Sep 8, 2010

14

பாஸ்வேர்ட் இட்ட சிடி டிரைவ் திறக்கலாம்

  • Sep 8, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: அறிவுறை விளக்கெண்ணெய் போன்றது கொடுப்பது சுலபம், நடப்பது தான் கடினம்.

    வணக்கம் நண்பர்களே நாம் தினந்தோறும் எத்தனையோ விதமான மென்பொருள்களை பார்க்கிறோம் சில நமக்கு பிரயோசன்படுவதாய் இருக்கும் சில நமக்கு எந்த விதத்திலும் உதவும் வகையில் இருக்காது நாம் பார்க்க போகும் இந்த பதிவும் அப்படிப்பட்ட ஒன்று தான் ஒரு வேளை உங்கள் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கலாம் அல்லது உபயோகமில்லாத பதிவாகவும் இருக்கலாம்.

    சமீப காலங்களாக பென்டிரைவ் அதிகமான புழக்கத்தில் இருப்பதாலும் அதில் அதன் வழியாக வைரஸ் வர சாத்தியகூறு அதிகம் உள்ளதாலும் சில கணினிகளில் அதை பயன்படுத்த முடியாதவாறு செய்திருப்பார்கள் அதை பற்றி நாம் ஏற்கனவே நம் பதிவின் வழியாக பார்த்திருக்கிறோம் ஒரு வேளை அப்படிப்பட்ட கணினிகளில் எப்படி தகவல்களை காப்பி எடுப்பது என்பது பற்றியும் பார்த்திருக்கிறோம் இதெயெல்லாம் ஆராய்ந்த சில நண்பர்கள் தகவல்களை கையால குறுந்தகடு பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள் இந்த விஷயம் வீடு முதல் அலுவலகங்களில் உள்ள கணினிகளுக்கும் பொருந்தும்.

    நாம் நம்பும் சிலர் கூட நம் கணினியில் தகவலை எடுக்கக் கூடும் எனவே இந்த கணினியில் சிடி டிரைவ் திறக்கவிடாமல் செய்துவிட்டால் ஒருவேளை தகவல்கள் திருடப்படுவதை தடுக்கலாம் நான் இங்கே சில மென்பொருள்களை பரிந்துரை செய்கிறேன் CD DVD Locker அல்லது CD DVD Locker அல்லது CD DVD Locker அல்லது CD DVD Locker
    கணினியில் நிறுவிக்கொண்டு அதில் தேவையான கீ செட்டிங் செய்து பாஸ்வேர்ட் செட் செய்து விடுங்கள். இனி உங்களை அறியாமல் யாரும் உங்கள் டிரைவின் வழியாக தகவல்களை குறுந்தகடில் பதிய முடியாது.

    சரி இப்போது நீங்கள் பாதுக்காப்புக்காக ஏற்படுத்திய பாஸ்வேர்ட் மறந்துவிட்டீர்கள் என்ன செய்வீர்கள் ஒன்றும் பதற வேண்டியதில்ல இங்கு அதற்கான நான்கு விதமான மென்பொருள்கள் இருக்கின்றன தேவைப்படுபவர்கள் CD DVD Ejector அல்லது CD DVD Ejector அல்லது CD DVD Locker அல்லது CD DVD Ejectorஅல்லது CD DVD Ejector தரவிறக்கவும் இந்த நான்கு மென்பொருள்களும் பாஸ்வேர்ட் இட்ட திறக்க முடியாத சிடி, டிவிடி டிரைவ்களை அழகாக திறந்து விடும் இது பற்றி நான் முன்னமே எழுதிய பதிவு தங்களின் மேலதிக தகவலுக்காக படித்து பாருங்கள்.

    என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருக்கிறதா, இருப்பின் இந்த பதிவு மேலும் பலரை சென்றடையும் வகையில் உங்களின் சில நிமிடங்களை இதற்கென செலவழித்து வாக்கும், பதிவை பற்றிய கருத்துரையும் எழுதுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Sep 7, 2010

    9

    வோடாபோனும் விளங்காத கஷ்டமர்கேரும்

  • Sep 7, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: செல்வாக்கை நாம் தேடுவதை விட அது நம்மை தேடி வர வேண்டும்.

    வணக்கம் நண்பர்களே இது சமீபத்தில் நடந்த சம்பவம் சாதரணமாகவே இந்த மொபைல் சர்வீஸ் வழங்குபவர்களின் தொல்லை பல விதத்திலும் இருக்கும் அவர்களின் ஒரு எண்ணை நாம் தடை செய்து வைத்திருந்தாலும் வெவேறு எண்களில் இருந்து பல தொல்லைகள் கொடுப்பார்கள் அதையெல்லாம் நாம் சகித்துக்கொள்வோம் ஆனால் சமீபத்தில் மொபைல் வழியான திருட்டுத்தனங்களை ஒரு கும்பல் ஆரம்பித்துள்ளது.

    சமீபத்தில் ஒரு அழைப்பு பெண் பேசுகிறார் வணக்கம் நாங்கள் வோடாபோனில் இருந்து அழைக்கிறோம் எங்களின் சிறப்பு சலுகை திட்டத்தில் தென் மாவட்டத்தில் நாங்கள் வழங்கியுள்ள அலைபேசி எண்களில் பத்து எண்களை தெரிவு செய்து அவர்களுக்கு இலவசமாக எல்ஐசி காப்பீட்டு திட்டத்தில் ஒரு இலட்சம் தர இருக்கிறோம் அதில் தெரிவு செய்தவர்களின் பட்டியலில் தாங்களும் ஒருவர் என்பதாக அழைப்பு அழைப்பு வந்த எண்ணோ மதுரையிலிருந்து, நான் என்ன என்று யோசிப்பதற்குள்ளாகவே அவர்கள் நம்மை ஏமாற்றும் விதமாக நம் முகவரியையும் சரியாக சொல்கின்றனர். நான் பொதுவாக இந்த இலவசம் அதிர்ஷ்டம் மண்ணாங்கட்டி இதற்கெல்லாம் எளிதில் நான் என்னை விட்டுக் கொடுப்பதில்ல, அதிலும் அவர்களிடம் அன்று சாயந்திரமே வந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென்று ஒரு பொய்யான முகவரியையும் கொடுத்தார்கள்.

    வோடாபோன் கஷ்டமர் கேர் தொடர்புகொண்டு என் அலைபேசிக்கு தங்களின் நிறுவணத்தில் இருந்து பேசுவதாகவும் அதில் எனக்கு ஒரு இலட்சம் காப்பீட்டு தொகை இன்சூர் செய்து தருவதாகவும் தகவல் வந்தது இது போல ஒரு திட்டம் உங்கள் நிறுவணம் செய்கிறதா எனக் கேட்டால் அதற்கு அவரின் பதில் ஒரு வேளை இருக்கலாம் என்கிறார் இதற்கு பெயர் தான் கஷ்டமர் கேர் சேவையா? சரி இந்த வீணாப்போன கஷ்டமர்கேரில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை போலும் என நினைத்து அவர்களின் வலைத்தளத்தில் பார்த்தால் இது போல எந்த அறிவிப்பும் இல்லை ஒரு வழியாக மீண்டும் கஷ்டமர் கேர் தொடர்பு கொண்டபோது இப்போது பேசியவர் மிகவும் தெளிவாக அப்படி எதுவுமில்லை இது யாரோ விஷமிகள் செய்யும் வேலை எனவும் இது குறித்தான தகவலை எங்கள் கவணத்துக்கு கொண்டுவந்ததுக்கு நன்றி என்பதாக முடித்துக்கொண்டார்.

    நான் இது பற்றி நண்பர்களிடம் பேசிய போதுதான் உண்மை புரிகிறது இதற்கு முன்னதாகவே எனது தெருவில் நிறைய பேருக்கு இது போல அழைப்புகள் வந்திருக்கின்றன அதில் சிலர் நேரடியாக அவர்கள் கொடுத்த பொய்யான முகவரிக்கும் சென்றிருக்கின்றனர், அப்படிச் சென்ற எனக்கு தெரிந்த ஒருவர் நேரடியாக சென்ற போது அங்கிருந்த நான்கு இளைஞர்கள் இது போல நூற்றுக்கணக்கான நபர்களை வரவழைத்திருந்தாகவும் அவர்களிடம் சில கேள்விகள் கேட்டு இறுதியில் அவருக்கு மட்டும் ஒரு பத்திரம் கொடுத்திருக்கிறார்கள் அதோடு அல்லாமல் நாங்கள் உங்கள் முதலாண்டுக்கான தொகையை அடைத்து விட்டோம் இனி நீங்கள் செய்துகொள்ளுங்கள் என கூறியிருக்கிறார்கள்.

    அந்த அண்ணனும் அதை பொறுமையோடு வாங்கி வந்திருக்கிறார், அவரிடம் பேசிய போதுதான் அவர்கள் பிராடு என்பது தெரிகிறது இனி அந்த பத்திரத்தை எல்ஐசி அலுவலகம் கொண்டு சென்று காண்பித்தால் அவர்கள் என்ன செய்வார்கள் இதன் மீது ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா? இது போல் நீங்கள் யாரவது அனுபவப்பட்டிருக்கிறீர்களா? இதில் எனக்கு புரியாதது இதனால் அந்த விஷமிகளுக்கு கிடைக்கும் இலாபம் என்ன? எப்படி நம் முகவரியை சரியாக சொல்கிறார்கள் யாரவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் என்னைப்போல பிறருக்கும் உதவியாக இருக்கும்.

    இது போல அழைப்புகள் உங்களுக்கு வந்தால் முதலில் கஷ்டமர் கேர் தொடர்புகொண்டு கேளுங்கள் அவர்கள் வலைத்தளத்தில் பாருங்கள், மீண்டும் அடுத்த முறை அதே எண்ணில் உங்களை தொடர்புகொள்ள முடியாதவாறு செய்யஇங்குசிறப்பு மென்பொருள் இனைத்திருக்கிறேன் தரவிறக்கி பயன்படுத்தவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Sep 6, 2010

    17

    எக்‌ஷெல்லில் கேமரா பிக்ஸிங்

  • Sep 6, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: அரசியல் ஒரு சாக்கடை தான் இறங்கி சுத்தம் செய்யாத வரை.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக நாம் பார்க்க போவது எக்‌ஷெல்லில் ஒரு குறிப்பிட்ட பாகத்தை எப்படி ஸ்கிரீன் ஷாட் எடுப்பது என்பதை பற்றித்தான் நாம் எல்லோருக்குமே தெரியும் கணினியில் ஸ்கிரீன் ஷார் எடுப்பதற்கு நம் கீபோர்டில் Print Scrn Sys Rq என்கிற பெயரில் ஒரு கீ இருக்கும் அதை அழுத்துவதன் மூலம் நாம் கணினியில் ஸ்கீரின் ஷாட் எடுக்க முடியும் அது மொத்த திரையையும் பிடித்து விடும் ஆனால் நாம் பார்க்க போவதோ எக்‌ஷெல்லில் நமக்கு தேவையான பாகத்தை மின்னஞ்சலில் அனுப்புவதற்கோ அல்லது வேறு ஏதாவது அலுவல் காரணங்களுக்காகவோ சில நேரம் தேவைப்படலாம்.

    முதலில் எக்‌ஷெல் 2003-ல் எப்படி இதனை கொண்டு வருவது என பார்க்கலாம்.

    எக்‌ஷெல் பைலை திறந்து கொண்டு அதில் Tools திறக்கவும் அதில் Customize என்பதை கிளிக்கவும்.



    இபோது புதிதாய் ஒரு பாப் அப் விண்டோ திறந்திருக்கும் அதில் Commands திறந்து இடப்பக்கம் இருக்கும் Categories-ல் Tools கண்டுபிடிக்கவும் இனி வலது பக்கம் பாருங்கள் Camera என இருக்கும் இனி இந்த Camera-வின் மேல் கர்சரை அழுத்தி பிடித்து Drag & Drop முறையில் மேலே மெனு பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் இழுத்து விடவும் அவ்வளவுதான் இனி உங்கள் எக்‌ஷெல்லில் கேமரா பங்ஷன் வந்துவிடும்.



    இனி எக்‌ஷெல் 2007-ல் எப்படி இதனை கொண்டு வருவது என பார்க்கலாம்.

    எக்‌ஷெல் பைலை திறந்துகொண்டு மேலிருக்கும் ஆபிஸ் பட்டனை கிளிக்கி அதில் Excel Options என்பதை கிளிக்கவும்.



    இப்போது ஒரு பாப் அப் விண்டோ வந்திருக்கிறதா அதில் Customize என்பதை கிளிக்கவும் இனி All Commands என்பதை தெரிவு செய்யவும் இனி கீழே தேடுங்கள் Camera இருக்கும் சிரமாமாக இருந்தால் C என அழுத்துவதன் எளிதாய் கண்டுபிடிக்கலாம் இனி Camera செலக்ட் செய்து Add கொடுக்கவும் கடைசியில் ஓக்கே கொடுக்கவும்.



    இனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் புதிதாக கேமராவும் வந்திருக்கும்.



    இனி நீங்கள் ஸ்கிரீன் ஷாட் எடுக்க வேண்டிய பகுதியை செலக்ட் செய்து நாம் ஏற்கனவே மேலே இழுத்து விட்ட கேமராவை கிளிக்கினால் போதும் நாம் செலக்ட் செய்த பகுதியானது இமேஜாக மாற்றப்பட்டுவிடும் அதை அப்படியே வேறு ஒரு எக்‌ஷெல்லில் ஒட்டமுடியும் அல்லாது வேர்ட் பைலில் ஒட்டிக்கொள்ள முடியும் இல்லையென்றால் மைக்ரோசாப்ட் பெயிண்ட் (Start-Run- type mspaint (or) pbrush) அல்லது போட்டோஷாப்பிலும் ஒட்டி தேவையான மாற்றங்களை செய்து சேமித்துக்கொள்ளலாம். என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கிறதா, புதிய தகவலாய் இருக்கிறதா? இருப்பின் சிரமம் பாரமால் வாக்கும் கருத்துரையும் அளிப்பதன் மூலம் மேலும் பலரை சென்றடைய வகை செய்யலாமே. வாக்கும் கருத்துரையும் அளிக்க சொல்வதால் தவறாக எண்ண வேண்டாம் பலரும் பயன்பெற உங்கள் ஆதரவு அவசியம் தேவை.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Sep 4, 2010

    9

    வேர்ட் கிளிப்போர்டில் இரண்டு மெமரி

  • Sep 4, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: ஒருவனை எப்படி அளவிட வேண்டும் என்று தெரிந்துகொண்டால் ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகமே.

    வணக்கம் நண்பர்களே இது உங்களுக்கு அதிகம் உபயோகப்படாது ஆனால் தெரிந்துகொண்டால் எப்போதாவது உங்களுக்கு உபயோகப்படுமே என்பதற்காக இந்த பதிவு. நாம் அநேகம் பேர் மைக்ரோசாப்ட் வேர்ட் பைல் உபயோகித்திருப்போம் அதில் நாம் ஒரு வரியையோ அல்லது ஒரு எழுத்தையோ, வார்த்தையையோ காப்பி எடுத்தால் நாம் கடைசியாக காப்பி எடுத்தவை மட்டுமே கிளிப்பேர்ட் மெமரியில் இருக்கும் அதை மட்டுமே நாம் எங்காவது பேஸ்ட் செய்யவும் முடியும் அதாவது புதியவை காப்பி எடுக்கும் போது தானக பழையவை அழிக்கப்பட்டுவிடும், நாம் இங்கேதான் மைக்ரோசாப்ட் வேர்டில் நாம் அதிகம் உப்யோகம் செய்யாத ஒரு விஷயத்தை பார்க்க போகிறோம்.

    ஒரே நேரத்தில் இரண்டு தகவல்களை கிளிப்பேர்ட் மெமரியில் வைத்து நமக்கு தேவைப்படும் இடத்தில் இரண்டு விதமான தகவல்களையும் பேஸ்ட் செய்யப்போகிறோம்.

    நீங்கள் ஒரு ஐம்பது பக்கம் அளவுள்ள ஒரு வேர்ட் பைல் தயாரித்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுவோம் அதில் கடைசி பக்கதிற்கு தேவையான இரண்டு விதமான தகவல்கள் மூன்றாவது பக்கம் மற்றும் பத்தாவது பக்கத்தில் இருக்கிறது இப்போது நீங்கள் மாற்றம் செய்ய விரும்பும் கடைசி பக்கத்தில் பத்தாவது பக்கத்தில் இருக்கும் ஒரு வரி முதலாகவதாகவும் மூன்றாவது பக்கம் இருக்கும் ஒரு வரி இரண்டாதாகவும் பேஸ்ட் செய்ய நினைக்கிறீர்கள், என்ன எப்போதும் செய்வதுதானே என்று நினைக்கிறீர்களா? நீங்கள் முதலில் இரண்டாவதாக பேஸ்ட் செய்ய விரும்புவதை முதலில் Ctrl + C வழியாக காப்பி எடுத்துக்கொள்ளவும் அடுத்து முதலாவதாக பேஸ்ட் செய்யவிரும்பும் வாசகத்தை தேர்வு செய்து Shift + F2 அழுத்தவும், இப்போது இரண்டு வெவ்வேறு விதமான தகவல்கள் கணினியின் மெமரியில் இருக்கும் இப்போது முதலில் பேஸ்ட் செய்ய வேண்டிய இடத்தில் மவுஸ் கர்சரை வைத்து எண்டர் அடிக்கவும் என்ன நண்பர்களே பேஸ்ட் ஆகிவிட்டதா இனி வழக்கம் போல Ctrl + V என அழுத்தி இரண்டாவதையும் பேஸ்ட் செய்யவும்.

    என்ன நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் சென்றடையட்டும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Sep 3, 2010

    24

    உடை குறைப்பது தான் நாகரீகமா?

  • Sep 3, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: அளவோடு பேசுங்கள் அதையும் ஆழ்ந்து யோசித்து பேசுங்கள்.

    இப்போதெல்லாம் அடிக்கடி யோசிப்பது நாம் எந்த காலக்கட்டத்தில் இருக்கிறோம் எனபதை பற்றித்தான், மனிதன் தோன்றிய காலத்தில் நிர்வாணமாகத்தான் இருந்தான் பின்னர் அவனாகவே நாகரீகம் எனும் பாதையில் சுயமாக மாறத்தொடங்கினான் வெற்றுடம்புடன் திரிந்த மனிதன் தன் அந்தரங்களை மறைக்க இலை தழைகளை கொண்டு மறைக்க ஆரம்பித்தான் அந்தரங்கள் மறைக்கப்படாமல் வெளிவருவதை அன்றே விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. பொதுவாகவே ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலியல் அமைப்பு வெவ்வேறாக இருந்தாலும் பெண் என்கிற விஷயத்தில் ஆண் விருப்பம் கொண்டுள்ளான் என்பது இயற்கையாகவே இருக்கிறது அது நமக்கும் தெரியும்.

    முன்பெல்லாம் நம் முன்னோர்கள் எப்படி இருந்தார்கள் என பார்த்தோமேயானால் ஆண்கள் கோவணமும், வேட்டியுமாக இருந்திருக்கின்றனர், பெண்கள் பதினாறு முழம் சேலை கட்டியிருந்திருக்கிறார்கள் இந்த காலகட்டத்தில் இருவருமே மேலாடை அணிந்திருக்கவில்லை பின்னர் மீண்டும் ஒரு நாகரீகத்தின் வளர்ச்சியில் மேலாடையும் போடத்தொடங்கினர் பின்னர் நாகரீக வளர்ச்சியில் வீடு வாகனம் இன்னும் பல இத்யாதிகள் எல்லாம் மாறின, இப்படி போய்க்கொண்டிருந்த நாகரீக மாற்றத்தில் மீண்டும் சைக்கிளிங் போல பழைய விஷங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினோம்.

    இயற்கைக்கு இசைவாய் வாழ்கிறோம் என்கிற பெயரில் வீடுகள் இயற்கையை ஒத்ததாக அமைத்தனர் மீண்டும் பழைய ஒரு நிலைக்கு செல்ல விரும்பினர் இது வரவேற்கபட வேண்டிய ஒன்றுதான் ஆனால் இதில் ஒரு வில்லங்கமான விஷயத்தையும் சேர்த்துகொள்ள வேண்டிய அவசியமில்லையே என்கிற ஆதங்கத்தை தவிர்க்க முடியவில்லை, உடை நாகரீகம் இதில் பழைய நிலைக்கு நேரடியாக செல்லவிட்டாலும் மறைமுகமாக அந்த நிலைக்கு சென்று விடுவோமோ என்கிற அச்சம் வருகிறது.

    பொதுவாகவே ஆண்களுக்கு அதிக உடை விஷயங்கள் இல்லை வேஷ்டி, பேண்ட், கைலி, சட்டை என ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்கிவிடலாம் ஆனால் பெண்களை பொருத்தவரை எத்தனை உடைகள் எத்தனை நாகரீங்கள் இன்னும் ஏன் இப்போதெல்லாம் பெண்களும் ஆண்கள் அணியும் பேண்ட் டீசர்ட் என அணிய தொடங்கிவிட்டார்கள், சரி அணிந்தால் என்ன இதில் என்ன தவறு இருக்கிறது? சரி ஆண்கள் வெறும் வேஷ்டியோடு இருந்தாலும் அது மற்றவர்களை அதிகம் பாதிப்பதில்லை இன்னும் நேரடியாக சொல்லப்போனால் காமத்தை தோற்றுவிப்பதில்லை ஆனால் பெண்கள் அப்படியில்லையே அவர்களின் சிறு கவனக்குறைவான உடையலங்காராம் கூட பார்ப்பவர்களை முகம் சுழிக்க செய்துவிடுமே அதோடு ஒரு தவறான கண்ணோட்டத்தையும் உருவாக்கும் என்பது தெரியாதா?

    முன்பெல்லாம் பெண்கள் சுடிதார் அணிந்தார்கள் அதோடு சால்வையும் போர்த்திகொண்டார்கள் அப்போது நிச்சியமாக அது நல்ல உடையாகத்தான் இருந்தது ஆனால் அதே சுடிதார் இப்போது வேறொரு வடிவம் பெற்று இருக்கிறது இப்போது உள்ள சுடிதார் எப்படியிருக்கும் என்பதற்கு படம் இனைக்க விரும்பவில்லை காரணம் உங்களுக்கே தெரியும் உடல் அவையங்களை அச்சு பிசகாமல் அளவெடுத்து காண்பிக்கும் உடைதான் நாகரீகமா? முன்பெல்லாம் உடல் அவயங்களை மறைக்கதானே ஆடை அணிந்தோம் ஆனால் இப்போது எடுத்துக்காட்டும் வகையில் ஆடை தேவைதானா? மேலும் இருக்கமான டீசர்ட் மற்றும் பேண்ட் இதை பற்றியும் அதிகம் சொல்லவோ அதற்காக போட்டோவோ இனைக்கவேண்டியதில்லை எல்லாமே உங்களுக்கு தெரியும் ஆனாலும் மாறுவதில்லை யாருக்காக இந்த ஆடை அலங்கரிப்பு?

    சமீபத்திய ஆராய்ச்சியில் பெண்கள் தான் ஆண்களின் தவறான கண்ணோட்டத்துக்கு வித்திடுவதாக வெளியிட்டு இருந்தார்கள் உடனே கோபப்படவேண்டாம் ஆராய்ச்சிக்காக பங்கெடுத்தவர்கள் எல்லோருமே பெண்கள்தான், மேலும் இப்போதெல்லம் நாம் நம்முடைய தனிமையை இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ரோட்டில் நடந்து சென்றாலும் நம்மையும் அறியாமல் மொபைல் போனில் உள்ள கேமரா கொண்டு படம் எடுத்து விடுகிறார்கள் நாம் நினைப்போம் நம்மை யார் போட்டோ எடுக்க போகிறார்கள் என நினைத்தால் நாம்தான் ஏமாந்துகொண்டிருக்கிறோம் இப்போதெல்லாம் மார்பிங் வழியாக போட்டோவையே மாற்றிவிடுகிறார்கள் இதனால் எவ்வளவு பாதிப்பு? இருந்தாலும் சர்வ சாதரணமாக பேஸ்புக் மற்றும் ஆர்குட்டில் எந்த தயக்கமும் இல்லாமல் போட்டோவை வெளியிடுவது ஆச்சரியமளிக்கிறது சரி அவர்கள் என்ன படிக்காதவர்களா என்றால் நன்கு படித்தவர்க்ள் இதன் விளைவுகளை யோசிக்கமாட்டர்களா? கொஞ்சம் பொறுமையாய் கூகுளில் தேடிப்பார்த்தால் நம் போட்டோ கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

    பழைய காலத்து பெண்கள் போல முழுவதும் மூடி சுற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் சேலையாவது அணியலாமே, சுடிதார் அணியும்போது கொஞ்சம் இறுக்கமில்லாமல் அணிந்தால் உங்கள் உடலை அப்படியே எடுத்துக்காட்டாதே? உடலை மறைக்க தானே உடை? நீங்கள் அழகாக சேலை உடுத்தி சென்று பாருங்கள் உங்களை பார்ப்பவரின் கண்ணோட்டம் நல்லவிதமாகவே இருக்கும் அதே வேளையில் கொஞ்சம் நாகரீகம் என்கிற பெயரில் மேலே சொன்ன உடைகளை அணிந்து செல்லுங்கள் உங்களை பார்ப்பவர்களின் கண்களில் வித்யாசம் தெரிவதை உங்களால் உணரமுடியும்.

    நிர்வாணம் என்பது கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை ஆனால் அரைகுறை ஆடைகள் ஆபாசத்தை தோற்றிவிக்கிறது என்றால் நிச்சியம் மிகையில்லை. நாம் ஆடை அணிவது உடலை மறைக்கவும் கொஞ்சம் அழகுக்காவும் தானே! அதே ஆடையே நமக்கு பாதுகாப்பில்லாத நம்மை சமுதாயத்தில் தவறாய் பிரதிபலிக்க கூடிய நாகரீகம் எனும் பெயரில் உடுத்தும் ஆடை நமக்கு தேவைதானா? வெளிநாட்டினர் நம்மை வியந்து பார்த்த்தில் நம் ஆடைக்கும் பங்கு உண்டுதானே இப்போதும் வெளிநாட்டு பெண்கள் நம் இந்தியாவில் சேலை உடுத்துவதை பார்த்திருப்பீர்கள் தானே. வெளிநாட்டினர் எப்படியெல்லாம் உடை உடுத்துகிறார்கள் என கேள்வி வேண்டாம் அவர்களின் கலாச்சாரமும் சூழ்நிலையும் வேறு ஆனால் நமக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறதே, குறைந்தபட்சம் நம் கலாச்சார காவலர்களாக இல்லாவிட்டாலும் மனதில் தவறான சிந்தையை விதைக்க நம் உடை ஒரு காரணமாய் இருக்கவேண்டாமே.

    பெற்றோர்களின் கவணத்திற்கு இப்போது நமது உணவு முறை மாற்றத்தினால் நமது குழந்தைகள் சீக்கிரமே பெரியவர்களாகி விடுகின்றனர் அதிலும் பெண் குழந்தைகள் பத்து முதல் பதிநான்கு வயதுக்குள் பெரிய பெண்களாகி விடுகின்றனர் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் உருவத்தில் பெரியவர்களாக இருக்கின்றனர் சில இடங்களில் பார்த்திருக்கிறேன் குழந்தைகள் தானே என்று சிலவிதமான உடைகளை அணிவித்து விடுகிறார்கள் பெற்றோர்களை முதலில் புரிந்துகொள்ளுங்கள் உங்கள் குழந்தையின் மீது உங்களுக்குள்ள கண்ணோட்டமும் மற்றவர்களின் கண்ணோட்டமும் ஒரே மாதிரியாய் இருக்காது அன்றாடம் செய்திகளில் பார்க்கத்தானே செய்கிறோம் குழந்தைகளும் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

    மேலும் நம் குழந்தைகளுக்கு நாம் ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் உங்களுக்கு தெரியும்தானே உங்கள் குழந்தைகளை பொருத்தவரை நீங்கள் தான் முதலில் ஹீரோ உங்களிடமிருந்துதான் குழந்தைகள் நல்ல விஷயங்களையும் கெட்ட விஷய்ங்களையும் கற்றுக்கொள்கின்றனர்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Sep 2, 2010

    20

    அடுத்தவர் மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பலாம்

  • Sep 2, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: ஒரு மனிதனின் அழகு அவன் நாவின் இனிமையில் இருக்கிறது.

    வணக்கம் நண்பர்களே சமீபத்தில் சில பதிவுகளை படிக்கும் போது சிலர் அவர்கள் மின்னஞ்சலில் இருந்து மற்றவர்களுக்கு மின்னஞ்சல் செல்வதாக சொல்லியிருந்தார்கள் (என்னிடமல்ல) உடனே அது ஹேக்கர்கள் பணி என நினைத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன் சரி அது பற்றி ஒரு பதிவை எழுதுவோமே என எழுதுகிறேன்.

    உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சில தளங்களில் நுழைவதற்கு பயன்படுத்துவீர்கள் அங்கு தான் உங்கள் மின்னஞ்சல் மற்றவர்களுடைய கைகளுக்கு போகிறது அதாவது நீங்கள் மின்னஞ்சல் கொடுத்து நுழைகிற தளங்களில் இருந்து அவர்களே உங்கள் முகவரிகளை விற்க கூடும் இல்லையென்றால் இனையத்தில் பதிந்திருக்கும் மின்னஞ்சல் முகவரிகளை படிப்பதற்கென்றே(விபரம் தெரிந்தவர்கள் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை கொடுக்கும் போது @ என்படை (at) எனவும் . என்பதை (dot) எனவும் எழுதுவதை பார்த்திருப்பீர்கள் ஆனாலும் இது தீர்வல்ல) சில ரோபட்கள் இயங்கும் இவை உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை படித்து தயாரித்த நபர்களுக்கு அனுப்பிவிடும் அதை அவர்கள் முறைகேடாக பலான தளங்கள் இன்ன பிற தளங்கள் தங்கள் விளம்பரத்துக்காக வாங்கி கொண்டு அதன் வழியாக அவர்கள் தள விளம்பரத்தை அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள்.

    சரி இது போலவே நாமும் நமக்கு தெரிந்த ஒருவரின் மின்னஞ்சல் முகவரியை வைத்து வேறு யாருக்காவது மின்னஞ்சல் அனுப்ப முடியுமா எனக் கேட்டால் அனுப்ப முடியும் என்பதே பதில் இதற்கெனவே சில தளங்கள் இயங்குகின்றன நான் சிலவற்றை இங்கு தருகிறேன்.

    sendanonymoussms

    anonymailer

    send-fake-anonymous-email

    sharpmail

    webwizny

    நான் மேலே ஐந்து தளங்கள் தந்திருக்கிறேன் இன்னும் வேறு நிறைய தளங்கள் இருக்கின்றன இந்த ஐந்தில் நான்கு தளங்கள் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது கூடவே அவர்கள் தளத்தின் நோட்டையும் சேர்த்து விடுவார்கள் ஆனால் ஒரு தளம் மட்டும் அவர்களின் விளம்பரத்தையும் இனைப்பதில்லை இந்த தளத்தில் இருந்து மின்னஞ்சல் அனுப்பினால் நிச்சியம் நம்பி விடுவார்கள் ஆனால் எப்படி உண்மையான ஒரு மின்னஞ்சலுக்கும் ஒரு டூப்ளிகேட் மின்னஞ்சலுக்கும் உள்ள வித்யாசத்தை கண்டுபிடிப்பது என்பதை பற்றி கீழே படத்துடன் பார்க்கலாம்.

    இனி நீங்கள் இங்கு சென்று ஏதாவது ஒரு மின்னஞ்சல் அனுப்பி பாருங்கள்.

    webwizny

    இது நான் எனது மின்னஞ்சலில் இருந்து மற்றொரு மின்னஞ்சல் முகவரிக்கு கூகுளின் ஜிமெயில் வழியாக அனுப்பியது.



    இனி உங்கள் ஜிமெயிலில் இருந்து மின்னஞ்சல் அனுப்பினால் கீழிருக்கும் படத்தில் உள்ளது போல Show Details என்பதை கிளிக்கி பாருங்கள் Mailed by signed by என்பதில் gmail.com என்பதாக இருக்கும்.



    இனி நாம் அடுத்தவரின் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி நாம் வேறொருவருக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதுவும் இப்படித்தான் இருக்கும் மேலிருக்கும் மின்னஞ்சலுக்கும் கீழிருக்கும் மின்னஞ்சலுக்கும் ஏதாவது வித்யாசம் இருக்கிறதாவென பாருங்கள்.



    இனி நாம் மற்றவரின் மின்னஞ்சலின் முகவரியை பயன்படுத்தி நாம் வேறு நபர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அவர்கள் Show Details என்பதை திறந்து பார்க்காதவரை சம்பந்தபட்ட நபர் தான் அனுப்பியிருப்பார் என நினைக்க கூடும், அதன் பின் Show Details திறந்து பாருங்கள் ஜிமெயிலில் இருந்து நேரடியாக அனுப்பிய மின்னஞ்சலுக்கும் நாம் மற்றவர்களின் மின்னஞ்சலை பயன்படுத்தி அனுப்பியதற்கும் வித்யாசம் புரியும்.



    இனிமேல் உங்கள் நண்பரின் பெயரில் ஏதாவது தவறான மின்னஞ்சல் வந்தால் கொஞ்சம் பொறுமையாக பாருங்கள் விபரம் புரியும் அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இருந்து வேறு நண்பர்களுக்கு தவறான மின்னஞ்சல் போகிறது என்றாலும் உடனே பதட்டபடாதீர்கள் உங்கள் வலைத்தளமோ அல்லது மின்னஞ்சலோ மற்றவர்களால் ஹேக் செய்யப்பட்டால் முதல் வேளையாக அவர்கள் செய்வது உங்கள் பாஸ்வேர்ட் செட்டிங்ஸ் மாற்றி விடுவார்கள் ரீட்டிரைவ் மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் எல்லாவற்றையும் மாற்றுவதுடன் உங்கள் முழுத்தளத்தையும் அழித்து விடுவார்கள் உங்கள் சொந்த தகவல் எல்லாம் திருடப்படும் இவை எதுவும் நடக்காமல் இருந்தால் நிச்சியும் உங்களுக்கு தெரிந்த யாரோ ஒருவர் அல்லது மேலே சொன்ன சில வியாபார தளங்களும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி விளையாடுகிறார்கள் என புரிந்து கொள்ளுங்கள் உடனடியாக இதற்கெல்லாம் பாஸ்வேர்ட் மாற்றுவதில் பெரிதாக பயன் இல்லை.

    இந்த வழிமுறையை உங்களுக்கு தெரிந்துகொள்ள மட்டுமே தயவுசெய்து நீங்கள் இதனை தவறான வழிக்கு பயன்படுத்தாதீர்கள் குற்றம் செய்ப்வர்கள் நெடு நாட்கள் தப்பிக்க முடியாது.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...
    28

    வலைப்பதிவரும் வாசகர்களும்.

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: புகழ்ச்சியை விரும்பாத மனிதன் இல்லை, அப்படியொருவன் இருந்தால் அவன் மனிதனே இல்லை.

    வணக்கம் நண்பர்களே நான் சில நாட்களுக்கு முன்பு இந்த வலைத்தளம் மூடப்படுகிறது என பெரிதாய் ஒரு பதிவிட்டு கொஞ்ச நாள் எழுதாமல் இருந்தேன் ஆனாலும் என் பழைய பதிவுகளை அவ்வப்போது இண்டலியில் இனைத்துக்கொண்டு தான் இருந்தேன் சரி எத்தனை நாள் தான் எழுதாமல் இருப்பது என யோசித்து இறுதியில் மீண்டும் இன்று ஒரு பதிவு எழுதுகிறேன். உடனே நீங்கள் என்னை பாரட்டினாலும் சரி அல்லது பரிகசித்தாலும் சரி. நான் பதிவு எழுதமாட்டேன் என எழுதிய பதிவில் சில நபர்கள் கருத்துரை என்கிற பெயரில் அவர்களின் திமிர்த்தனத்தையும் காட்டியிருந்தார்கள் அவர்களுக்கெலாம் நான் பதில் சொல்லிக்கொண்டிருக்க போவதில்லை.

    இந்த பதிவு முழுக்க முழுக்க வலைப்பதிவர்களுக்கும், வலைப்பதிவின் வாசகர்களுக்கும் மட்டுமே நான் எழுதாத காலத்தில் கிடைக்கும் நேரத்தில் சில பல வலைத்தளங்களை படிப்பேன் அதில் நல்ல விஷயங்கள் உள்ள பதிவுகளை கண்டால் நிச்சியம் என் வாக்கும் கருத்துரையும் இருக்கும் அதில் நிச்சியமாக சில பதிவர்களின் பதிவுகளை என்னவென்று தெரியாமல் ஒரு முறை திறந்து பார்த்து நொந்து போயிருக்கிறேன், அதில் என்ன இருக்கிறதென்று வாக்குகளும் கருத்துரைகளும் அளித்தார்கள் என தெரியவில்லை ஆனால் நான் எப்போது இண்டலி வலைத்தளம் திறந்தாலும் முன்னனி இடுகைகளாக இருக்கும் இது ஆரோக்கியமானதா என்றால் நிச்சியம் இல்லை என்பதை தவிர வேற பதில் என்னிடமில்லை.

    இந்த வலைத்தளம் என்பது எல்லோருக்கும் கிடைத்த வாய்ப்பு ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த விஷங்களை எழுதுகிறார்கள் அதை நாம் குறை சொல்வதற்கில்லை காரணம் நம்மை படிக்க சொல்லி அவர்கள் கட்டாயபடுத்துவதில்லை, அவர்கள் எழுதுகிறார்கள் அவர்களுக்கென ஒரு ஓட்டுக்கூட்டமும், கருத்துரை அளிக்க ஒரு கூட்டமும் இருக்கிறார்கள் அது பற்றி நமக்கு கவலையில்லை ஆனால் இது போன்ற உதவாக்கரை பதிவுகள் மற்றவர்களை பாதிக்கிறது, இந்த பதிவுகள் படிக்கப்பட்டு வாக்களிக்க படுவதில்லை எல்லாமே கண்ணை மூடிக்கொண்டு செய்யும் வேலைதான் சமீபத்தில் சில வலைத்தளங்களை நான் கவணித்த போது ஒரு அணியாக இருந்து தான் செயல்படுகின்றனர் குறைந்த பட்சம் இருபது நண்பர்களை கூட்டாக சேர்த்தால் போதும் பதிவு இனைத்த சிறிது நேரத்தில் வாக்குகள் விழத்தொடங்கி விடும் இவையெல்லாம் பதிவை படித்து வாக்களிப்பது இல்லை.

    உங்களுக்கு புரியும் வகையில் ஒரு உதாரணத்தை சொல்கிறேன் சில முன்னனி பதிவுகளை நீங்கள் காப்பி எடுத்துக்கொள்ளுங்கள் நீங்களாக சோதனைக்காக ஒரு ஒரு வலைத்தளம் தொடங்கி அதில் முன்னனி பதிவின் பதிவை வெளியிட்டு பாருங்கள் அவர்கள் எழுதிய தலைப்பையே வைத்து விடுங்கள், பதிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இண்டலியில் இனைத்து விடுங்கள, உண்மையில் உங்களுக்கு அதிகபட்சம் போனால் சில வாக்குகள் கிடைக்கலாம், யோசித்து பாருங்கள் ஓரே விஷயம் அதில் எந்த மாற்றமுமில்லை ஆனால் நீங்கள் இனைப்பதற்கும் அவர்கள் இனைப்பதற்கும் மிகப்பெரிய வித்யாசம் இருக்கும்.

    இது போன்ற வலைப்பதிவுகள் இண்டலியில் இனைத்தவுடன் அவர்களின் கூட்டு சகாக்கள் பார்ப்பது பதிவை இனைத்தவரின் அவதாரையோ அல்லது இனைத்தவரின் பெயரைத்தான், அது தெரிந்தால் போதும் கண்ணை மூடிக்கொண்டு வாக்கும் ஓ, அருமை, நல்ல சிந்தனை, வெங்காயம் என டெம்ப்ளேட் பின்னுட்டங்கள் இருக்கும் ஆங்கில வலைத்தளங்களில் பார்ந்தால் பதிவை பற்றியதான விவாதம் மட்டுமே கருத்துரையில் நடக்கும் ஆனால் நம் தமிழ் வலைப்பூவை பொருத்தவரை சம்பந்தமே இல்லாமல் கருத்துரை எழுதுவதில் வல்லவர்கள் அவர்களை சொல்லி குற்றமில்லை என்ன செய்வார்கள் எல்லாம் ஒரு ஒப்பந்த கொடுக்கல் வாங்கல் தானே.

    இது போன்ற விஷயங்கள் உதவாக்கரை பதிவுகளில் மட்டுமல்ல ஒட்டு மொத்த பதிவு எழுதுபவர்களுக்கும் பொருந்தும் ஒவ்வொரு வாக்கு அளிக்கும் போதும் ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக்கொண்டு அல்லது பயன்படுத்தி பார்த்து தான் வாக்கோ அல்லது கருத்துரையோ அளிக்கிறார்களா? நீங்களே உங்கள் மனதை கேட்டு பாருங்கள் அதற்கான விடை கிடைக்கும். இங்கு எல்லோரும் பெரிய சேவை மனப்பாண்மை உள்ளவர்கள் இல்லை எல்லோரின் சேவை என்கிற பெயரில் அவர்கள் சுய விருப்பம் இருக்கிறது. புகழ்ச்சி இதை பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா? இங்கு எல்லாமே சுய சொரிதல்கள் தான் என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன் மேலும் சேவை என்பதை விட சிலர் இதையே மூலதனமாக்கி சம்பாதிக்கவும் முடியும் அவர்கள் பிரச்சினை இல்லை அவர்களின் நோக்கம் வலைத்தளத்தின் மூலம் சம்பாதிப்பது அதை நாம் தவறு என்பதற்கில்லை ஆனால் இரட்டை வேடம் இடும் நபர்களை என்ன செய்வது?

    இன்னும் சில வகையான மனிதர்கள் அவர்களின் ஆண் பதிவர்களின் பதிவை திரும்பி கூட பார்ப்பதில்லை என சபதம் செய்திருப்பார்கள் போல வாழ்க அவர்கள் சபதம் கொள்கையும். இதை பற்றி ஏற்கனவே சில பதிவர்கள் சுட்டி காட்டியிருக்கிறார்கள் அதனால் இது பற்றி அதிகம் பேச விரும்பவில்லை இவ்வளவு எழுதுறானே ஒருத்தர் பெயரையும் குறிப்பிடவில்லையே என நினைக்க வேண்டாம் உங்களுக்கு தெரியும் யார் அவர்களென்று! ஒரு வேளை இதை நீங்கள் படிக்கும் போது மேலே சொல்ல விஷயங்கள் உங்களுக்கு பொருந்துமேயானல் சந்தேகமே இல்லை அது நீங்கள் தான் தயவுசெய்து இனிமேலாவது மாற்றிக்கொள்ளுங்கள்.

    சில நண்பர்கள் சொல்வார்கள் நல்ல பதிவு என்றால் நிச்சியம் அவர்களாகவே வந்து படிப்பார்கள் மக்கள் தேடி வந்து படிக்க வைக்கவேண்டுமென்றால் கொஞ்சம் பலான விஷயங்களை பதிவின் மேல் தூவினால் மலரை மொய்க்கும் வண்டு போல வந்துவிடுவார்கள் நானும் எழுத வந்த ஆறு மாத காலத்திற்குள் சில நல்ல பதிவர்களை கண்டிருக்கிறேன் அவர்களின் பதிவு எப்போதுமே பிரபல பகுதிக்கு கூட வருவதேயில்லை இங்கு ஒருவரின் வளர்ச்சியை மற்றவர் விரும்புவதில்லை இது மனித இயல்புதானே என்ன செய்வது இங்கு திறமைக்கு மதிப்பில்லை மாறாக இங்கு வேறு நடக்கிறது.

    உங்கள் நண்பராகவே இருந்தாலும் பதிவின் தரத்தை பொருத்து வாக்கோ கருதுரையோ அளியுங்கள் நல்ல விஷயங்களை கானும் போது அதை ஊக்கபடுத்துங்கள் அதற்கான என்ன உங்கள் சொத்தையா எழுதிக் கொடுத்துவிட போகிறீர்கள் வெட்டி பதிவுகளுக்கு நீங்கள் செலவழிக்கும் நேரத்தில் நல்ல பதிவுகளுக்கு ஒரு சில நிமிடங்கள் செலவழித்து வாக்கும் கருத்துரையும் அளியுங்கள் அது அவர்களுக்கு ஊக்கமாய் இருக்கும்.

    இங்கு நீயெல்லாம் என்ன எழுதுறேனு நீங்க நினைப்பிங்க அதுக்கும் நானே பதில் சொல்லிறேன் சும்மா கணினி பதிவுகள் எழுதுறேனு கொஞ்சம் ட்டிரிக்ஸ், டெக்னிக்ஸ், அப்புறம் மென்பொருள் பத்திதான் எழுதுறேன் நீங்கள் நினைப்பது புரிகிறது என்ன பெரிசா மென்பொருள் இனையத்தில் தேடினா கிடைக்க போவுது உண்மைதான், இனையத்தில் கிடைப்பதை தான் எழுதுகிறேன் அதிலும் நான் எப்போது எந்த மென்பொருள் பற்றி எழுதினாலும் கீயையோ அல்லது கிராக் பேட்ச் நிச்சியம் இனைத்திருப்பேன் இது உங்களாலும் முடியும். கூடிய விரைவிலேயே இனையத்தில் எங்கும் கிடைக்காத ஒரு மென்பொருள் நமது சொந்த தயாரிப்பில் வெளி வர இருக்கிறது ஆனால் அது போல மென்பொருள்கள் இனையத்திலும் கிடைக்கும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Aug 30, 2010

    12

    எதற்கும் ஒரு ஷார்ட்கட்

  • Aug 30, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: கோபத்தோடு எழுந்தால் நஷ்டத்தோடு உட்கார வேண்டி வரும்.

    அன்பின் நண்பர்களுக்கு வணக்கம் இன்று ஒரு அருமையான, எளிமையான மென்பொருளை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம் நாம் வழக்கமாக சில கணினி பயன்பாட்டுகளுக்கு ரன் கமெண்ட் பயன்படுத்துவது வழக்கம் இதன் வழியாக சில பயன்பாடுகளை எளிதாகவும் வேகமாகவும் செய்யமுடியும் இது பற்றி சில் நண்பர்களுக்கு தெரிந்திருக்கும் சிலருக்கு தெரிந்திருக்காது ஆனால் நமது நோக்கமோ நமக்கு தெரிந்த விஷயங்களை தெரியாத நண்பர்களுக்கும் சென்றடைய செய்வதேயாகும்.

    நமது கணினியில் அன்றாடம் பயன்படுத்தும் மென்பொருளையோ அல்லது அலுவலக பைல்களையோ எப்படி வேகமாக திறப்பது என்பது பற்றி இரண்டு பதிவுகள் எழுதியிருந்தேன் இந்த பதிவிற்கும் ஏற்கனவே எழுதிய ரன் கட்டளைகள் உருவாக்கலாம் என்கிற பதிவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது நீங்கள் வாசித்து முடிக்கும் போது உணர்ந்துகொள்வீர்கள்.

    என் பழைய பதிவுகள்

    ரன் கட்டளைகள் உருவாக்கலாம்

    அஸைன் ஷார்ட்கட் கீ

    இந்த பதிவு எழுத காரணமாயிருந்த அன்புச் சகோதரிக்கு நன்றி, இரண்டு நாட்களுக்கு முன்னர் என் சகோதரி அண்ணா எக்ஸ்பி இயங்குதளத்தில் நாம் Srat – Run திறக்கும் டயலாக் பெட்டியின் அளவை கொஞ்சம் பெரிதுபடுத்த முடியுமா எனக் கேட்டார் நான் அதன் அளவை கூட்டுவதால் என்ன நண்மை என கேட்ட போதுதான் வழக்கமாக கணினியில் உள்ள அனைத்து பைல்களையும் ரன் கமெண்ட் வழியாகவே திறப்பதாகவும் கொஞ்சம் நீளமான பெயர் வரும் போது எழுத்துக்கள் மறைந்து விடுவதால் டைப் செய்வதில் பிரச்சினை வருவதாகவும் சொன்னார்.



    உதாரணத்துக்கு உங்கள் கணினியில் E:\Gsr\Software\Hacking Software\Recourse Hacker\ResourseHacker.Exe என்கிற இடத்திற்கு செல்லவேண்டும,என்ன சகோதரி சொல்வது போல பகுதிக்கு மேல் எழுத்துக்கள் மறைந்துவிடும் தானே? சரி அதை கொஞ்சம் முயற்சி செய்து பார்க்ககலாமேவென வழக்கம் போல ரிசோர்ஸ் ஹேக்கர் மென்பொருள் கொண்டு முயற்சித்தேன் ரிஜிஸ்டரி மாற்றமெல்லாம் செய்து பார்த்தேன் இறுதியில் கணினியின் இயக்கத்தில் தான் பிரச்சினை உண்டானது பின்னர் ஒரு வழியாய் பிரச்சினையை சரி செய்துவிட்டு கொஞ்சம் இனையத்தில் இதற்கான மாற்று வழிமுறை இருக்கிறாதவென தேடியபோது தான் ஒரு மாற்று மென்பொருளை கண்டேன் இனி ரன் கமெண்ட் மென்பொருள் தரவிறக்கம் செய்யவும் வெறும் 483 கேபி தான் இனி வழக்கம் போல உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும்.

    இனி உங்கள் கணினியில் புதிதாக ஒரு நீல நிறத்தில் ஒரு கமெண்ட் பெட்டி வந்து அமர்ந்துகொள்ளும் கீழிருக்கும் படத்தை பாருங்கள் இனி நாம் ரன் கமெண்டில் மேற்க்கொள்ளும் அத்தனை நடவடிக்கைகளையும் இதன் வழியாகவே மேற்கொள்ளலாம்.



    இதனை நமது எலியால் வலது கிளிக் செய்து இதன் மெனுவை திறக்கலாம்.



    இனி இதில் நமக்கு தேவையான நிறத்தை கொடுக்க எழுத்தின் வண்ணம் மாற்ற இதிலிருக்கும் செட்டப் வசதியை பயன்படுத்தலாம், மேலும் சில வசதிகள் இருக்கிறது பயன்படுத்தி பார்த்து தெரிந்துகொள்ளுங்கள், நமக்கு தேவையில்லையென்றால் மறைத்து விடலாம் தேவையான இடத்திற்க்கு மாற்றிக்கொள்ள அதன் மேல் கர்சரை வைத்து இழுத்துச் செல்லலாம் வசதி இருக்கிறது வேண்டிய அளவிற்கு நீளத்தை வலது பக்கம் இருந்து இழுப்பதன் மூலம் முழு ஸ்கீரீன் அளவிற்கு வேண்டுமானாலும் பெரிதுபடுத்தலாம்.



    இனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் நான் ஒரு பைலை இதன் வழியாகவே திறந்திந்திருக்கிறேன் இதில் என்ன விஷேசம் என்றால் நாம் E:\G என அடிக்கும் போதே E:\GSR_G என வந்துவிடும், அடுத்து H என அழுத்தினாலே Hacking Software வந்துவிடும், அடுத்து R என அழுத்தும் போதே Recourse Hacker என வந்துவிடும், அடுத்து R என அழுத்தினால் Resizer வந்துவிடும், அடுத்து R என அழுத்தினால் RSHacker என்பதும் வந்துவிடும் ஒரு வேளை வராத போது முதல் எழுத்தோடு அடுத்த எழுத்தையும் கொடுக்கவும் உதாரணத்துக்கு ஒரு இடத்தில் GSR,GNR என இரு போல்டர்கள் இருந்தால் நீங்கள் முதல் இரு எழுத்தையும் கொடுக்க வேண்டிவரும் அதாவது GS அல்லது GN இப்படியாக கொடுக்கவும். இதன் வழியாகவே உங்களுக்கு தேவையான புதிய கமெண்ட்கள் உருவாக்கலாம் அதற்கான வசதியும் இருக்கிறது.



    இதில் நீங்கள் Library திறப்பதன் மூலம் உங்களுக்கு வேண்டிய கணினியில் இருக்கும் மென்பொருள் அல்லது ஏதாவது பைல்களுக்கு New Magic word வழியாக நீங்களாக ஒரு சுருக்க பெயர் கொடுத்து அதன் வழியாக எளிதாக பைல்களை திறக்கலாம் நீங்கள் விரும்பும் இனையதளத்தின் முகவரியையும் இது போல சுருக்கமாக மாற்றிக்கொள்ளலாம் நான் எனது தளமான http://gsr-gentle.blogspot.com என்பதை திறக்க gsr என கொடுத்தாலே போதும் தளம் திறந்துவிடும் மொத்தத்தில் இது ஒரு குட்டி சூப்பர் மென்பொருள்.



    என்ன நண்பர்களே இந்த பதிவு நிச்சியம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென்றே நம்புகிறேன் இனிமேல் எந்த பைலையும் நீங்கள் ரன் கமெண்ட் வழியாக திறக்க முடியும் என்ன இதற்கு கொஞ்சம் ஞாபகசக்தி இருந்தால் போதும் எந்த பைலையும் பல கிளிக் சென்று திறக்கமால் ரன் கமெண்ட் வழியாகவே எளிதாக திறக்கலாம் நான் மேலே கொடுத்துள்ள என் பழைய பதிவான ரன் கட்டளைகள் உருவாக்கலாம் என்பதன் வழியாக நீங்கள் உருவாக்கும் கட்டளைகளையும் இதன் வழியாகவே மேற்கொள்ளலாம். இந்த பதிவு உங்களோடு நின்று விடாமல் மேலும் பலருக்கு சென்றடைய உங்கள் வாக்கும் கருத்துரையும் உதவும் உங்களுக்கு பிடித்திருந்தால் அவசியம் ஒரு நிமிடம் செலவழித்து வாக்கு அளிக்கவும் நாம் வாக்களிக்கவில்லை என்றாலும் வேறு யாராவது வாக்களிப்பார்கள் என நினைத்து விட வேண்டாம் காரணம் உங்களை போலவே அவர்களும் நினைக்க வாய்ப்பிருக்கிறது

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Aug 20, 2010

    38

    பதிவு திருட்டுக்கு எதிராக உங்கள் உதவி தேவை

  • Aug 20, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • வணக்கம் நண்பர்களே இதை படிக்கும் எத்தனை நபர்கள் எனக்கு ஆதரவாக உதவபோகிறீர்கள் என தெரியாது இருப்பினும் சக பதிவு எழுதும் ஒருவன் என்கிற நம்பிக்கையில் உங்களின் ஆதரவு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்போடு எழுதுகிறேன் பதிவுலகத்தில் பலரும் படைப்புகளை திருடுகிறார்கள் என்னுடைய எத்தனையோ பதிவுகள் திருடப்பட்டிருக்கின்றன ஆனால் எனது சொந்த படைப்பையே நான் மற்றவர்களிடம் இருந்து கவர்ந்து எழுதியது என்கிற குற்ற்ச்சாட்டு இதுதான் பதிவுலகத்தில் முதல் முறை என நினைக்கிறேன்.

    நான் இந்த பதிவுலகத்திற்கு எழுத வந்து சரியாக ஆறு மாத காலம் இருக்கும் இறுதியில் நானகாவே எழுதுவதை நிறுத்திவிட்டேன் பல முறை என் பதிவுகளை பலரும் காப்பி எடுத்து அவர்கள் தளத்தில் அச்சு பிசகாமல் ஒட்டியிருப்பார்கள் ஆனால் நானும் அதை பெரிதாக கண்டுகொள்வதில்லை நேற்று இப்படித்தான் ஓய்வு நேரத்தில் நான் வலைப்பக்கம் வந்த போது http://illamai.blogspot.com/ என்கிற தளத்தில் நான் எழுதிய ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு (http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_13.html) மற்றும் தாலிக்கு அர்த்தம் என்ன? (http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_13.html) இரண்டு பதிவுகளும் அச்சு பிசகாமல் எழுத பட்டிருந்தது என்ன ஒரு வித்யாசம் எனக்கு ஆரம்ப காலத்தில் எனக்கு பிளாக்கரில் படம் கூட இனைக்க தெரியாது அதனால் அன்று நான் படங்கள் இனைக்கவில்லை இப்போதும் தேவையென்றால் மட்டுமே அதிலும் தொழில்நுட்ப பதிவுகளுக்கு மட்டுமே படங்கள் இனைப்பேன் என் தளத்தை ஆரம்ப காலத்தில் இருந்து வாசிப்பவர்களுக்கு தெரியும்.

    இது பற்றி http://illamai.blogspot.com கருத்துரையில் கேட்டிருந்தேன் அதற்கு அவர்கள் எனது தளத்தில் எனது தளத்தில் இந்த http://gsr-gentle.blogspot.com/2010/08/html.html பதிவில் கீழே உள்ளவாறு பதில் எழுதியிருந்தார்கள்.

    \\ தங்கள் சொல்லுவதை நானும் பாா்த்தேன் இருப்பினும் இது தங்கள் எழுதவில்லை இது எனது நண்பா் விவேகானந்த என்பவா் எழுதியது... தங்களும் அதனை கவா்ந்து தான் உங்கள் தளத்தில் போட்டு உள்ளீா்ள் ஏன் நான் இதே பதிவு FRIDAY, MARCH 26, 2010 இட்டுள்ளேன் தங்கள் இதே பதிவை Sunday, August 1, 2010 தங்கள் இட்டுள்ளீா்கள்... ஏன் இதே பதிவை http://kannan3h.blogspot.com/2010/07/blog-post.html இந்த முகவரியில் உள்ளது இதில் மட்டும் அல்ல இப்படி பல முகவரியில் உள்ளது.... அனால் இதற்கு தங்கள் உரிமை கோருவது... தவறு... என கருதுகிறேன்.

    நன்றியுடன்
    இளமை\\

    பதிலிலும் அவரால் அவர் நண்பர்தான் இதை எழுதினார் என்பதாக கூட சரியான விளக்கத்தை தரவில்லை இதில் நீங்கள் கவணிக்க வேண்டியது பதிவின் நேரத்தை பார்க்கலாம் அதே நேரத்தில் பதிவின் நேரம் என்பதை நானும் பல நேரங்களில் மீள் பதிவிற்காக நேரம் தேதி மாற்றுவது வழக்கம் இதற்கு பிளாக்கர் நம்மை அனுமதிக்கும் ஆனால் அந்த பதிவிற்கான கருத்துரையில் நாம் நேரத்தையோ அல்லது தேதியையோ மாற்ற முடியாது என்பது நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை உங்களுக்கு அதையும் கவணித்து பாருங்கள் ஆனால் இதிலும் தாலிக்கு அர்த்தம் என்ன? என்கிற பதிவை பற்றி அவர் வாய் திறக்கவே இல்லை.

    இது உங்கள் பார்வைக்கு தயவுசெய்து கொஞ்சம் கவணித்து பார்க்கவும் நண்பர்களே

    ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு
    http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_13.html (நான் எழுதியது)
    http://kannan3h.blogspot.com/2010/07/blog-post.html
    http://illamai.blogspot.com/2010/03/blog-post_26.html

    தாலிக்கு அர்த்தம் என்ன?
    http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_17.html (நான் எழுதியது)
    http://illamai.blogspot.com/2010/03/blog-post_8724.html

    இறுதியில் நான் http://kannan3h.blogspot.com/2010/07/blog-post.html சென்று அவரிடம் கீழே உள்ளவற்றை நான் கருத்துரை இட்டிருக்கிறேன்.

    \\அன்புள்ள நண்பருக்கு நான் ஞானசேகர் http://gsr-gentle.blogspot.com (புரியாத கிறுக்கல்கள் எனும் வலைத்தளத்தில் எழுதி வருகிறேன் நான் என் தளத்தில் எழுதிய , தாலிக்கு அர்த்தம் என்ன http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_17.html, ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_13.html இந்த இரண்டு பதிவுகளையும் நேற்று 19/08/10 எதார்த்தமாக http://illamai.blogspot.com/ காப்பி பேஸ்ட் செய்யப்பட்டிருந்தது அதை பற்றி நான் அவரிடம் கேட்ட போது அவர் எனக்கு இப்படியாக (தங்கள் சொல்லுவதை நானும் பாா்த்தேன் இருப்பினும் இது தங்கள் எழுதவில்லை இது எனது நண்பா் விவேகானந்த என்பவா் எழுதியது... தங்களும் அதனை கவா்ந்து தான் உங்கள் தளத்தில் போட்டு உள்ளீா்ள் ஏன் நான் இதே பதிவு FRIDAY, MARCH 26, 2010 இட்டுள்ளேன் தங்கள் இதே பதிவை Sunday, August 1, 2010 தங்கள் இட்டுள்ளீா்கள்... ஏன் இதே பதிவை http://kannan3h.blogspot.com/2010/07/blog-post.html இந்த முகவரியில் உள்ளது இதில் மட்டும் அல்ல இப்படி பல முகவரியில் உள்ளது.... அனால் இதற்கு தங்கள் உரிமை கோருவது... தவறு... என கருதுகிறேன்.



    நன்றியுடன்

    இளமை)

    இப்படியாக பதில் வந்தது நீங்கள் உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் இவை நீங்கள் எழுதியது தானா? நான் உங்கள் தளத்தை காப்பி எடுத்திருக்கிறேனா?


    எனது பதிவில் கருத்துரையில் இருக்கும் தேதியை பாருங்கள் http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_13.html யார் முதலில் எழுதியிருக்கிறார்கள் என தெரியும் மேலும் ஒரு பதிவை மீள் பதிவாக இடுவதற்கு நான் நேரம் தேதி மாற்றுவது வழக்கம்\\

    நண்பர்களே அவசியம் உங்கள் உதவியை எதிர்பார்க்கிறேன் ஒரு நண்பனாக ஏற்காவிட்டாலும் சக வலைப்பதிவன் என்கிற முறையிலாவது உதவவும்.


    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Aug 11, 2010

    10

    பிளாக்கரின் கமெண்ட்டில் HTML பயன்படுத்தலாம்

  • Aug 11, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: கையால் வீசி எறியப்பட்ட்தை மீண்டும் ஒருவன் காலால் தான் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும்.

    இந்த பதிவு நாம் ஏதாவது ஒரு வலைத்தளத்தில் கருத்துரை இடும் போது ஏதாவது ஒரு தேவைக்காக வேறு ஒரு தளத்தின் முகவரியை கொடுக்க நினைத்தால் அதை அப்படியே காப்பி எடுத்து ஒட்டி விடுவது வழக்கம் சரி இனிமே அந்த மாதிரி இல்லாமல் சாதரணமா நீங்கள் உங்கள் பதிவுகளில் ஏதாவது ஒரு வலைத்தளத்திற்கோ அல்லது மென்பொருளுக்கோ இனைப்பு கொடுப்பீர்களே அது போல கருத்துரை பெட்டியிலும் கொடுக்கலாம்.

    உதாரணம் இங்கே பாருங்கள்

    இது உங்கள் பதிவின் உள்ளே பயன்படுத்த


    <a href="http://இனைக்கவிரும்பும் தளம்" target="_blank">கொடுக்க விரும்பும் பெயர்</a></li>


    பிளாக்கர் கருத்துரைக்கு மட்டும்


    <a href="இனைக்கவிரும்பும் தளம்">தளத்திற்கு நீங்கள் கொடுக்க விரும்பும் பெயர்</a>



    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர