct = 100 % Purity
  23 Ct / 24 Ct = 95.83 % Purity
  22 Ct / 24 Ct = 91.66 % Purity
  20 Ct / 24 Ct = 83.33 % Purity
  18 Ct / 24 Ct = 0.75 % Purity

  மேலே சொன்னது உங்களுக்கு புரித்திருக்கும் தானே? இப்படியே 8 Ct முதல் 22 Ct வரையிலான தங்கத்தின் Purity-யை தெரிந்துகொள்ளலாம். வழக்கமான கணித முறைகள் போலவே புள்ளிகளுக்கு அடுத்த வரும் இலக்கங்களை முழுமையான எண்ணாக மாற்றிக்கொள்ளலாம், உதாரணத்திற்கு 18 X 4.1666 = 74.99 % Purity என்பதை 75 % Purity என்பதாக கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

  சரி நீங்கள் 22 Ct தங்கத்தில் 1 Gram அளவில் தங்க நகையை வாங்குகிறீர்கள் என வைத்து கொள்வோம் இந்த 22 Ct தங்கம் முழுவதும் தங்கம் தானா? இந்த 1 Gram தங்கத்தில் உண்மையில் எத்தனை கிராம் சுத்தமான தங்கமும், எத்தனை மில்லி கிராம் செம்பும், வெள்ளியும் கலக்கபட்டிருக்கிறது என்பதை எந்த நகை கடையும் சொல்வதில்லை, ஆனால் அவர்கள் நேரடியாக சொல்லாவிட்டாலும் 916 KDM அல்லது 22 Ct என்று மட்டும் தான் சொல்வார்கள் எத்தனை பேருக்கு தெரியும் இது தான் தங்கத்தின் Purity என்பது, பெரும்பாலோனோர் இதை ஒரு தரப்படுத்தும் குறியீடாக தான் புரிந்து வைத்திருக்கிறார்கள் (ISO முத்திரை போல) என்பது நான் கண்ட உண்மை.

  உங்க கிட்ட 1 Gram (22 Ct) இருந்தால், அதை 24 Ct Purity தங்கமா மாத்தும் போது எத்தனை கிராம் 24 Ct தங்கம் கிடைக்கும்னு பார்க்கலாம்.

  Formula 1: 1 Gram x 22 Ct / 24 Ct = 0.917 Milli Gram
  Formula 2: 1 Gram / 1.09 = 0.917 Milli Gram

  இதில் இரண்டாவது பார்முலா என்பதில் 1.09 என்பது எப்படி வந்தது என கேள்வி எழுமேயானால் அதற்கான பதில் இது தான் 24 Ct / 22 Ct = 1.09, இதில் சிறிய அளவிலான மைக்ரோ மில்லி கிராம் அளவில் சிறிய மாறுதல்கள் இருக்கும்.

  இதே போல உங்க கிட்ட 1 Gram (24 Ct) இருந்தா அதை நீங்க 22 Ct நகையா மாத்தும் போது எத்தனை கிராம் 22 Ct தங்கம் கிடைக்கும்னு பார்க்கலாம்.

  Formula 1: 1 Gram X 24 Ct / 22Ct = 1.09 Gram (22 Ct)
  Formula 2: 1 Gram / 0.9166 = 1.09 Gram (22 Ct)

  தங்கத்தில் உலோகம் கலக்கும் அளவு.

  • 24 Ct தங்கத்தில், செம்பும், வெள்ளியும் 0.01% அளவில் கலந்து இருக்கும்.
  • 22 Ct தங்கத்தில், செம்பும், வெள்ளியும் 8.3 % அளவில் கலந்து இருக்கும்.
  • 18 Ct தங்கத்தில், செம்பு, வெள்ளி, நிக்கல் சேர்ந்து 25% அளவில் கலந்து இருக்கும்.
  • 14 Ct தங்கத்தில், செம்பு, வெள்ளி, நிக்கல், துத்தநாகம் மற்றும் பல்லேடியம் போன்றவை சேர்த்து 41.5 % அளவில் கலந்து இருக்கும்..

  நம்மில் பலரும் 50 ரூபாய்க்கு காய்கறி வாங்க சென்றால் ஆயிரம் கேள்வி கேட்டு, கத்தரிக்காயை அமுக்கி பார்த்து, வெண்டைக்காயை உடைச்சு பார்த்து வாங்குற நாம நகைக்கடைக்கு போன அந்த தங்கம் சுத்தமானது தானா? அதன் Purity சரிதானா? என எதையும் யோசிக்க மாட்டோம், கடைக்காரன் கொடுக்கிற ஒரு கூல்ட்டிரிங்க்ஸோ அல்லது டீயையோ குடிச்சிட்டு அவன் சொல்ற விலைக்கு வாங்கிட்டு வந்துகிட்டே இருப்போம், இப்படி நாம நம்புற ஒரு நகை கடைக்காரன் நம்ம கிட்ட எப்படி கொள்ளையடிக்கிறான் தெரியுமா, நம்மள ஏமாத்துறதுக்காகவே செய்கூலி, சேதாரம் வச்சுருக்காங்க.

  சேதாரம்னா என்ன ஒரு பொருளை இனி உபயோகிக்கவே முடியாத என்கிற அளவில் இருப்பதை தான் சேதாரமாகி விட்டது என்று எடுத்துக்கொள்லலாம். 1 கிராம் நகை எடுக்கிறதுக்கு 30 % செய்கூலி சேதாரம் கொடுக்க வேண்டியிருக்கு அதாவது பொருளோட மதிப்புக்கு 3/1 பாகத்துக்கு மேல கொடுக்க வேண்டியிருக்கு 1000 ரூபாய்க்கு நகை வாங்கின 300 ரூபாய் செய்கூலி சேதாரமா கொடுக்க வேண்டியிருக்கு.

  ஒரு பொருளை செய்வதற்கு செய்கூலி என்பது நியாயமானது வெறும் தங்க துகள்களாக, தங்க கட்டிகளாக இருப்பதை நமக்கு பிடித்த விதத்தில் டிசைன்கள் செய்து தருவதற்கு நாம் நிச்சியம் செய்கூலி கொடுத்து தான் ஆகவேண்டும். ஆனால் இதில் சேதாரம் என்பது தான் பகல் கொள்ளையாக இருக்கிறது தங்கத்தை பொருத்தவரை கழிவு என்பதே இல்லை, அப்படியே பயன்படுத்த முடியாத தங்கமாக இருந்தால் அதை நம்மிடம் தந்துவிட்டு அதற்கான பணத்தை பெற்றுக்கொள்வது தானே முறை, ஆனால் பொருளை நமக்கு தராமலே அவர்களே வைத்துக்கொண்டு நம்மிடம் சேதாரம் என்பதாக பணம் பறிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

  உங்களுக்கு தெரியுமா தங்க பட்டறைகளில் கூட்டி பெருக்கி குப்பயை கூட வெளியே அள்ளி போட்டு விடமாட்டார்கள் அத்தனையும் சேர்த்து வைத்து சலித்து விடுவார்கள், சலித்து முடித்தவுடன் குப்பையை வெளியே அள்ளி போட்டு விடுவார்கள் என நினைத்தால் அது தான் இல்லை அதையும் அவர்கள் இதற்கென்றே இருக்கும் சிறிய தொழிலாளிகளிடம் விற்று விடுவார்கள். இந்த குப்பை மண்ணை வாங்கியவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இதில் இருந்து ஏதாவது கிடைக்க கூடும், அப்படி கிடைக்குமென்று தான் நினைக்கிறேன் இல்லையென்றால் இந்த கழிவை வாங்க மாட்டார்கள் தானே? ஆக எப்படி பார்த்தாலும் நகை பட்டறைகளில் இருந்து சில பல மில்லி கிராம் தங்க துகள்கள் வெளியில் செல்லுமே தவிர கிராம் கணக்கில் போவதற்கான வாய்ப்பு மிக குறைவு, ஆனால் நாம் நகை வாங்கும் போது 30% செய்கூலி சேதாரம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் உண்மையில் நெடு நாட்களாக நகை கடைகளில் வாடிக்கையாளனை நூதனமாக ஏமாற்றி கொள்ளை அடிக்கபடுகிறது, எல்லாவற்றுக்கும் சட்டம் போடும் அரசு கூட இந்த பகல் கொள்ளை விஷயத்தில் அக்கரை எடுத்ததாய் தெரியவில்லை ஒருவேளை அரசு அதை மறைமுகமாக மனப்பூர்வமாக நகைக்கடை வியாபாரிகளை அனுமதிக்கிறது என்பதாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

  இந்தியாவில், தமிழகத்தில் பெரிய சில கடைகளில் மட்டுமே தங்கத்தின் Purity தெரிந்துகொள்ளும் வசதி இருக்கிறது மற்ற பெரும்பாலன கடைகளில் Purity பற்றி தெரிந்துகொள்ள வசதியில்லை, ஆனால் வெளி இடங்களில் Purity சோதனை செய்வதற்காகவே சில கடைகள் இயங்குகின்றன, ஆனால் நகை ஒரு இடத்தில் வாங்கி அதன் பின்னர் வேறொரு கடைக்கு சென்று சோதனை செய்வதென்பது நடைமுறைக்கு ஒவ்வாத காரியம்.. நம்பிக்கையோடு நகையை வாங்கும் நம்மை போன்ற மக்களை மறைமுகமாய் இப்படி பகல் கொள்ளை அடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது.

  வெளி நாட்டில் இருப்பவர்கள் ஆபரண தங்கம் வாங்க நினைத்தால் அங்கேயே 22Ct நகைகளாக வாங்குவது நல்லது, தங்கத்திற்கான Purity உத்ராவாதம் கிடைக்கும், செய்கூலியும் குறைவாய் இருக்குமென்று கேள்விபட்டிருக்கிறேன், அதே நேரத்தில் கொஞ்சம் புத்திசாலித்தனமாய் தங்க பிஸ்கட் வாங்கி வந்து ஊரில் செய்து கொள்ளலாம் என நினைத்தால் Purity-க்கு எந்த இந்தியாவில் எந்த உத்ரவாதமும் இல்லை வெளிநாட்டு நண்பர்கள் வாயிலாக அறிந்த வரை இந்தியாவில் தான் செய்கூலி சேதாரம் என்பது மிகவும் அதிகம். அதே நேரத்தில் வணிக நோக்கோடு தங்கம் வாங்க நினைத்தால் தங்க பிஸ்கெட்கள் வாங்கி வருதல் நலம், இந்தியாவில் நல்ல விலையும் கிடைக்கும். ஆனால் மத்திய அரசின் புதிய விதிப்படி ஆண் நபர் ஒருவர் இந்திய ரூபாய் 10,000 மதிப்பிலான தங்கம் மட்டுமே கொண்டு வரமுடியும், பெண் நபர் ஒருவர் 20,000 ரூபாய் மதிப்பிலான நகை மட்டுமே கொண்டு வரமுடியும் அதற்கு மேல் இருந்தால் கஸ்டம்ஸில் பணம் கட்ட வேண்டியதிருக்கும் ஒவ்வொரு பத்து கிராம் நகைக்கும் 450 ரூபாய் வீதம் + 3% வரி உட்பட கட்ட வேண்டியிருக்கும், பணம் கட்டி நகையை கொண்டு செல்ல விருப்பம் இல்லாதவர்கள் உங்கள் ஆபரணங்களை ஏர்போர்ட்டிலேயே வைத்து அதற்கான அடையாள சீட்டை பெற்றுக்கொள்வதன் மூலம் திரும்பி செல்லும் போது உங்கள் நகையை பெற்றுக்கொள்ள முடியும்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர் நாகு
  Read more...

  Feb 28, 2012

  17

  MP3 பாடலில் உங்கள் போட்டோவையும் இனைக்கலாம்.

 • Feb 28, 2012
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: கோபம் வாயை திறக்க வைக்கும் ஆனால் கண்களை மூடி விடும்.

  வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வாயிலாக MP3 பாடலில் ஒரு போட்டோவை எப்படி இனைப்பது என்பது பற்றி பார்க்கலாம். உங்களில் சிலராவது சில MP3 பாடல்களை விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கும் போது விண்டோஸ் மீடியா பிளேயரின் வலது பக்கம் அந்த பாடலின் படத்துடைய போட்டோவோ அல்லது பாடிய நபரின் போட்டோவோ பார்த்திருக்க கூடும் இல்லையா? இதைப்பற்றி சிலருக்கு தெரிந்திருக்கலாம் சிலருக்கு எப்படி என்ற கேள்வி இருக்குமேயானால் அதற்கான விடையைத்தான் இப்போது பார்க்க போகிறோம். இதற்கான வழிமுறைகள் மூன்று விதங்களில் இருக்கிறது நாம் முதல் இரண்டு வழிகளை பார்க்கலாம்.

  சரி ஏதாவது ஒரு MP3 பாடலை உங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரில் திறந்து கீழிருக்கும் படத்தில் இருப்பது போல Media Library கிளிக் செய்து நீங்கள் போட்டோ இனைக்க விரும்பும் டிராக்கை தெரிவு செய்து இடது கிளிக் செய்வதன் மூலமாக திறக்கும் மெனுவில் Advanced Tag Editor செலக்ட் செய்யவும்.  இப்பொழுது கீழிருப்பது போல ஒரு பாப் அப் விண்டோ திற்க்கும் அதில் Picture டேப் திறந்து நீங்கள் விரும்பும் போட்டோவை பிரவுஸ் செய்து அப்ளை கொடுத்து ஓக்கே கொடுக்கவும்.  இது நான் உங்களுக்காக இனைத்திருக்கும் படம் வலது பக்கம் பாருங்கள் ஒரு போட்டோ இனைத்திருக்கிறேன்.  இரண்டாவதாக MP3
  மென்பொருள் இருக்கிறது தேவைப்படுபவர்கள் தரவிறக்கி இன்ஸ்டால் செய்து அப்ளிகேஷனை ரன் செய்யவும் இதில் நீங்கள் போட்டோ இனைக்க விரும்பும் MP3 பாடல்களை ஏதாவது ஒரு போல்டரில் வைத்து கீழிருக்கும் படத்தில் குறிப்பிட்டு இருப்பது போல செய்து விடவும் அவ்வளவு தான் இனி உங்கள் MP3 பாடலை விண்டோஸ் மீடியா பிளேயரிலோ அல்லது www.videolan.org
  இயக்கினால் கூடவே நீங்கள் இனைத்த போடோவையும் காணமுடியும்.  VLC பிளேயரில் நான் ஒரு MP3 பாடலை ஓட விட்ட போது நான் இனைத்திருக்கும் போட்டோவும் கூடவே தெரிகிறது.  நண்பர்கள் கவணத்திற்கு சில நேரங்களில் உங்கள் VLC Player ஒருவேளை போட்டோவை காண்பிக்காமல் இருக்கலாம் அதற்கான தீர்வு http://forum.videolan.org
  அல்லது http://forums.mp3tag.de
  இருக்கிறது முயற்சித்து பாருங்கள் வேறேதுனும் சந்தேகம் இருப்பின் கருத்துரையில் கேளுங்கள் எனக்கும் தெரிந்தால் நிச்சியம் பதில் அளிக்கிறேன்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Feb 5, 2012

  8

  எக்‌ஷெல்லில் குறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு.

 • Feb 5, 2012
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: தன்னை புகழந்து கொள்வதும். பிறரை இகழ்வதும் பொய்க்கு இனையானது.

  வணக்கம் நண்பர்களே எக்‌ஷெல் பற்றி நம்மில் அநேகருக்கு தெரியும் கிட்டதட்ட இதுவும் ஒரு கடல் போலத்தான் எக்‌ஷெல்லில் எத்தனையோ விதமான காரியங்களை செய்யமுடியும் அந்தளவுக்கு அதன் திறன் இருக்கும், சொல்லப்போனால் எக்‌ஷெல்லுக்கென்றே ஒரு தளம் ஆரம்பித்து எழுதலாம் ஆனாலும் நான் இந்த பதிவின் வாயிலாக ஒரு எக்‌ஷெல்லில் குறிப்பிட்ட செல்களை மட்டும் எப்படி எடிட் செய்யவிடாமல் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

  நான் உபயோகிப்பது மைக்ரோசாப்ட்டின் ஆபிஸ் தொகுப்பு2010 (Microsoft Office 2010) ஆனால் இதே வழிமுறைதான் மற்ற தொகுப்புகளிலும் இருக்கும் சரி இப்போது புதிதாய் ஒரு எக்‌ஷெல் திறந்து கொள்ளுங்கள் (Start ->Run->type excel then enter) இனி பட்த்தில் காண்பித்திருப்பது போல மேலே இடது பக்கம் மூலையில் சிறிய கட்டம் போல இருக்கும் இடத்தில் இடது கிளிக் செய்வதன் மூலமாகவோ அல்லது Ctrl+A என்பதை அழுத்துவது மூலமாகவோ Format Cells என்பதை தெரிவு செய்யவும்.  இப்போது தங்களுக்கு படத்தில் இருப்பது போல ஒரு பாப் அப் விண்டோ திறந்திருக்கும் அதில் Protection என்கிற டேப் திறந்து அதில் இருக்கும் Locked என்பதன் அருகில் இருக்கும் டிக் குறியை (Tick Mark) எடுத்துவிட்டு ஓக்கே கொடுக்கவும்.  இனி எக்‌ஷெல் பைலில் தாங்கள் எந்த பகுதியை அல்லது எந்த செல்களை பூட்ட விரும்புகிறீர்களோ அந்த பகுதியை செலக்ட் செய்யவும் உதாரணமாக இரு வேறு பகுதிகளில் இரண்டு விதமான செல்களை பூட்ட நினைத்தால் முதலில் ஒரு பகுதியை செலக்ட் செய்த பின்னர் அடுத்த பகுதிக்கு செல்ல Ctrl கீயை அழுத்திக்கொண்டு அடுத்த பகுதியையும் செலக்ட் செய்யமுடியும். இப்படி செலக்ட் செய்த பின்னர் செலக்ட் செய்த பகுதியில் மவுஸ் பாயிண்டர் கொண்டு வந்து அந்த இடத்தில் மவுஸால் இடது கிளிக் செய்வதன் மூலம் மீண்டும் Format Cells தெரிவு செய்வதன் மூலம் திறக்கும் பாப் அப் விண்டோவில் Protection என்கிற டேப் திறந்து அதில் இருக்கும் Locked என்பதன் அருகில் ஒரு டிக் மார்க்(Tick Mark) குறியை ஏற்படுத்த்தி ஓக்கே கொடுக்கவும்.  இனி நாம் இதற்கான பாஸ்வேர்ட் கொடுத்து சேமித்து விட்டால் மற்றவர்கள் இந்த பைலில் நீங்கள் பூட்டியிருக்கும் செல்லில் எந்தவிதமான மாற்றஙக்ளையும் செய்யமுடியாது ஆனால் உங்கள் பைலை திறக்க முடியும். இறுதிகட்டமாக நீங்கள் செய்யவேண்டியது உங்கள் எக்‌ஷெல் டூல் வரிசையில் Review என்பதாக இருக்கும் டூல் கிளிக்குவதன் மூலம் அதிலிருக்கும் Protect Sheet என்பதை கிளிக்கி திறக்கும் பாப் அப் விண்டோவில் Select Unlocked Cells என்பதன் அருகில் ஒரு டிக் மார்க் (Tick Mark) கொடுத்து மேலே பாஸ்வேர்டுக்கான இடத்தில் பாஸ்வேர்ட் கொடுத்து ஓக்கே கொடுத்தால் மீண்டும் பாஸ்வேர்ட் கன்பர்மேசன் கேட்கும் அதையும் கொடுத்தால் அவ்வளவுதான்.  என்ன நண்பர்களே இப்போது நீங்கள் உங்கள் எக்‌ஷெல் பைலை சோதித்து பாருங்கள் நீங்கள் பூட்டியிருக்கும் செல்களில் எந்த மாற்றத்தையும் செய்யமுடியாது. சரி மொத்தமாவே பைலை யாரும் திறக்க முடியாத படி செய்யனுமா? வேர்டுக்கும் எக்ஸெலுக்கும் பூட்டு போடு பாருங்க உங்களுக்கு உதவியாய் இருக்கும். பதிவு உபயோகமா இருக்கா? நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Jan 30, 2012

  15

  வலைப்பதிவர்களுக்காக...உங்கள் வலைத்தளத்தில் காப்பி எடுக்கும் போது தானகவே உங்கள் பதிவின் உரலும்.

 • Jan 30, 2012
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: ஆபத்திற்கு உதவுவது எப்பொழும் சொந்தமல்ல நட்பு மட்டுமே.

  வணக்கம் நண்பர்களே இந்த பதிவு வலைப்பதிவுகள் எழுதும் நண்பர்களுக்காக, உங்களில் சிலர் சில வலைத்தளங்களில் ஏதாவது ஒரு தகவலை காப்பி எடுத்து வேர்ட் பைலிலோ அல்லது இன்ன பிறவற்றில் பேஸ்ட் செய்யும் போது நாம் காப்பி எடுத்த தகவலோடு அந்த பதிவின் உரலும் (Read more :-http://gsr-gentle.blogspot.com) கூடவே உங்கள் கிளிப்பேர்டில் வந்து இருக்கும் நாம் இந்த பதிவின் வழியாக பார்க்க போவதும் இதைப்பற்றி தான். நான் என்ன சொல்கிறேன் என்பது சரியாக புரியாதவர்கள் என் தளத்தில் இருந்து ஏதாவது ஒரு பகுதியை காப்பி எடுத்து பேஸ்ட் செய்து பாருங்கள் புரியும்.

  இனி நீங்கள் செய்ய வேண்டியது tynt™ publisher tools தளத்திற்கு சென்று அவர்கள் கேட்கும் தகவல்களை கொடுத்து உங்களுக்கென ஒரு அக்கவுண்ட் உருவாக்கவும்.  நீங்கள் அக்கவுண்ட் உருவாக்கியதும் கீழிருக்கும் படத்தில் உள்ளது போல ஒரு பக்கம் திறக்கும் அதில் உங்கள் தளத்துக்கான ஸ்கிரிப்ட் வந்திருக்கும், ஸ்கிரிப்ட் காப்பி எடுத்து உங்கள் பிளாக்கர் தளம் திறந்து Design-> Edit Html சென்று Ctrl +F அழுத்தி <head> என்பதை கண்டுபிடித்து அதற்கு மேலாக நீங்கள் காப்பி எடுத்த ஸ்கிரிப்ட்டை பேஸ்ட் செய்து விடவும் அவ்வளவு தான். முடிந்தால் ஸ்கிரிப்ட் பேஸ்ட் செய்யும் முன், ஸ்கிரிப்டின் தொடக்கத்தில் <!—XXXXXXX Start--> ஸ்கிரிப்டின் முடிவில் <!—XXXXXXX End--> இப்படியாக சேர்த்து விடுங்கள் XXXXXXX என்பதில் உங்களுக்கு புரியும் வகையிலான தலைப்பை கொடுத்து விடுங்கள் பின்னாளில் தேவையில்லையென்றால் நீக்குவதற்கு ஸ்கிரிப்ட் கண்டுபிடிக்க உதவியாய் இருக்கும்.  நீங்கள் இதில் கூடுதலாக மாற்றங்கள் செய்ய விரும்பினால் Customize Attribution கிளிக்குவதன் மூலம் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொள்ள முடியும்.

  கூடவே ஒரு செய்தி இதை வைப்பதால் மட்டும் காப்பி எடுத்தவர்கள் உங்கள் பதிவின் உரலை இனைப்பார்கள் என்று கணவு காண வேண்டாம் அழகாக டெலிட் செய்து விடுவார்கள் அது மட்டுமல்லாமல் இது போன்ற தளங்களில் காப்பி எடுக்கும் போது கூடவே வரும் URL வராமல் செய்வதற்கான வழிகளும் இனையத்தில் இருக்கிறது.

  என்ன நண்பர்களே பதிவு உங்களுக்கு உதவியானதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Jan 10, 2012

  3

  தங்க நாணயம் 99

 • Jan 10, 2012
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: மனிதன் பிறப்பது மெய்ஞனாக ஆனால் இறப்பதோ வஞ்சகனாக.

  வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் ஒரு கதையின் வழியாக இன்றைய எதார்த்த மனிதனின் நிலையை சொல்லிவிட முடியுமா என்றால் சொல்லிவிட முடியும் என்பது தான் உண்மை முன்பெல்லாம் குறும்படம் பற்றி அதிகம் தெரியாது ஆனால் இப்பொழுது யூடியுப்பில் நான் அதிகம் விரும்பி தேடி பார்ப்பது குறும்படங்களை தான்.. உண்மையில் ஆச்சரியமாய் இருக்கிறது 10 நிமிடத்திற்குள் எத்தனை அழகாய் ஆழமாய் அந்த உணர்வுகளை நமக்குள் உள்வாங்க வைத்துவிடுகிறார்கள் அதிலும் கனேஷ்குமார் டீம் ஒன்று இருக்கிறது அவர்களின் நகைச்சுவை குறும்படங்கள் நன்றாயிருக்கும் நேரமிருந்தால் பாருங்களேன்.

  நான் விரும்பும் தளங்களில் pkp
  , urssimbu
  , www.mybloggertricks.com
  இவைகளும் அடங்கும் இதில் பிகேபி
  குறித்தும் சிலம்பரசன்
  குறித்தும் சில பதிவுகளில் சுட்டிக்காட்டியிருக்கிறேன் ஆனால் பலமுறை பாகிஸ்தான் நண்பர் Mohammad Mustafa Ahmedzai எழுதும் www.mybloggertricks.com
  குறித்து ஏதாவது ஒரு பதிவில் வெளிப்படுத்த நினைப்பேன் ஆனால் குறிப்பிடுவதற்கான இடம் இல்லாததால் இதுவரை அவரை பற்றி குறிப்பிடமுடியவில்லை மேலும் அவர் எழுதுவது எல்லாமே பிளாக்கர் தொழில்நுட்பம், HTML நிரல்கள் தான் என்பதால் அதை எடுத்து மீண்டும் ஒரு மறுபதிப்பு செய்வதில் விருப்பமில்லை இவருடைய தள பதிவுகள் அதிலும் பிளாக்கர் தொழில்நுட்ப பதிவுகள் பரவலாய் இனையதளத்தில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என பேதமில்லாமல் பரவிக்கிடக்கிறது. மேலும் பிளாக்கர் தொழில்நுட்ப தளங்களின் தகவல்களுக்கு பிளாக்கர் தொழில்நுட்ப தளங்கள்
  .

  இப்படித்தான் சில நாட்களுக்கு முன்னர் Mohammad Mustafa Ahmedzai
  ஒரு குட்டி கதையை தன் தளத்தில் சொல்லியிருந்தார் அதையே கொஞ்சம் சுருக்கமாக நமது நடையில் உங்களுக்கு சொல்லுகிறேன், ஒரு வேளை நான் விரும்பியது போல யோசித்த்து போல உங்களையும் யோசிக்க வைக்கலாம்.

  ஒரு ஊரில் ஒரு நிலச்சுவான்தார் இருக்கிறார் அவரிடம் ஏரளாமான செல்வம், பணம், பொருள் இருக்கிறது அந்த ஊரில் 80% நிலங்களுக்கு சொந்தக்காரார், அந்த ஊரில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப்பேர் இவருடைய பண்ணையில் தான் வேலைபார்க்கிறார்கள் இவரிடம் கூலி வாங்கி தான் ஜீவனம் செய்கிறார்கள் ஆனால் இப்படிபட்ட செல்வந்தருக்கு மனதில் நிம்மதியில்லை ஆனால் என்ன குறை என்பதையும் அவரால் உணர்ந்துகொள்ள முடியவில்லை ஆனால் தன்னிடம் கூலி வாங்கி ஜீவணம் செய்யும் கூலித்தொழிலாளி தன் குழந்தையுடன் குடும்ப சந்தோஷமாக இருக்கிறானே இது எப்படி முடிகிறது என தன் வீட்டு மேனேஜரிடம் கேட்கிறார் உடனே மேனேஜர் அதற்கான ஒரு காரணத்தை சொல்லுகிறார் மேலும் கூடவே ஒரு ஆலோசனையும் சொல்லுகிறார்.

  ஆலோசனையின் படியே 99 தங்க்காசுகளை ஒரு பையில் இட்டு அதை அந்த ஏழை கூலித்தொழிலாளியின் வீட்டு வாசலில் இரவிலேயே போட்டுவிடுகிறார்கள் விடிந்த்தும் கூலித்தொழிலாளி கதவை திறக்கும் போது வாசலில் ஒரு பை இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் எடுத்து பிரித்து பார்க்கிறார் அதில் 99 தங்க காசுகள் ஒரு பக்கம் சந்தோஷம் ஒரு பக்கம் அதிர்ச்சி ஆனால் சந்தோஷத்தை கொண்டாடமல் மீண்டும் அந்த தங்க காசுகளை எண்ணி பார்க்கிறார் அதே 99 தங்ககாசுகள் மட்டுமே இருக்கிறது ஆனாலும் மீண்டும் எண்ணி பார்க்கிறார் அப்போதும் 99 தங்ககாசுகள் மட்டுமே இருக்கிறது அங்கும் இங்கும் தேடிப்பாத்தும் 100 தங்கக்காசுகள் கிடைக்கவில்லை ஆனால் இப்போது இவருக்கு 99 தங்கக்காசு கிடைத்த போது சந்தோஷப்படாமல் இல்லாத ஒரு தங்க காசுக்கு ஏங்குகிறார் 99 தங்க்காசுகளை 100 ஆக எப்படியும் மாற்றி விட முடிவு எடுக்கிறார்.

  கூலித்தொழிலாளி தன் மேனேஜரிடம் சென்று தனக்கு கொஞ்சம் பணத்தேவை இருப்பதாக சொல்லி தன்னை கூடுதல் நேரம் வேலை செய்ய அனுமதிக்கும்படி கேட்கிறார் அதற்கு மேனேஜரும் சம்மதிக்கிறார் அன்று முதல் எப்படியும் ஒரு தங்க காசு வாங்கி தன்னிடம் இருக்கும் 99 தங்க காசுகளை 100 தங்க காசுகளாக சேர்த்துவிட வேண்டுமென்ற வெறியில் பல மணி நேரம் உழைக்கிறார் இப்படி போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய மகன் அப்பா எனக்கு விளையாட்டு பொருள் வேண்டும் என கேட்கிறான் ஆனால் அதுவரை மகனிடம் கோபப்படாத தந்தை இப்போது மிகுந்த கோபத்துடன் இப்படி தேவையில்லாத செலவுகளுக்கு எல்லாம் பணத்தை வீணாக்க முடியாது என்பதாக கடினமான வார்த்தைகளை பிரயோகித்து மகனுடன் கூட நேரம் செலவலிக்காமல் ஒரு தங்க காசு மட்டுமே குறியாய் இருக்கிறார்.

  இதிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிந்துகொள்ள முடிகிறதா? இப்படித்தான் இன்று நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நமக்கு கிடைப்பதை வைத்து நாம் சந்தோஷப்படுவதில்லை 10 ரூபாய் கிடைத்தால் 20 ரூபாய் கிடைக்காதவென மனது ஏங்கும் இலட்ச ரூபாய் கிடைத்தால் மனம் கோடிக்கு (தெருக்கோடிக்கு அல்ல) ஆசைப்படும். நமக்குள்ளே இருக்கும் சந்தோஷத்தை நாம் பணத்திற்காகவும், செல்வத்திற்காகவும் மனதை ரணமாக்கி நம் சந்தோஷத்தையும் இழந்து நம் குடும்பத்தினர் சந்தோஷத்தையும் சேர்த்தே அழித்து விடுகிறோம்.

  உலகத்தில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் எல்லோரையும் பார்த்து நமக்கு பொறாமையோ, ஆற்றாமையோ இருக்கும் பொதுவாக அவர்களுக்கு என்ன அவர்களிடம் எல்லாம் இருக்கிறது என்பதாக நினைப்போம் ஆனால் அவர்கள் நிலையோ நாம் மேலே பார்த்த கூலித்தொழிலாளி கதையாகத்தான் இருக்கும்.

  எல்லாவற்றிலும் விதி விலக்குகள் இருப்பது போல பெரும் கோடீஸ்வரர்களிலும் சில விதி விலக்குகள் இருக்கிறார்கள் உதாரணத்திற்கு : வார்ன் பப்பட், பில்கேட்ஸ் போன்றவர்கள் தம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுப்பதற்கு தயாராய் இருக்கிறார்கள் அதிலும் வார்ன் பப்பட் கிட்டத்தட்ட தன் பெருவாரியான சொத்துக்களை டிரஸ்டுகளுக்கும் பொது நலன்களுக்கும் கொடுத்துவிட்டார் சமீபத்தில் கூட தன்னிடம் இருப்பதில் 1 மில்லியன் டாலர்கள் மட்டும் எனக்கு போதும் என்பதாக ஒரு செய்தி வந்திருந்தது இவர்களை போல செய்து விட யாருக்கும் மனம் வரும்?

  இன்னொருவர் இருக்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ் இவரு மேஜிக்கல் போன் (ஐபோன்) சொந்தக்கார்ர் முன்னவர்கள் தன்னிடம் இருப்பதை டிரஸ்டுகளுக்கு அள்ளிக்கொடுத்தனர் ஆனால் இவரோ இவர் வரும் முன்பே இயங்கிகொண்டிருந்த டிரஸ்டையும் தான் வந்ததும் நிறுத்தி விட்டார்...பார்த்தீர்களா மனிதர்கள் பலவிதம் அதில் ஒவ்வொருவரும் ஒரு விதம்...

  இந்த வாழ்க்கையில இப்ப இருக்கிற இந்த நிமிடம் நமக்கு சொந்தமானது முடிந்தவரை எதிர்ப்பார்ப்புகளை குறைத்துக்கொண்டாலே நமக்கு நிம்மதி வந்துவிடும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவச்சு வாழ பழகுவோம்?...பதிவு கோர்வையில்லாமல் இருக்கலம் ஆனால் சொல்ல வந்த விஷயம் புரிந்திருக்குமென்று நம்புகிறேன் விரும்பினால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், இது பற்றிய தங்களின் கருத்துக்களையும் பகிருங்களேன்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  Read more...

  Dec 31, 2011

  15

  போல்டர் பேக்கிரவுண்ட் கலர், புகைப்படம் மாற்றலாம் (Windows Folder Background Change)

 • Dec 31, 2011
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: அதிகமாய் பேசுவதனால் மட்டும் ஒருவன் அறிஞனாகி விட முடியாது.

  வணக்கம் நண்பர்களே புத்தாண்டு வாழ்த்துகள் 2012 இந்த பதிவின் வழியாக விண்டோஸின் டிபால்ட் பேக்கிரவுண்ட் மாற்றுவது பற்றி பார்க்கலாம் வழக்கமாக நம் கணினியில் விண்டோஸின் பேக்கிரவுண்ட் வெள்ளை நிறமாக மட்டும் இருக்கும், அந்த வெள்ளை நிறத்துக்கு பதிலாக நமக்கு பிடித்த ஏதாவது ஒரு நிறம் அல்லது நம் நிழல்படம் இப்படி ஏதாவது இருந்தால் கொஞ்சம் அழகாகவும் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியத்தையும் சேர்த்து கொடுக்கலாமே?

  சரி இதற்கு மூன்று வகையான வழிமுறைகள் இருக்கிறது முதலாவதாக ரிஜிஸ்டரியில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் போல்டரின் பேக்கிரவுண்ட் நிறத்தை மாற்ற முடியும் அல்லது நிழல்படத்தை வைக்க முடியும் ஆனால் இந்த முறை எனக்கு சரியாக செயல்படவில்லை விரும்புவர்கள் perishablepress.com அல்லது askvg.com சென்று முயற்சித்து பாருங்கள் சந்தேகங்களுக்கு அந்த கட்டுரையின் கருத்துக்களை அவசியம் படிக்கவும்.

  இரண்டாவதாக இதற்கென ஒரு மென்பொருள் இருக்கிறது இந்த மென்பொருள் வழியாக எந்த சிரமமும் இல்லாமல் எளிதாக மாற்றிக்கொள்ள் முடியும் உதவிக்கு கீழிருக்கும் படங்களை பாருங்கள், மென்பொருள் தரவிறக்கத்துக்கு
  Windows Folder Background Change செல்லுங்கள்.

  மென்பொருளை இன்ஸ்டால் செய்து திறந்து கீழிருக்கும் பட்த்தில் உள்ள வழிமுறைகளின் படி உங்கள் போல்டரின் நிறத்தை அல்லது நிழல்படம் மாற்றுங்கள்

  இப்பொழுது பாருங்கள் நான் எனது போல்டருக்கு இப்படி ஒரு நிழல்படம் சேர்த்திருக்கிறேன் இனி உங்கள் கணினியிலும் நீங்கள் கஷ்டமைஸ் செய்த போல்டரின் பின்னனி மாறியிருக்கும்.  இனி மூன்றவதாக XP Folder BackgroundChange தரவிறக்கி அதனுள்ளே இருக்கும் ieshwiz என்பதை காப்பி எடுத்து உங்கள் கணினி இயங்குதளம் Cயில் நிறுவப்பட்டிருக்குமேயானால் C:\WINDOWS\system32-ன் உள்ளே பேஸ்ட் செய்துவிட்டு மீண்டும் நீங்கள் தரவிறக்கிய போல்டரில் இருக்கும் ரிஜிஸ்டரி பைலை கிளிக்குவதன் மூலம் உங்கள் ரிஜிஸ்டரியை அப்டேட் செய்துவிடவும் அவ்வளவு தான் இப்போது இனி உங்கள் விருப்பம் போல கலரையோ அல்லது நிழல்படத்தையோ மாற்றிக்கொள்ள முடியும் அதற்கான வழிமுறைகளையும் கீழே இருக்கும் நிழல்படங்கள் வழியாக தெரிந்துகொள்ளுங்கள்.  அட என்ன நண்பா எல்லாமே விண்டோஸ் எக்ஸ்பிக்கு மட்டுமே இருக்கு விண்டோஸ் 7 பயன்படுத்துற எங்களுக்கு இல்லையா எனக் கேட்கும் அன்பர்களுக்காக windows 7 folder background change பயன்படுத்தி பாருஙக்ள்.

  இனி வேறு ஒரு மென்பொருள் பற்றியும் பார்க்கலாம் விண்டோஸ் 7ல் தானாகவே குறிப்பிட்ட கால இடைவெளியில் டெஸ்க்டாப் பேக்கிரவுண்ட் மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது ஆனால் நமது XPயில் இந்த வசதி இல்லை விருப்பபடுவர்கள் XP Auto Wall Paper Change தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் பிடித்திருந்தால் உபயோகபடுத்துங்கள் இல்லையென்றால் நீக்கி விடுங்கள்.  என்ன நண்பர்களே பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா, உபயோகமாக இருக்கிறதா? உங்களுக்கு உபயோகாமாகவே இருக்குமென்று நம்புகிறேன் பயன்படுத்தி பார்த்து உங்களின் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள் மேலும் சிலருக்கு உங்கள் கருத்துரை வழியாக பதிவுகள் எளிதாய் சென்றடையும்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர் நாகு
  Read more...

  Dec 23, 2011

  33

  போட்டோஷாப்பில் தமிழ் யூனிக்கோட் எழுத்துரு (100% satisfied)

 • Dec 23, 2011
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: துரதிஷ்டங்கள் எப்பொழுதும் அதற்காக திறந்து வைக்கப்பட்ட கதவின் வழியே வருகின்றன.

  வணக்கம் நண்பர்களே முன்பு போல் அதிகம் பதிவுகள் எழுத முடிவதில்லை எழுதும் நேரங்களில் நல்ல பதிவுகளை உபயோகமானவற்றை மட்டுமே உங்களுக்கு தர விரும்புகிறேன் அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு மிக உபயோகமாக இருக்குமென்று நம்புகிறேன்.

  முன்பெல்லாம் தமிழ் தட்டச்சு தெரிந்தால் மட்டுமே தமிழில் எழுதும் வாய்ப்பு இருந்து வந்தது கணினியில் அதிலும் எழுத்துரு பிரச்சினை பல தளங்களில் இப்பவும் இருக்கிறது ஆனால் அந்த பிரச்சினையை முற்றிலும் களைய வந்தது தான் யூனிக்கோட் எழுத்துரு முறை இந்த வகையில் எழுத்துரு பிரச்சினை வருவதில்லை இன்று தமிழில் இனைய பக்கங்கள் அதிகமாக வளர்ந்து வருவதற்கும் இந்த தமிழ் யூனிக்கோட் எழுத்துரு மிக முக்கிய காரணமாகும்.

  இப்பவும் யூனிக்கோட் முறை தெரிந்தாலும் அதை நேரடியாக போட்டோஷாப்பில் பயன்படுத்த முடியாது இருப்பினும் சில நண்பர்கள் சில வகை மென்பொருள்களை பயன்படுத்தி போட்டோஷாப்பில் தமிழ் உள்ளிட முடியும் என்றாலும் அவசியம் தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் இந்த முறை எல்லோருக்கும் நிச்சியமாய் வசதியாய் இருக்காது அதிலும் பல வகையான எழுத்துருக்குள். உதாரணமாக: Bamini, Shreelipi, Tab, Tam, TSCII, Vanavil, Senthamiz இப்படி நிறைய இருக்கிறது.

  இனி விஷயத்திற்கு வருகிறேன் நீங்கள் போட்டோஷாப்பில் அல்லது மைக்ரோசாப்ட் ஆபிஸ் தொகுப்புகளில் தமிழ் யூனிக்கோட் எழுத்துருக்களை பயன்படுத்தி விதவிதமான எழுத்துருக்களுக்கு மாற்றி அமைத்துக் கொள்வதுடன் போட்டோஷாப்பில் கிட்டத்தட்ட 512 வகையான தமிழ் ஃபாண்ட்களை நீங்கள் உபயோகிக்க முடியும் ஆனால் நான் கொடுத்திருக்கும் இந்த பொதியில் கிட்டதட்ட 800 வகையான தமிழ் ஃபாண்ட்கள் இருக்கிறது மேலும் இதில் மைக்ரோசாப்ட் டிபால்ட் (Default) ஃபாண்ட்களும் இருக்கிறது அதில் 512 தமிழ் ஃபாண்ட்களை பயன்படுத்த உங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரியவேண்டிய அவசியமில்லை அதுதான் இந்த பதிவின் விஷேசம்.

  எல்லாவற்றையும் தனித்தனியாக பிரித்து எடுத்து தருவதில் சிரமம் இருந்ததால் மொத்த ஃபாண்டுகளையும் ஒரு பொதியாய் சேர்த்து விட்டேன் எனவே காப்பி எடுத்து உங்கள் ஃபாண்ட் போல்டரில் (Font Folder) சேமிக்கவும் அப்படி சேமிக்கும் போது மைக்ரோசாப்ட் டிபால்ட் (Default) ஃபாண்ட்கள் முன்பே உங்கள் கணினியில் இருப்பதால் அதைப்பற்றி கவலைப்படாமல் Over Write செய்து விடவும் அதிலும் குழப்பம் இருந்தால் பாப் அப் மெனு வரும் போது ஓக்கே கொடுக்கவும்.

  இனி இந்த Photoshop Tamil Unicode Fonts பொதியை தரவிறக்குங்கள் பொதியின் அளவு 185 எம்பி அளவுடையது, இந்த பொதியின் உள்ளே கிட்டதட்ட 512 தமிழ் யூனிக்கோட் ஃபாண்ட்கள், 300க்கும் மேலான தமிழ் ஃபாண்ட்கள் (உபயோகிக்க தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்), 1300க்கும் மேலான ஆங்கில வகை ஃபாண்ட்கள் இதில் பலவும் மைக்ரோசாப்ட்டின் டிபால்ட் வகையை சேர்ந்தவை, மற்றும், ஃபாண்ட் மேனேஜர், தமிழ் யூனிக்கோட் எழுதுவதற்கான NHM Writer மற்றும் யூனிக்கோட் எழுத்துருக்களை வேறு வகையான எழுத்துருக்களில் மாற்றம் செய்வதற்கு NHM Convertor மேலும் ஒரு பிடிஎப் தொகுப்பு இது மிக முக்கியமானது இதில் ஃபாண்ட் மாதிரி எழுத்து, அதன் பெயர், அது எந்த வகையான எழுத்துரு வகையை சேர்ந்த்து என்பதை தொகுத்திருக்கிறேன்.. இதை தரவிறக்கி பயன்படுத்தும் போது உங்களுக்கு மிக சாதரணமாக தெரிவதோடு எளிதாக இருக்கும் ஆனால் இதை செய்து முடிப்பதற்கு ஒரு வார காலம் தேவைப்பட்டது ஆரம்பத்தில் என் சொந்த உபயோகத்திற்காக தான் அட்டவனைபடுத்த தொடங்கினே இறுதியில் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற அடிப்படையில் உங்களுக்காகவும்.

  முதலில் உங்கள் கணினியில் NHM Write இன்ஸ்டால் செய்யவும், இன்ஸ்டால் செய்யும் போது தமிழை தெரிவு செய்யவும் நீங்கள் உங்கள் கணினியில் நிறுவலை முடித்ததும் டாஸ்க்பாரின் வலது பக்க மூலையில் ஒரு மணி போன்ற ஒன்று வந்திருக்கும் அதை கிளிக் செய்து தமிழ் பொனாட்டிக் யூனிக்கோட் என்பதை தெரிவு செய்யவும் அல்லது நேரடியாக கீபோர்டில் Alt+2 என்பதை அழுத்தினால் போதும், நீங்கள் Alt+2 என்பதை அழுத்தியவுடன் அதன் நிறம் பொன்நிறமாக மாறியிருக்கும்.

  இனி தமிழ் யூனிக்கோட் தட்டச்சு செய்யவேண்டியது தான் உதாரணமாக நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபிஸ் தொகுப்பில் “ஸ்ரீராம், ஸ்ரீதர், ஞானசேகர், புரியாத கிறுக்கல்கள்” என்று தட்டச்சு செய்ய நினைக்கிறீர்கள் என்பதாக இருந்தால் ஆபிஸ் தொகுப்பை திறந்து NHM Writer ல் Alt+2 அழுத்தி அதன் பின்னர் “ஸ்ரீராம், ஸ்ரீதர், ஞானசேகர், புரியாத கிறுக்கல்கள்” என்பதற்கு நீங்கள் sriram, sridhar, gnanasekar, puriyaatha kiRukkalkaL என்பதாக தட்டச்சினால் போதும்.

  புரியவில்லையா? ammaa – அம்மா, appaa – அப்பா, sakOthari- சகோதரி, இப்படி தமிழை நேரடியாக ஆங்கிலத்தில் எழுதுங்கள் சில இடங்களில் பிரச்சினை வரும் உதராணத்திற்கு sakOthari என்பதில் O மட்டும் கேப்பிட்டல் எழுத்தை பயன்படுத்தியிருக்கிறேன் இதையே sakoothari இரண்டு o பயன்படுத்தியும் எழுதலாம், நீங்களாகவே முயற்சி செய்யும் போது எல்லாம் எளிதில் வந்துவிடும் தேவைப்பட்டால் அவர்களின் உதவிப்பக்கத்தை பார்க்கவும்.  இப்போது நீங்கள் தமிழை எழுத கற்றுக்கொண்டு வீட்டீர்கள் இனி அடுத்த கட்டமாக NHM Convertor பற்றி பார்க்கலாம், நாம் மேலே உள்ள சில பாரக்களில் பார்த்த்து போல நமக்கு தெரிந்த யூனிக்கோட் எழுத்துருக்களை இந்த NHM Convertor வழியாக Bamini, Shreelipi, Tab, Tam, TSCII, Vanavil போன்ற எழுத்துருக்களுக்கு மாற்றிக்கொள்வதன் மூலம் அந்த வகையான எழுத்துருக்களையும் நாம் யூனிக்கோட் வழியாக மாற்றி நாம் பயன்படுத்தலாம். மேலும் சில யூனிக்கோட் எழுதி தமிழில் எழுதுவது எப்படி?

  கீழே படத்தில் இருப்பது போல Input- 1 என்பதில் உங்கள் தெரிவு Unicode எனபதாக இருக்கட்டும் (தேவைப்பட்டல் Bamini, Shreelipi, Tab, Tam, TSCII, Vanavil இவற்றை யூனிக்கோட் முறைக்கும் மாற்றிக்கொள்ளலாம்) Output – 2 என்பதில் எந்த வகையான எழுத்துருக்கு மாற்ற விரும்புகிறீர்களோ அதை தெரிவு செய்யவும், Output – 3 என்பதை கிளிக்குவதன் மூலம் கன்வெர்ட் நொடிக்குள் நடந்து முடிந்து விடும் Copy Converted text – 4 இங்கு நீங்கள் மாற்றி டெக்ஸ்ட் இருக்கும் அதை காப்பி எடுத்து உங்களுக்கு தேவையான இடத்தில் பயன்படுத்த முடியும் அது போடோஷாப்பாக இருக்கலாம், ஆபீஸ் தொகுப்பாக இருக்கலாம்.

  இங்கு நேரடியாக நீங்கள் தட்டச்சு செய்யலாம் அல்லது வேறு இடத்தில் இருந்து காப்பி எடுத்தவற்றை பேஸ்ட் செய்வதன் மூலமும் கன்வெர்ட் செய்துகொள்ள முடியும்.  இனி விளக்குமுறை வழியாக பார்த்து விடலாம் நான் முன்பே சொன்ன பிடிஎப் தொகுப்பு இது தான் கீழே படத்தில் பாருங்கள்
  நான் ஒரு எழுத்து மாதிரியை தெரிவு செய்திருக்கிறேன் அந்த ஃபாண்ட் பெயர் TAM-Tamil184 என்பதாகும் அந்த எழுத்து மாதிரியோ Tam வகையை சேர்ந்தது
  எனக்கு “ஸ்ரீராம் , ஸ்ரீதர், ஞானசேகர், புரியாத கிறுக்கல்கள்” என்பதை நான் குறிப்பிட்டிருக்கும் எழுத்து வடிவில் கொண்டு வர விருப்பம்.

  நீங்கள் கவணிக்க வேண்டிய விஷயம் நீங்கள் விரும்பும் எழுத்து மாதிரி எந்த வகையை சேர்ந்தது மற்றும் அந்த ஃபாண்ட் பெயர் குறித்து வைத்துக் கொள்ளவும்.

  நான் விரும்பும் மாதிரி ஃபாண்ட் பெயர் TAM-Tamil184 அந்த உருத்தொகுப்பு Tam வகையை சேர்ந்தது அதனால் நான் எனது யூனிக்கோட் எழுத்துருவை Unicode to Tam என்பதாக கன்வெர்ட் செய்யப்போகிறேன். இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்குமென்று நம்புகிறேன்.  சரி நான் இப்போழுது NHM Convertor திறந்து தட்டச்சு செய்வது மூலமாகவோ அல்லது காப்பி எடுத்து பேஸ்ட் செய்வது மூலமாகவோ NHM Convertor உள்ளே கொண்டு வந்துவிட்டேன் அதில் முதலாவதாக Unicode என்பதை தெரிவு செய்திருக்கிறேன் அடுத்ததாக Tam என்பதை தெரிவு செய்திருக்கிறேன் அடுத்ததாக கன்வெர்ட் கொடுத்தேன் கீழே இருக்கும் படத்தை பாருங்கள் யூனிக்கோட்டில் எப்படி இருந்த எழுத்து Tam வகைக்கு கன்வெர்ட் செய்து முடித்ததும் எழுத்துரு மாற்றம் அடைந்திருப்பதை இனி கன்வெர்ட் செய்த எழுத்துகளை நீங்கள் எங்கே பயன்படுத்த விரும்புகிறீர்களோ அங்கே ஒட்டி (Paste) செய்து எழுத்துருவுக்கான ஃபாண்ட் மாற்றி விடுங்கள் அவ்வளவு தான்.  நான் மாற்றிய எழுத்துருவை போடோஷாப்பில் பயன்படுத்த விரும்புகிறேன் எனவே நான் போட்டோஷாப்பில் எழுத்துக்களை பேஸ்ட் செய்து அந்த டெக்ஸ்ட்டை செலக்ட் செய்து ஃபாண்ட் TAM-Tamil184-க்கு மாற்றி விட்டேன் கீழிருக்கும் படத்தை பாருங்கள் நான் முதலில் NHM Convertor-ல் இருந்து காப்பி எடுத்துக்கொண்டு வந்த டெக்ஸ்ட் முதலாவதாக இருக்கிறது, அதற்கு கீழே நான் அதற்கு சரியான ஃபாண்ட் TAM-Tamil184 என்பதை மாற்றியதும் அதன் எழுத்துருவும் மாறியிருக்கிறது.  மேலே சொன்ன ஃபாண்ட் மேனேஜரின் மாதிரி இதில் நீங்கள் ஏதாவது ஒன்றை எழுதி அதன் மாதிரி எப்படி இருக்குமென்பதை தெரிந்துகொள்ள வசதியாய் இருக்கும்.  என்ன நன்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் மேலும் இது தெரியாத நபர்களையும் சென்றடையும் விதமாக உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்களேன்.சந்தேகம் இருப்பின் கேளுங்கள் எனக்கு தெரிந்தவரை உதவ முயற்சிக்கிறேன்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர் நாகு
  Read more...

  Dec 8, 2011

  13

  பிடிஎப் ரிப்பேர் டூல் (PDF Repair Tool)

 • Dec 8, 2011
 • ஜிஎஸ்ஆர்
 • ஒரு வரி கருத்து: புதிதாக புகழ் வராவிட்டால் பழைய புகழும் தானே போய்விடுகிறது.

  வணக்கம் நண்பர்களே நம்மில் அநேகம் பேர் பிடிஎப் பயன்படுத்துபவர்கள் உண்டு அதற்கான காரணம் பிறருக்கு ஏதாவது ஒரு தகவலை அனுப்ப நினைக்கும் பொழுது ஃபாண்ட் (Font) பிரச்சினையை தவிர்க்க உதவும். அதே நேரத்தில் நாம் இனையத்தில் இருந்து தரவிறக்கிய பிடிஎப் தொகுப்பு புத்தங்கங்கள் அல்லது நம்மிடம் இருக்கும் ஏதாவது தொகுப்புகள் சில நேரங்களில் ஏதாவது ஒரு அறியாத காரணத்தில் திறக்க முடியாமலோ அல்லது பிழைச்செய்திகளையோ நாம் கண்டிருக்ககூடும். அந்த மாதிரி நேரங்களில் சில நேரம் நம்மால் பிடிஎப் தொகுப்பை திறக்க முடியாமல் போய்விடுவதும் உண்டு.

  நாம் இந்த பதிவின் வழியாக இந்த பிரச்சினையை தீர்ப்பது பற்றி பார்க்கலாம் இந்த மென்பொருள் எத்தனை விதமான பிழைகளை சரிசெய்து தரும் என்பது உறுதியாக என்னால் கூற இயலவில்லை ஆனால் நான் சோதித்து பார்த்த வரையில் சிதிலமடைந்த (Corrupt) பிடிஎப் தொகுப்புகளை அழகாய் சில நிமிடங்களில் ரிப்பேர் செய்து தந்துவிடுகிறது.

  இந்த மென்பொருளின் பயன்பாடு நமக்கு அடிக்கடி தேவைப்படுவதில்லை, நாம் எதிர்பார்க்காத நேரத்தில் சில நேரம் நமக்கு தேவைப்படும் எனவே இதை தரவிறக்க விரும்புகிறவர்களுக்கு பிடிஎப் ரிப்பேர் (PDF Repair) மேலும் தரவிறக்க விருப்பம் இல்லாதவர்கள் முடிந்தால் முகவரியை குறித்துக்கொள்ளுங்கள் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

  வழக்கம் போலான இன்ஸ்டாலேசன் முறைதான் இயக்குவதற்கும் பெரிதாய் சிரமம் இருக்காது சிதிலமடைந்த (Corrupt) பிடிஎப் தொகுப்பை தெரிவு செய்து மீண்டும் சேமிக்க விரும்பும் இடத்தை (Directory) தெரிவு செய்து Start Repair என்பதை கிளிக்கினால் போதும் சில நிமிடங்களில் சிதிலமடைந்த பிடிஎப் தொகுப்பை திறந்து படிக்க முடியும்.  என்ன நண்பர்களே பதிவு தற்போது உங்கள் உபயோகப்பட்டிருக்கவோ அல்லது சோதித்து பார்த்திருக்கவோ முடியாது என்பதை உணர்கிறேன் அதே நேரத்தில் உங்களுக்கு எப்பொழுதாவது தேவைப்படலாம்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர் நாகு
  Read more...

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர