Aug 4, 2010

12

கணினி சம்பந்த சுருக்கப் பெயர்கள்

  • Aug 4, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து:வஞ்சகம் முதலில் ஜாக்கிரதையாக இருந்தாலும் கடைசியில் காட்டி கொடுத்து விடும்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு உபயோகபடுமா என்பது சந்தேகம் தான் இருப்பினும் தெரிந்துகொள்ள விரும்புவர்கள் தொடரலாம் அதற்கு முன் ஒரு சின்ன விஷயத்தை பார்த்துவிடலாம் இந்த வலைப்பதிவு எழுத வந்து ஐந்து மாதம் ஆகிறது என நினைக்கிறேன் இது எனது 99வது பதிவு ஆனால் இந்த ஐந்து மாத காலத்தில் நான் கற்றுக்கொண்டது நாம் என்ன தான் நல்ல பதிவுகள் எழுதினாலும் அதை படிக்கிறார்களோ இல்லையோ அல்லது பயனுள்ளதா என்பதை காட்டிலும் நமக்கான ஒரு நண்பர் கூட்டத்தை உருவாக்க வேண்டும் உங்களுக்கென நண்பர் கூட்டம் இருந்தால் மட்டுமே பிரபல பதிவு, முன்னனி பதிவுகளில் இடம் பிடிக்க முடியும் நீங்கள் எழுத வந்ததும் அல்லது எழுத நினைக்கும் முன்பே தொடர்ச்சியாக உங்களால் முடிந்த அளவிற்கு வாக்களித்து கொண்டே இருங்கள், கருத்துரையும் சேர்த்து தான் அதன் வழியாக உங்களை நிறைய நபர்கள் அடையாளம் காண வழி உண்டு இப்படித்தான் பல பதிவுகள் பிரபல பதிவுகளாகவும் முன்னனி பதிவுகளாகவும் இடம் பிடிக்கிறது, மேலும் சில பல பிரபல விளக்கென்னைகள் என நினைப்பவர்கள் அவர்களுக்கு வேண்டிய சில விளக்கென்னைகளை தவிர மற்றவர்களுக்கு வாக்கோ கருத்தோ அளிக்க மாட்டார்கள் அதனால் முடிந்தவரை பிரபலங்கள் என சொல்லிதிரியும் விளக்கென்னை பதிவர்களின் பதிவிற்கு வாக்களிப்பதை விட நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கு திரும்ப வாக்களிக்கும் நபர்களை அடையாளம் கண்டு வாக்கு அல்லது கருத்துரை அளியுங்கள். அதெல்லாம் முடியாது நான் நல்ல தகவல்கள் தான் எழுதுகிறேன் விரும்புவர்கள் தானாக வந்து படிப்பார்கள், வாக்கு அளிப்பார்கள், கருத்துரை அளிப்பார்கள் என நினைத்தால் என் வலைப்பதிவு போலத்தான் உங்கள் வலைப்பதிவும் இருக்கும்.

    என் பதிவை சராசரியாக ஒவ்வொரு பதிவையும் 400 முதல் சில பதிவுகள் 1400 நபர்கள் வரை படித்திருக்கிறார்கள் இதில் மின்னஞ்சல் வழியாக வருபவர்கள் 200க்கும் குறைவில்லாமல் இருக்கிறார்கள் என் பதிவு உபயோகமானது என்பதற்கு இதுவே சான்றாக இருக்கிறது ஆனால் எனக்கு புரியாத விஷயம் இத்தனை நபர்கள் படிக்கும் போது குறைந்த்பட்சம் ஒரு 20 பேருக்காவது வாக்கும் கருத்துரையும் அளிக்க மனம் வரவில்லையே என்கிற வேதனை இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவரும் தனக்கென ஒரு வாசகர் அல்லது நட்பு வட்டாரத்தை உருவாக்கி வைத்துள்ளனர் அந்த விஷயத்தில் நான் தவறி விட்டேன்.

    சரி நண்பர்களே நான் கீழே கொடுத்திருக்கும் வார்த்தைகள் கணினியில் நாம் சில இடங்களில் உபயோகிக்கும் வார்த்தைகள் அதற்கான முழு விரிவாக்கத்தையும் கொடுத்துள்ளேன் இதை எனக்கு அனுப்பிய நண்பருக்கு நன்றி.

    ADSL - Asymmetric Digital Subscriber Line
    AGP - Accelerated Graphics Port
    ALU - Arithmetic Logic Unit
    AMD - Advanced Micro Devices
    ASCII - American Standard Code for Information Interchange
    ASIC - Application Specific Integrated Circuit
    ASPI - Advanced SCSI Programming Interface
    AT - Advanced Technology
    ATX - Advanced Technology Extended
    BIOS - Basic Input Output System
    BNC - Barrel Nut Connector
    CAS - Column Address Signal
    CD - Compact Disk
    CDR - Compact Disk Recorder
    CDRW - Compact Disk Re-Writer
    CD-ROM - Compact Disk - Read Only Memory
    CFM - Cubic Feet per Minute
    CMOS - Complementary Metal Oxide Semiconductor
    CPU - Central Processing Unit
    DDR - Double Data Rate
    DDR-SDRAM - Double Data Rate - Synchronous Dynamic Random Access Memory
    DIMM - Dual Inline Memory Module
    DRAM - Dynamic Random Access Memory
    DPI - Dots Per Inch
    DVD - Digital Versatile Disc
    DVD-RAM - Digital Versatile Disk - Random Access Memory
    ECC - Error Correction Code
    EDO - Extended Data Out
    EEPROM - Electrically Erasable Programmable Read-Only Memory
    EPROM - Erasable Programmable Read-Only Memory
    FC-PGA - Flip Chip Pin Grid Array
    FDC - Floppy Disk Controller
    FDD - Floppy Disk Drive
    FPS - Frame Per Second
    FPU - Floating Point Unit
    FSAA - Full Screen Anti-Aliasing
    FSB - Front Side Bus
    GB - Gigabytes
    GBps - Gigabytes per second or Gigabits per second
    GDI - Graphical Device Interface
    GHz - GigaHertz
    HDD - Hard Disk Drive
    HSF - Heatsink-Fan
    IC - Integrated Circuit
    IDE - Integrated Drive Electronics
    IRQ - Interrupt Request
    LAN - Local Are Network
    LCD - Liquid Crystal Display
    LDT - Lightning Data Transport
    LED - Light Emitting Diode
    MAC - Media Access Control
    MB - MotherBoard or Megabyte
    MBps - Megabytes Per Second
    Mbps - Megabits Per Second or Megabits Per Second
    MHz - MegaHertz
    MIPS - Million Instructions Per Second
    MMX - Multi-Media Extensions
    NAS - Network Attached Storage
    NAT - Network Address Translation
    NIC - Network Interface Card
    OC - Overclock (Over Clock)
    PC - Personal Computer
    PCB - Printed Circuit Board
    PCI - Peripheral Component Interconnect
    PDA - Personal Digital Assistant
    PCMCIA - Peripheral Component Microchannel Interconnect Architecture
    PGA - Professional Graphics Array
    PLD - Programmable Logic Device
    PM - Private Message / Private Messaging
    PnP - Plug 'n Play
    POST - Power On Self Test
    PPPoA - Point-to-Point Protocol over ATM
    PPPoE - Point-to-Point Protocol over Ethernet
    PQI - PQI Corporation
    PSU - Power Supply Unit
    RAID - Redundant Array of Inexpensive Disks
    RAM - Random Access Memory
    RAMDAC - Random Access Memory Digital Analog Convertor
    RDRAM - Rambus Dynamic Random Access Memory
    ROM - Read Only Memory
    RPM - Revolutions Per Minute
    SASID - Self-scanned Amorphous Silicon Integrated Display
    SCA - SCSI Configured Automatically
    SCSI - Small Computer System Interface
    SDRAM - Synchronous Dynamic Random Access Memory
    SECC - Single Edge Contact Connector
    SODIMM - Small Outline Dual Inline Memory Module
    SPARC - Scalable Processor ArChitecture
    SOHO - Small Office Home Office
    SRAM - Static Random Access Memory
    SSE - Streaming SIMD Extensions
    SVGA - Super Video Graphics Array
    TB - Terabytes
    TBps - Terabytes per second
    TEC - Thermoelectric Cooler
    UART - Universal Asynchronous Receiver/Transmitter
    USB - Universal Serial Bus
    UTP - Unshieled Twisted Pair
    VCD - Video CD
    VPN - Virtual Private Network
    WAN - Wide Area Network
    XGA - Extended Graphics Array
    XMS - Extended Memory Specification


    இதிலிருந்து ஒரு பத்து வார்த்தைகளையாவது தாங்கள் புரிந்து கொண்டிருந்தால் எனக்கு சந்தோஷமே நூறாவது பதிவாக வீடியோவில் சில மாற்றங்கள் எடிட் செய்வது பற்றி பதிவிட இருக்கிறேன் நிச்சியம் அது ஒரு சிறப்பு பதிவாக இருக்கும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...
    4

    திரைக் காப்பும் கடவுச் சொல்லும் (Screen Saver & Password)

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: நூல்களும் நண்பர்களும் குறைவாக இருந்தாலும் தரமாக இருக்க வேண்டும்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு நாம் கணினியை பயன்படுத்தாத இடைவெளியில் திரைக் காப்பும் (Screen Saver) அதனுடன் கடவுச்சொல்லும் இடுவது என்பதை பற்றித்தான், இது உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆனால் நீங்கள் விரும்பும் படத்தையே திரைக் காப்பாக வைத்துக்கொள்ளலாம் அது எப்படி என்பதை பார்க்கலாம்.

    கணினியின் டெஸ்க்டாப்பில் (யாரவது இதன் தமிழ் பதம் கொடுங்களேன்) ஏதாவது ஒரு இடத்தில் உங்கள் சுண்டெலியின் வலது கிளிக்கில் பிராப்பர்ட்டிஸ் (இதன் தமிழ் பதம் பண்புகள் என அகராதிகளில் இருக்கிறது தெரிந்தவர்கள் தெரியப்படுத்தலாம்) திறக்கவும் அதில் ஸ்கீர்ன் சேவர் டேப் திறந்து (முடிந்த வரை தமிழில் எழுத விருப்பம் ஆனால் சிலருக்கு இது புரியாமல் போக வாய்ப்பிருக்கிறது சில இடங்களில் தவிர்க்க முடியவில்லை மன்னிக்கவும்) My Picture Screen saver என்பதை தெரிவு செய்யவும் வழக்கமாக இது உங்கள் D வட்டில் My Picture என்னும் போல்டருக்குள் இருக்கும் போட்டோக்களை எடுத்துக்கொண்டு செயல்படும் நீங்கள் வேண்டுமானால் Settings திறப்பதன் மூலம் வேறு இடங்களில் இருக்கும் படங்களை தெரிவு செய்யலாம் அதற்கான படம் இனைத்திருக்கிறேன் பாருங்கள் புரியும்.

    செட்டிங்ஸ்ல் ஒரு படத்திருக்கும் அடுத்த படம் திரையில் தோன்றுவதற்கான கால அளவை மாற்றிக்கொள்ளவும் விருப்பம் இருந்தால் மட்டும் மேலும் படத்தின் அளவு மாற்றலாம் மேலும் சில செட்டிங்குகள் விரும்பினால் மாற்றலாம்.





    உங்கள் கணினியில் நீங்கள் கடவுச்சொல் கொடுத்திருந்தால் On Resume, Password Protect என்பதை தெரிவு செய்யலாம் மேலும் கீழிருக்கும் Power பட்டனை திறப்பதன் மூலம் சில மாற்றங்கள் மேற்கொள்ளலாம். மேலும் Appearance டேப் திறந்து அதன் வழியாக உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் போல்டர் அளவு கூட்டி குறைக்கலாம் எழுத்தின் மாதிரியை மாற்றலாம் அளவை பெரிதாக்கலாம் இப்படி இன்னும் எத்தனையோ விஷயங்கள் இதனுள் அடங்கி கிடக்கின்றன நீங்களாகவே முயற்சி செய்து பாருங்கள் வேண்டுமானல் இதையே சில பதிவுகளாக இடும் அளவிற்கு இதற்குள் விஷயம் இருக்கிறது

    வேகம் குறைந்த கணினிகளில் ஸ்கிரீன்சேவர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது சில நேரங்களில் கணினி உறை நிலைக்கு சென்று விடும் வாய்ப்பு இருக்கிறது.

    மன்னிக்கவும் நண்பர்களே விரிவாக எழுத முடியவில்லை இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்னுட்டத்தில் கேள்வியாக பதியவும் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்களை போல மற்றவர்களும் பயணடைய பதிவிற்கு வாக்கும் கருத்துரையும் அளிப்பதன் மூலம் மேலும் பலரை சென்றடைய உதவலாமே?

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Aug 3, 2010

    9

    நிறுவல் முன்னிருப்பு இடம் மாற்றலாம் (Default Installation Location Change)

  • Aug 3, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: பெரிய விளைவுகளுக்குக் காரணமான நிகழ்ச்சிகள் எப்போதும் சிறிய சூழ்நிலைகளிலிருந்து தான் உருவாகின்றன.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு உங்கள் கணினியில் சாதரணமாக மென்பொருள் நிறுவும் போது C:வட்டுவில் சென்று பதியும் ஆனால் ஒரு சின்ன மாற்றத்தை உங்கள் பதிவகத்தில் (ரிஜிஸ்டரியில்) ஏர்படுத்துவதன் மூலம் மென்பொருள் நிறுவலை D: அல்லது நீங்கள் விரும்பும் இடத்திற்கு மாற்றலாம் நண்பா என் கணினியில் ஓரே வட்டாக இருக்கிறது எப்படி பிரிப்பது என கேள்வி கேட்பவர்கள் எனது பழைய பதிவான வன்தட்டை (Hard Drive) துண்டு துண்டா வெட்டலாம் பதிவு உங்களுக்கு உதவலாம்.

    சரி இப்போது பதிவகத்தை (ரிஜிஸ்டரியை) திறப்பதற்காக Start-Run Type regedit திறந்து நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய இடம் HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion என்பதை கிளிக்கி வலது பக்கம் இருக்கும் பலகத்தில் Program FilesDirஇருமுறை உங்கள் சுண்டெலியால் கிளிக்கி திறக்கும் (அல்லது வலது கிளிக்கில் Modify என்பதை தெரிவு செய்வதன் மூலமும் செய்யலாம்) மேல்மீட்பு (Pop Up) பெட்டியில் C என்பதற்கு பதிலாக D அல்லது நீங்கள் விரும்பும் வட்டின் வெயர் கொடுக்கவும்.





    என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருந்திருக்குமென்றே நம்புகிறேன் இந்த தகவல் உங்களை போல மற்றவர்களுக்கும் சென்றடைய பதிவிற்கு வாக்கும் பதிவை பற்றியதான உங்களை கருத்தையும் எழுதுவதன் தகவலை உறுதிபடுத்தலாமே.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Aug 2, 2010

    15

    கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி

  • Aug 2, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: அறிவு ஒன்றுதான் குறைந்துகொண்டே போகும் பலனுக்கு ஆளாகாமல் இருக்கும் உற்பத்திக் கருவி.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு சமீபத்தில் நமது அண்ணா பல்கலைக்கழகம் கணிப்பொறி சம்பந்தபட்ட வார்த்தைகளுக்கு தமிழாக்கம் கொடுத்துள்ளார்கள் இது அவர்களின் மிகப்பெரிய உழைப்பு இத்தனை வார்த்தைகளை தமிழ்படுத்துவது என்பது சாதரண காரியம் இல்லை என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

    சில வார்த்தைகளை மட்டும் நான் உதாரணத்துக்கு கீழே கொடுத்திருக்கிறேன் அவர்கள் கிட்டதட்ட 4300 வார்த்தைகளுக்கு தமிழ் அறிஞர்களின் துனையோடு தமிழில் தொகுத்திருக்கிறார்கள்.

    adaptor - பொருத்தி
    add-on - கூட்டு உறுப்பு
    amplifier - பெருக்கி, மிகைப்பி
    analog - ஒப்புமை
    animation - அசைவூட்டம்
    assembler - பொறிமொழியாக்கி
    compile - தொகு
    dial-up - அழை, சுழற்று
    direct data entry - நேரடித் தரவுப் பதிவு
    disable – முடக்கு
    disclaimer - உரிமைத் துறப்பு
    disk duplication - வட்டு நகலாக்கம்
    display - காட்சியகம்
    ink jet printer - மை பீச்சு அச்சுப்பொறி
    integer - முழுஎண்
    keyboard - சாவிப் பலகை
    monitor - திரையகம்
    server - சேவையகம்
    string length - சர நீளம்
    suffix - பின்னொட்டு
    superconductor - மீக்கடத்தி
    synchronization - ஒத்தியக்கம்
    system loader - அமைப்பு ஏற்றி
    system loader - அமைப்பு ஏற்றி
    systems security - அமைப்புக் காப்பு
    tab - தத்தல்
    tag - அடையாள ஒட்டு
    task - பணிக்கடம்
    task panel - பணிக்கடச் சட்டகம்
    virus - நச்சுநிரல்


    இனி இது பற்றி மொத்த தகவலுக்காக இந்த பிடிஎப்தரவிறக்கி படித்து பயன்பெறுங்கள் நாமும் கணிப்பொறி சம்பந்தபட்ட வார்த்தைகளை முடிந்தவரை தமிழில் எழுத முயற்சிப்போம்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Aug 1, 2010

    10

    ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு

  • Aug 1, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: எல்லோவற்றையும் பார்க்கும் கண்கள் தன்னைப் பார்த்து கொள்வதில்லை

    பெண்களுக்கு எதிரானவனோ அல்லது பெண்ணுரிமை பேசுபவர்களுக்கு எதிராணவனோ இல்லை, காரணம் எனது பார்வையில் பெண்கள் பெருமையாகவே மதிக்கப்படுகிறார்கள் என்பதே பெண்கள் மதிக்கபடுவதையே ஆண்களும் விரும்புகின்றனர்

    ஆதிகாலம் தொட்டே பெண்ணிற்க்கு மரியாதையும் மதிப்பும் இருந்துகொண்டேதான் இருக்கிறது அந்த காலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதிருந்தால் நமக்கு வீரப்பெண்மனி ஜான்சி ராணியோ அல்லது வேலு நாச்சியாரோ கிடைத்திருப்பார்களா இல்லை அன்னை தெரசா தான் கிடைத்திருப்பாரா?

    ஒரு ஆண் ஒரு பெண்ணை மிகவும் மதிப்போடு தான் பார்க்கிறான், நீங்க சொல்லலாம் பேருந்தில் தொடங்கி அலுவலகம் வரை தொல்லை, இருக்காதான் செய்கிறது அவை எல்லாம் வக்கிரம் கொண்ட ஆண் சமூகம் தானே இப்படி செய்கிறது சரி நானும் உங்கள் கருத்திற்கு உடன்படுகிறேன் யாரோ ஒரிருவர் தவறு செய்வதால் மொத்த ஆண்களையும் குற்றம் சொல்வதா ஆண் என்பதால் பெற்ற தகப்பனை வெறுத்து விடுகிறோமா என்ன?

    சரி எத்தனையோ இடங்களில் ஆண்களும் பெண்களால் பாதிக்கபட்டுகொண்டுதான் இருக்கின்றனர் என்ன வெளியில் சொல்வதில்லை எவ்வளவு அடிச்சாலும் தாங்கிகிட்டு ரொம்ப நல்லவன் மாதிரி இருப்பான் என்ன கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைனு சொல்லிகிட்டு போவான் அது தான் அவனோட தன்னம்பிக்கை எந்த பிரச்சினையானளும் அதை சமூகம் அறிந்துவிடக்கூடாது என நினைத்து பிரச்சினைகளை மறந்து விடுவான் அல்லது மறைத்து விடுவான் ஆனால் பெண்கள் அப்படியில்லை சின்ன பிரச்சினை என்றாலும் மற்றவர்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் தேடத்தான் செய்கிறார்கள் ஒருவிதத்தில் பெண்களின் கண்ணீர்தான் அவர்களின் மிகப்பெரிய ஆயுதமும் அதே நேரத்தில் பலவீணமும் என்ன சரிதானே?

    பெண்களின் மேல் அதிக அன்பும் போற்றுதலும் வைத்திருக்கிறான் என்பதை நான் இப்படித்தான் எடுத்துகொள்கிறேன் பெண்ணின் ஒவ்வொரு வளர்ச்சியையும் மாற்றத்தையும் கொண்டாடிக்கொண்டே தான் இருக்கிறான் ஒரு பெண் பருவ மாற்றம் அடைந்து பூப்படைந்துவிட்டால் அதை விழாவாக கொண்டாடுகிறார்கள் அடுத்து திருமணம் முடிந்து ஒரு வாரிசை சுமக்க ஆரம்பிதவுடன் எத்தனை சடங்ககள் சம்பிராதாயங்கள் செய்கின்றான் பெண் தாயாகும் போது அதை இந்த உலகம் எத்தனை சந்தோஷமாக கொண்டாடுகிறது யாராவது அதை வெறுக்கிறார்களா என்ன?

    ஆண்கள் பெண்களை வெரும் அழகுப்பொருள்களாக மட்டுமே பார்க்கின்றனர் இருக்கலாம் ஆண்கள் அழகு என்பதை ஆராதிக்கதானே செய்கின்றனர் உங்கள் அழகை ஆராதிப்பது உங்களுக்கு பெருமைதானே உங்கள் அழகை மெருகூட்டதானே வித விதமான ஆடைகள் சிகையலங்காரங்கள் ஆபரணங்கள் இப்படி எல்லாமே சரி நீங்களே சொல்லுங்க ஒரு பெண்ணுக்கு எது அழகு? 10,000ரூபாய் பட்டுச்சேலையும் 10பவன் நெக்லஸ் போட்டால் பெண்களுக்கு அழகு வந்துவிடுமா, இல்லை நாகரீகம் என்கிற பெயரில் அரைகுறை ஆடையும் டிஸ்கோ பப்பு என இருந்தால் அது அழகா ஒரு பெண்ணுக்கு மாங்கலயம் என்பது எவ்வளவு அழகு தெரியுமா 10பவன் நகையில இல்லாத அழகு ஒரு ஆண் கட்டும் மஞ்சல் கயிறில் இருக்கிறது தெரியுமா? அது உங்களை கட்டுபடுத்துவதற்கு அல்ல அப்பொழுதும் உங்களை போற்றவை காக்கவே ஒரு தாலி கயிரு கழுத்தில் கிடந்தா ரோட்டுல போறவங்க பார்த்தாலும் அடுத்த நிமிஷமே தாலி கண்ணில் பட்டதுமே அவனையறியாமல் அவன் தலை குணியும் அந்த தாலி உங்களுக்கு பெருமைதானே? அது உங்களை காக்கும் வேலிதானே இப்பெல்லாம் பெண்கள் தாலியை மறைத்துகொள்கிறார்கள் அதுதான் நாகரீகத்தின் உச்சமா என்ன தாலிதான் உங்களுக்கு பிரச்சினை என்றால் ஏன் திருமணம் செய்துகொள்கிறீர்கள் தவிர்த்து விடலாமே?

    சரி உடை விஷயத்தில் தான் எவ்வளவு மாற்றங்கள் ஒரு பெண்ணுக்கு சேலையில் இல்லாத அழகா அரைகுறை ஆடையில் இருக்கிறது ஒரு பெண்ணின் குணத்தை அவளின் உடையும் வெளிப்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியாதா எது நாகரீகம்? நாகரீகம் பிறந்த காலத்தில உடை இல்லாத போது துணிகளுக்கு பதிலாக இலைகளை கட்டிகொண்டு நடந்தனரே பின்னர் படிப்படியார் ஆடை தரித்து தங்கள் உடலை மறைத்துகொண்டனரே அப்படி வளர்ந்த நாகரீகம் மீண்டும் உள்ள ஆடைகளை குறைப்பது தான் நாகரீகமா என்ன உங்களின் உடைகளே கொண்டு இந்த சமுதாயம் மதிப்பிடும் என்பது தெரியாதா ஆள் பாதி ஆடை பாதி என்பதன் அர்த்தம் படித்த நல்ல பதவியில் உள்ள பெண்களுக்கு கூடவா தெரியாது இல்லை நாகரீகம் கண்னை மறைத்து விட்டதா. சிலர் நாகரீகம் எனும் பெயரில் அரைகுறை ஆடை இட்டு காண்பவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கை வைக்கிறார்கள் சரி நீங்களே சொல்லுங்க அழகா சேலை உடுத்தி மங்களகரமாய் இருப்பது அழகா இல்லை அரைகுறை ஆடையுடன் பார்ப்பவரின் உணர்ச்சிகளை தூண்டுவது அழகா?

    அந்த காலத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விவாகரத்து என்பது அதிகம் கேட்க்கப்படாத வார்த்தையாகவே இருந்த்து இப்பொழுதெல்லாம் திருமணம் முடிந்த ஒரு நாளிலே பெண்களும் ஆண்களும்தான் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றம் செல்கிறார்கள் நாம் இதை கொஞ்சமாவது நினைத்து பார்க்கிறோமா பெற்ற தாய் தந்தையரின் நிலைமையை சரி அவர்க்ள் வயதானவர்கள் நாம் பெற்ற குழந்தைகள் வளரும் பிள்ளைகள் அவர்கள் எதிர்காலத்தையாவது சிந்திக்கின்றோமா என்றால் அதுவும் இல்லை சரி குடும்ப நல நீதிமன்றம் வரை வந்திருக்கிறார்களே பிரச்சினைதான் என்னவென்று பார்த்தால் எனது கணவன் நான் டிவி பார்க்கும்போது டிவியை அனைத்துவிட்டார் என்றோ தூங்கும் போது குறட்டை விட்டார் எனவோ இருக்கும் ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடிகிறது விட்டுக்கொடுத்தல் சகிப்பு தன்மை புரிந்துகொள்ளும் தன்மை இவை எல்லாவற்றையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் நான் தொலைபேசியில் அழைதால் பேசவில்லை கடைக்கு அழைத்தேன் வரவில்லை இதெல்லாம் ஒரு காரணமா?

    உங்களுக்கு தெரியாதாத இந்த காலத்தில் பொருளாதார தேவை என்பது மிக முக்கிய பிரச்சினையாக இருக்கிறது நீங்கள் உங்கள் கனவனோ அல்லது மனைவியையோ அலைபேசியில் அழைக்கிறீர்கள் ஒரு வேளை அலுவலக உயரதிகாரியிடம் அலுவலக பணியில் இருக்கும் போது எடுத்து பேச முடியாது இது ஆண் பெண் இருவருக்கும் தான் அல்லது பேருந்தில் பயணம் செய்கிறீர்கள் எடுத்து பேச முடியாது சத்தம் கேக்காத்தும் ஒரு காரணமாக இருக்கலாம் இதையெல்லாம் புரிந்துகொள்ள கூடிய விஷயம்தானே இதெல்லாம் ஒரு பிரச்சினை என்று குடும்ப நீதிமன்றம் செல்வது சரிதானா?

    சரி அடுத்தது ஒருவர் மேல் ஒருவர் சந்தேகம் ஒரு குடும்பத்தில் பண பிரச்சினை வேறு சில பிரச்சினைகள் எல்லாமே நாம் தீர்த்து விடலாம் சந்தேகம் எனும் பேய் நுழைந்தால் பின்னர் எல்லாவற்றிலுமே சந்தேகம்தான் சுருக்கமாக சொல்லப்போனால் மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி அப்படித்தான் தொட்டதுக்கெல்லம் குற்றம் அதுக்காக தவறுகளை கண்டும் காணாமல் செல்வதில்லை இந்த உலகத்தில இருக்கிற எல்லா உயிரினங்களும் மற்ற சக உயிரிணங்கள் மீது அன்பு வச்சுருக்கு ஆனால் அவற்றுக்கு எல்லாம் ஐந்தறிவுதான் மனிதர்களாகிய நமக்கு ஆறாவது அறிவும் உண்டு இருந்தும் என்ன செய்ய நாம் தான் எதையும் ஆரய்ந்து பார்ப்பதில்லையே.

    கணவன் மனைவி சம்பாஷனைகள் குறைந்து வருகிறது காரணம் இருவரும் வேலைக்கு சென்று வருவதால் இருவருக்குமே உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உளைச்சல் இருக்கதான் செய்யும் ஆனால் இதில் ஆண்கள் மட்டும் மனைவியிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு உண்டு அது உண்மைதான் ஒருவேளை அது அவனின் ஆளுமையை உணர்த்துவதற்காக கூட அப்படி நடக்கலாம் என்னைப்பொருத்த வரை ஆனும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துகொள்ளாமை தான் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது ஒருத்தர் மேல் ஒருத்தர் அன்பா இருங்க மனம் விட்டுப்பேசுங்க, சின்ன சின்ன பிரச்சினைகளை வராமல் தடுக்க விட்டுகொடுத்து போங்க விட்டுக்கொடுக்குறதால பெரிசா என்னங்க இழந்துற போறோம் விட்டுக்கொடுத்தலிலும் புரிந்துகொள்வதிலும் தான் வாழ்க்கையின் சுவை பன்மடங்கு அதிகரிக்கும்

    ஆண்களை அடிமை படுத்த நினைக்கிற பெண்களும்,பெண்களை அடிமைபடுத்துற ஆண்களும் புரிஞ்சுக்குங்க நீங்க ஒருத்தர் இல்லாமல் இன்னொருவர் இல்லை சரி ஆண்களே இல்லாத பெண்கள் மட்டுமே உள்ள ஒரு உலகம் இல்லையென்றால் பெண்களே இல்லாத ஆண்கள் மட்டும் உள்ள உலகம் கற்பனை பண்ணிபாருங்க எவ்வளவு கொடுமை என தெரியும் உங்களுக்கு தெரியுமா உளவியாலகவும் மருத்துவ உலக் அடிப்படையில் பார்த்தாலும் ஒரு ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் விரும்புகின்றனர் சரி நம்ம வீட்ட எடுத்துக்குவோம் நீங்க ஒரு தாய் உங்களுக்கு உங்க மகன் மேல் கொஞ்சம் அதிகமாகவே அன்பு இருக்கதான் செய்யும் சரி நீங்கள் ஒரு தந்தை உங்களுக்கு மகள் மேல் அன்பு அதிகாமவே தான் இருக்கும் இதற்கு பெரிய ஆராய்சியெல்லாம் தேவையில்லை நம்மை நாம் புரிந்துகொள்ள் முயற்சித்தாலே புரிந்துவிடும்

    ஒரு ஆண் அல்லது பெண் இருவருக்குமே அழகு என்பது வெரும் நிறத்திலோ அல்லது விலையுயர்ந்த ஆடையிலோ ஆபரணங்களிலோ இல்லை அது நிரந்திரமும் இல்லை அது தானே இயற்கை வயது கூடும் தோறும் வாலிபம் மாறிக்கொண்டேதானே வருகிறது. புற அழகை விட்டு அக அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் அன்பால் ஆளுமை செய்வோம் விட்டுக்கொடுப்போம் ஆணும் பெண்ணும் ஒன்றுதான் பால் மட்டுமே வேற என்பதை புரிந்துகொள்வோம் ஒன்று படுவோம் மேம்படுவோம்


    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...
    12

    நினைவுகளில் வாழும் அப்பா

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: இருக்கும் வரை தெரியாது இல்லாததின் அருமை.

    எல்லோருக்கும் போலதான் எனக்கும் அப்பா ஆனால் நான் அவர்மேல் அன்பு வச்சிருந்தேன் ஆனால் எனக்கு வெளிக்காட்ட தெரியல ஆனால் அப்பா இறந்த பின் தான் அவரின் அருமை புரிந்தது. நண்பர்களே நம் அப்பா,அம்மா தான் நம் நிகழ்கால தெய்வங்கள் இருக்கும் போது காட்டாத பாசம் மரித்த பின் சொல்லி அழுவதில் பயனில்லை. இந்த பதிவு பல மாதங்களுக்கு முன்னர் எழுதியது நம் தளத்தை தினம் வாசிப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.

    அப்பா:

    எப்படி எப்படியெல்லாமோ
    கேள்விக்கனை கொண்டு
    எனை துளைத்தெடுப்பாள்- அம்மா
    ஒரேயொரு
    நேர் பார்வையில்- என்
    மன நிலை புரிந்துகொள்வார் - அப்பா

    அப்பாவிடம்
    அதிகம் பேசியதில்லை
    யாரோ சொல்லி கேட்டிருக்கிறேன்
    என்னைப்பற்றி
    ஏதோவெரு சமயம் பெருமையாக
    அப்பா பேசியதாக

    அம்மாவிடம்
    எதிர் வாதம் செய்யும் நான்
    அப்பாவின் முகம் வாடும் போது
    உணர்ந்திருக்கிறேன் என் தவறை

    உன் அப்பா
    எத்தனை நல்லவராக
    இருக்கிறார் - என
    நண்பர்கள் என்னிடம்
    சொல்லும் போதுதான்
    எனக்கு தெரிந்தது
    எத்தனை பேருக்கு
    கிடைக்காத அப்பா
    எனக்கு மட்டும் கிடைத்திருக்கிறாறென

    கேட்ட வரம்
    உடனே கொடுக்க முடியாத
    கடவுள்தான்
    என்னை மகனாக படைத்தார்
    என் அப்பாவுக்கு
    வேண்டுவென வேண்டும் சமயத்தில்
    எனக்கு கிடைத்திட

    குழந்தை பருவத்தில்
    கைப்பிடித்து நடைபயில
    சொல்லி கொடுத்து
    நான் தனியே நடந்தபோது
    என்னைப்பற்றி
    என்னவெல்லாம் நினைத்திருப்பார்?
    என் கால் தடுமாறி
    விழும்போது பதறிப்போகும் அப்பா

    இன்று
    நான் தவிக்கின்ற போது பதறாமல் இறுக்கிறார்
    மீளா துயிலில்

    நண்பர்களோடு பேசும்போதெல்லாம்
    கர்வத்தோடு
    சொல்லியிருக்கிறேன்
    என் அப்பாவின் சிந்தையெல்லாம்
    என்னை பற்றியதானிருக்குமென்று

    இன்று!
    அப்பா இறந்த பின்னர்
    நான் யாரென்று எனக்கும் தெரியவில்லை
    அனைத்து கொள்ள ஆதரவும் இல்லை

    அப்பா இறந்த போது
    யார் யாரோ
    துக்கம் விசாரித்தார்கள்
    நாங்கள் இருக்கிறோம் என்றார்கள்
    என்றாலும்
    என் அப்பாவைப்போல்
    யார் இருக்க முடியும்?

    அப்பா உயிரோடு இருந்தவரை
    அவர் மீது - என்
    பாசத்தை வெளிக்காட்டியதேயில்லை
    அவரின் இழப்பு தாங்காது
    கதறி அழுதபோது
    கண்ணீர் துடைக்க- என்
    அருமை அப்பாவும் இல்லை

    அப்பா உயிரோடு இருந்தவரை
    இழப்பு எதுவுமில்லை
    இறப்புக்கு பின்
    இழப்பதற்கு எதுவுமில்லை


    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Jul 29, 2010

    12

    வின்ராரில் கோப்பை வெட்டி பூட்டு போடலாம்

  • Jul 29, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: நேர்மையில்லாத கையாள் நேர்மையுள்ள அதிகாரியையும் கெடுத்து விடுவான்.

    அருமை வாசக நண்பர்களே என் ஒவ்வொரு பதிவையும் படித்ததோடு அல்லாமல் நீங்கள் கற்றுக்கொண்டதை மற்றவர்களும் கற்றுக்கொள்ளும் வகையில் உங்கள் பொன்னான நேரத்தில் நல்லென்னத்துடன் பதிவிற்கு வாக்களித்தும், பதிவை பற்றியதான கருத்துரையும் எழுதியும் என்னை ஊக்கபடுத்தும் நண்பர்களே சரியாக எழுத ஆரம்பித்து ஐந்து மாத காலத்திற்குள் 40,000 ஹிட்ஸ் இத்தனைக்கும் தமிழிஷில் மட்டுமே பகிரப்பட்டது இப்பொழுதும் அப்படித்தான் நண்பர்கள் முடிந்தால் வேறு வலை திரட்டிகளிலும் இனைத்து விடலாம், 264 மின்னஞ்சல் சந்தாதாரர்கள், நம் தளத்தோடு பாலோவர்களாக இனைந்திருக்கும் 110(கொஞ்சம் குறைவுதான்) நண்பர்கள் இவையெல்லாம் உங்களால் மட்டுமே சாத்தியப்பட்டது நான் வெறும் ஒரு பூஜ்ஜியம் தான் என் முன்னால் நீங்கள் இருப்பதால் தான் இந்த பூஜ்ஜியத்திக்கும் மதிப்பு.

    நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்க போவது வின்ரார் மென்பொருள் பற்றித்தான் இந்த மென்பொருளை பற்றி உங்கள் எல்லோருக்குமே தெரியும் நான் சொல்லப்போகும் தகவலும் உங்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும் இருந்தாலும் யாராவது தெரியாத நபர்கள் இருந்தால் அவர்களுக்கு உதவுமே என்கிற எண்ணத்தில் தான் இந்த பதிவை எழுதுகிறேன்.

    வின்ரார் கோப்பு சுருக்கி இல்லாதவர்கள் இங்கே தரவிறக்குங்கள் வழக்கம் போலவே உங்கள் கணினியிலும் இன்ஸ்டால் செய்து விடுங்கள் இப்போது நீங்கள் மின்னஞ்சலில் அல்லது வேறு ஏதாவது தளத்தில் அப்லோட் செய்ய நினைக்கும் மென்பொருள் அல்லது சினிமா இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், இதை எதற்காக பயன்படும் என நினைக்கும் நண்பர்களுக்கு உங்கள் மின்னஞ்சலில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இனைக்க முடியாத போது, கோப்பு பகிர்வு தளங்களில் நண்பர்களுக்கு அனுப்புவதற்காக பகிர நினைக்கும் போது அவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவேயே அப்லோட் செய்ய அனுமதிப்பார்கள் நீங்கள் பணம் செலுத்தி உபயோகிப்பவர் என்றால் இது பற்றி கவலைபட தேவையில்லை.

    கீழிருக்கும் படத்தில் உள்ளது போல உங்கள் அனுப்ப வேண்டிய அல்லது பகிர நினைக்கும் கோப்பில் உங்கள் எலியால் வலது கிளிக் செய்வதன் மூலம் திறக்கும் மெனுவில் Add to achieve என்பதை தெரிவு செய்யவும்.



    இப்போது கீழிருக்கும் விண்டோ வந்திருக்கும் அதில் முதலாவதாக இருக்கும் General டேப்பில் Split to volumes, bytes என்பதில் எந்த அளவிற்க்கு கோப்புகளை துண்டு துண்டாக்க வேண்டும் என்பதை தெரிவு செய்யவும்.



    அடுத்த்தாக கீழிருக்கும் படத்தில் உள்ளது போல Advanced டேப்பை திறந்து Set Password என்பதில் நீங்கள் விரும்பும் பாஸ்வேர்ட் கொடுக்கவும் அடுத்ததாக ஓக்கே கொடுத்து விடவும் இனி நீங்கள் விரும்பிய கோப்பு துண்டு துண்டாக மாற்றப்பட்டிருக்கும்.



    இனி நீங்கள் வெட்டி பூட்டு போட்ட கோப்பை மின்னஞ்சலில் அல்லது கோப்பு பகிர்வு தளங்களில் அப்லோட் செய்து அந்த உரலை நண்பர்களுக்கு அனுப்பி விடவும், இப்படி துண்டாகாப்பட்ட கோப்புகளை ஒன்று சேர்க்க மொத்த துண்டாக்கப்பட்ட கோப்புகளையும் ஓரே இட்த்தில் வைத்து ஏதாவது ஒரு கோப்பை Extract செய்வதன் மூலம் துண்டு துண்டாக்கபட்டிருந்த கோப்புகள் ஒரே கோப்பாக மாறிவிடும் நீங்கள் கடவுச்சொல் கொடுத்திருந்தால் extract செய்யும் போது கடவுச்சொல் கொடுக்கவும.

    நண்பர்களே இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? பயனுள்ளதென்றால் உங்களை போல மற்றவர்களும் தெரிந்துகொள்ள உதவுங்களேன் மேலும் அடுத்த எழுத இருக்கும் பதிவில் இதே மென்பொருளுடன் வேறு ஒரு மென்பொருளையும் உபயோகித்து என்ன செய்யலாம் என்பதை எழுதுகிறேன் அது நிச்சியம் உங்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Jul 27, 2010

    16

    எக்‌ஷெல் ஒத்த வண்ணங்களின் டேட்டா திருத்தம்

  • Jul 27, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து இருக்க வேண்டியவை தைரியம், நேர்மை, மென்மை.

    (மின்னஞ்சல் வழி புதிய பதிவின் விபரம் அறிய விரும்புவர்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு வரும் உரலை கிளிக்குவதன் மூலம் மட்டுமே என் புதிய பதிவு உங்கள் மின்னஞ்சலுக்கு வரும் இங்கு சில நண்பர்கள் இன்னும் தங்கள் மின்னஞ்சல் முகவரியை ஆக்டிவ் செய்யாமலே இருக்கிறார்கள், இங்கு மின்னஞ்சல் தரும் போது நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியை தரவும் இதற்கென தனியாக மின்னஞ்சல் முகவரி உருவாக்க தேவையில்லை, நம் தளத்தில் நண்பர்களாக இனைந்திருக்கும் பாலோவர்களுக்கு மிக்க நன்றி உங்களின் எண்ணிக்கை நம் தளத்தின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்தும் என்றால் அது மிகையில்லை)

    வணக்கம் நண்பர்களே இந்த எக்‌ஷெல் மிகப்பெரிய கடல் நான் பலமுறை வியந்திருக்கிறேன் இதுல இல்லாத வசதி இல்லையென்கிற அளவுக்கு இருக்கும் ஆனால் என்ன நாம் அதில் சில பயன்பாடுகளை தவிர மற்றவற்றை உபயோகிப்பதில்லை காரணம் நமக்கு அதன் அவசியம் ஏற்படாததுதான் நான் இந்த பதிவை எழுதுவதற்கு நேற்று நடந்த நிகழ்ச்சியே காரணம்.

    சாதரணமாக பல நிறுவனங்களிலும் ஒரு வித பட்ட தகவல்களை எக்‌ஷெல்லில் செய்து வைப்பது தான் வழக்கமாக இருக்கும் இதற்கு என் நண்பர் பணிபுரியும் நிறுவனமும் விதிவிலக்கல்ல நேற்று நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்து தன்னிடம் மொத்த பணியாளர்களின் பெயர்கள் இருப்பதாகவும் அதில் பலதரப்பட்ட பிரிவுகள் இருக்கிறதென்றும் அந்த பிரிவுகளை அடையாளம் கானும் விதமாக அந்த செல்களில் வண்ணங்கள் கொடுத்திருப்பதாகவும் சொன்னார் சரி அதில் என்ன பிரச்சினை என்கிற போதுதான் ஒவ்வொரு வண்ணத்தில் இருக்கும் பெயர்களுக்கும் ஓரே விதமாக சம்பளத்தை நிர்ணயிப்பதற்காக சம்பளத்தை வரையறை செய்து இவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

    பத்தோ அல்லது இருபது என்றால் ஒன்றும் பிரச்சினை இல்லை எளிதாக செய்து விடலாம் ஆனால் ஒரு ஆயிரம் அல்லது ஐயாயிரம் நபர்கள் பணி செய்யும் நிறுவணமாக இருந்தால் கொஞ்சம் கற்பனை பண்ணிபாருங்கள் எவ்வளவு நேரம் ஆகும்? நான் அந்த நண்பருக்கு பரிந்துரைத்தையே இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் இப்போது உங்களிடம் கீழிருக்கும் படத்தில் உள்ளது போல ஒரு பைல் இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள் இதில் பத்து பெயர்கள் மட்டுமே இருக்கிறது ஆனால் உங்களிடம் இருப்பது பத்தாயிரம் பெயர் கொண்ட பட்டியல்.



    இதில் உள்ளது போல செல்லின் நிறம் கொடுத்திருந்தாலும் அல்லது எழுத்தின் நிறம் மட்டுமே கொடுத்திருந்தாலும் இரண்டுக்குமே பொருந்தும் நான் உபயோகபடுத்துவது மைக்ரோசாபட் 2007 ஆனால் இதே வழிமுறைதான் மைக்ரோசாப்ட் 2003 என்ன கொஞ்சம் மெனுவை கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கும் நீங்கள் மைக்ரோசாப்ட் 2003 உபயோகிப்பவராக இருந்தால் Tools என்பதன் கீழாக Auto Filter என்பதை தெரிவு செய்தால் போதும் ஆட்டோ பில்ட்டர் வந்துவிடும்.



    இனி இந்த படத்தில் உள்ளது போல உங்களுக்கு எந்த நிறத்தில் உள்ள பெயர்கள் என்பதை வண்ணத்தை தெரிவு செய்தால் போதும் அந்த வண்ணத்தில் உள்ள தகவல்கள் மட்டுமே காண்பிக்கும் இனி ஏதாவது ஒரு இடத்தில் நீங்கள் மாற்ற வேண்டிய தொகையை மாற்றி அந்த செல்லை தெரிவு செய்து உங்கள் கர்சரை வைத்து கீழே இழுப்பதன் மூலம் நீங்கள் விரும்புவது போல ஒரே நிறத்தில் இருக்கும் டேட்டாக்களின் தொகையை எளிதாக மாற்றிவிடலாம்.



    என்ன நண்பர்களை நீங்கள் நினைக்கிறீர்களா நமக்கு தேவையில்லையென்று, அதனால் என்ன தெரிந்து வைத்துக்கொண்டால் உதவுமே நேற்று வரை எனக்கும் இதை பற்றி தெரியாது நண்பனுக்காக நான் தேடியபோதுதான் எனக்கும் இந்த வழிமுறை தெரிந்தது எல்லாம் தெரிந்தவர்கள் இங்கு யாருமில்லை நாம் ஒவ்வொரு நாளும் யாரிடமாவது ஒன்றை கற்றுக்கொண்டு தான் இருக்கிறோம்.தெரியாத விஷயங்களை யார் சொல்லி கொடுத்தால் என்ன கற்றுக்கொள்வதில் தவறில்லை என நினைக்கும் கூட்டத்தில் உங்களோடு நானும், பதிவு பயனுள்ளது என்றால் வாக்கும் கருத்துரையும் அளிப்பதன் மூலம் பலரை சென்றடைய உதவலாமே.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Jul 26, 2010

    23

    புரொபசனல் பிடிஎப்-வேர்டு கன்வெர்ட்டர் இலவசம்

  • Jul 26, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: வாழ்க்கை என்பது துக்கம் என்றால் காதல் அதன் கனவு.

    வணக்கம் நண்பர்களே நாம் இன்று பார்க்கபோவது பிடிஎப் பைலை எப்படி வேர்டுக்கு மாற்றுவது இனையத்தில் தேடினால் ஆயிரம் மென்பொருள் கிடைக்கும் ஆனால் அதில் பல மென்பொருள்களும் பணம் செலுத்தி பெற வேண்டியிருக்கும் சில மென்பொருகள் இன்னும் சிலர் பணம் செலுத்தி பெறவேண்டியதை கிராக் செய்து வைத்திருப்பார்கள் நான் உங்களுக்கு தரப்போவது இந்த வகையை சேர்ந்ததுதான்.

    மன்னிக்கவும் நண்பர்களே இது பதிவிற்கு சம்பந்தமில்லாதது சமீபத்தில் ஒரு மலையாள தொலைக்காட்சியில், ரேடியோவில் மற்றும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் நட்ததும் இரு விதமான அணிகள் அதில் நடந்த விவாத்தில் தொலைக்காட்சியில் பணி புரிந்தவர்கள் தான் அதிகமாக ரேடியோ நிகழ்ச்சிக்கு விரும்பி சென்றிருக்கிறார்கள் மாறாக ரேடியோ நிகழ்ச்சி வழங்குபவர்கள் பெரிய மீடியா என்னும் தொலைக்காட்சிக்கு செல்ல விருப்பமில்லை எனவும் தெரிவித்தார்கள், அதற்காக அவர்கள் சொன்ன காரணம் தொலைகாட்சியில் திறமைகளை விட அங்கு உருவத்துக்குதான் மதிப்பு மேலும் எப்போதும் ஓரே மாதிரியான சம்பாஷைனைகள் என்பதாக குறைபட்டு கொண்டார்கள். இதில் நிகழ்ச்சி நடத்துணர் ரேடியோவில் பணி புரிபவர்களிடம் தொலைகாட்சி என்றால் உங்களை எல்லோரும் தெரிந்துகொள்ள உதவுமே என்றார், அதற்கு அவர்கள் நாங்கள் எங்களை வெளிபடுத்தவிட்டாலும் எங்களுடன் உரையாடும் நேயர்கள் எங்களை மனதிலே உருவகபடுத்தி விடுவார்கள் என்கிறார்கள் உண்மைதானே? நீங்கள் எப்போதாவது ரேடியோ நிகழ்ச்சி கேட்டிருக்கிறீர்களா? நான் இது போல உணர்ந்திருக்கிறேன் இப்போதும் கூட பதிவுலகில் நான் விரும்பும் சிலரின் (நீங்களாகவும் இருக்கலாம்) குறித்தான் உருவம் என் மனதில் பதிந்து இருக்கிறது ஆனால் அவர்களை பார்க்க முடியுமா என தெரியாது? எப்போதும் மூடி இருக்கும் வரை ஒரு விதமான ஆவலும் மனதிற்குள்ளாக உருவகபடுத்துதலும் இருக்கும்தானே. நீங்கள் எப்போதாவது முகம் அறியாத நபர்களோடு பேசி அதன் வாயிலாக அவர்கள் உருவம் உங்கள் மனதிற்குள் பதிந்து அவரை எப்போதாவது காணும் போது வியந்திருக்கிறீர்களா? இப்படி ஏதாவது நடந்திருந்தால் அவசியம் கருத்துரையில் பகிர்ந்து கொள்ளவும்.

    சரி நண்பர்களே பிடிஎப் பற்றிய விஷயத்துக்குள் வந்து விடுகிறேன் நான் ஏற்கனவே பிடிஎப் வெட்டு ஒட்டு எடிட் என்னவேணாலும் பண்னு என்கிற பதிவை எழுதியிருந்தேன் தயவு செய்து படித்து விடுங்கள் இனி பிடிஎப் – வேர்டு மென்பொருள் தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும், சீரியல் எண்ணை காப்பி எடுத்து உங்கள் மென்பொருளில் ஒட்டவும் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் செயல்பட தொடங்கிவிடும் கொடுத்தாலும் போதும்.விலை கொடுத்து வாங்க விருப்பமில்லாதவர்கள் பிடிஎப் -வேர்ட் இலவசம் தரவிறக்கி பயன்படுத்தலாம்.

    இனி அந்த மென்பொருளில் File என்பதில் Preference திறக்கவும் அந்த புதிய பக்கத்தில் Merge pictures into background என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விடவும் இதன் செய்வதால் நீங்கள் மாற்ற விரும்பும் பிடிஎப் பைல் போட்டோ உள்ளதாக இருந்தாலும் அதையும் அழகாக மாற்றி எடுப்பதற்கு தான் இனி நீங்கள் விரும்பும் பிடிஎப் பைலை கன்வெர்ட் செய்யுங்கள் அது எத்தனை பக்கங்களாகவும் இருக்கலாம் அதெல்லாம் இவனுக்கு ஒன்றும் பிரச்சினையே இல்லை ஆனால் ஒரு வருத்தமான செய்தி தமிழ் பிடிஎப் என்றால் எழுத்துருவில் பிரச்சினை இருக்கிறது.





    என்ன நண்பர்களே இந்த பதிவு உங்கள் ஒட்டுமொத்த பிடிஎப் – வேர்டு , வேர்டு – பிடிஎப், பிடிப் பக்கங்களை பிரித்தல், பிடிஎப் பக்கங்களை சேர்த்தல் என எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைத்திருக்குமென்றே நம்புகிறேன் இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதென்றால் அவசியம் நீங்கள் பதிவிற்கு வாக்கும் பதிவை பற்றியதான் உங்கள் அபிப்பிராயத்தை அவசியம் பகிர்ந்து கொள்ளுங்கள் நான் எல்லா பதிவுகளிலும் இதேயே திரும்ப திரும்ப எழுதுவதன் காரணம் ஒரு பதிவை படித்தவுன் அது குறித்தான் வாசகர்கள் கருத்தை வைத்துத்தான் பதிவு பலரையும் சென்றடையும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Jul 25, 2010

    15

    நோட்பேடில் வைரஸ் புரோகிராம் எழுதலாம்

  • Jul 25, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: பரிசு விலையை பார்ப்பதை விட பரிசை கொடுப்பவரின் மனதை பாருங்கள்.

    நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்க போவது நோட்பேடில் போலியான சில வைரஸ் நிரல்களை எழுதி அதை .VBS , .BAT எக்ஸ்டென்ஷ்களாக சேமித்து அதை இயக்குவதன் மூலம் ஒரு சின்ன விளையாட்டு இந்த நிரலால் தங்கள் கணினிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது ஆனால் இந்த நிரல்களை பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கு இதை மின்னஞ்சலில் அனுப்பி விட்டு பாருங்கள் (நீங்கள் சோதித்து பார்த்த பின்பு) அவர் அதை தரவிறக்கி இயக்கினால் அடுத்த பத்து நிமிடத்தில் உங்களுக்கு அலைபேசியில் அழைப்பு வரும் “டேய் நீ அனுப்புனதுல வைரஸ் இருக்குடா கம்ப்யூட்டர் தானே நிறைய பைல் திறக்குது, கலர் கலரா மின்னுதுடா” இப்படியாக உங்களுக்கு கோபத்தில் பேசுவாரென்றே நினைக்கிறேன்.

    சரி இனி நீங்கள் ஒரு நோட்பேட் (Start-Run-Type notepad) திறந்து கீழிருக்கும் நிரலை காப்பி செய்து நோட்பேடில் ஒட்டி சேமிக்கும் போது ஏதாவது ஒரு பெயர் கொடுத்து அதை .VBS என்கிற எக்‌ஸ்டென்ஷனில் சேமிக்கவும் இப்படி சேமிக்கும் போது வழக்கமா இருக்கும் ஐகானுக்கு பதிலாக வேறு ஒரு ஐகானாக மாறியிருக்கும் இனி இதை உங்கள் எலியால் இருமுறை கிளிக்கி விட்டு கொஞ்சம் உங்கள் கணினியை வேடிக்கை பாருங்கள் என்ன நடக்கிறதென்று.

    Set wshShell = wscript.CreateObject("WScript.Shell")
    do
    wscript.sleep 100
    wshshell.sendkeys "~(enter)"
    loop

    என்ன ஆச்சரியாமாக இருக்கிறதா இதை உங்களால் நிறுத்துவது என்பது இயலாத காரியம் இதற்கு வழி உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்து விடுவது தான், மீண்டும் ஒரு முறை உங்களுக்கு ஞாபகபடுத்துகிறேன் இதனால் உங்கள் கணினிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

    இனி இரண்டாவதாக ஒரு ட்ரிக் பார்ப்போம் இந்த நிரலை காப்பி எடுத்து ஒரு புதிய நோட்பேட்(Start-Run-Type notepad) திறந்து அதில் ஒட்டி சேமிக்கும் போது ஏதாவது ஒரு பெயர் கொடுத்து அதை .VBS என்கிற(ஏதாவது ஒரு பெயர் கொடுத்து ஒரு புள்ளி வைத்து VBS என சேமித்தால் போதும் உதாரணத்துக்கு gsr.vbs) எக்‌ஸ்டென்ஷனில் சேமிக்கவும், இப்போது வழக்கம் போல உங்கள் எலியால் இருமுறை கிளிக்கி பாருங்கள் என்ன நடக்கிறதென்று உங்களலால் கீபோர்டில் ஒன்றும் செய்ய இயலாது மாறாக தானாக ஏதாவது ஒரு பைலை திறக்கும் எந்த இடத்திலாவது கர்சரை கிளிக்கினால் அந்த இடத்தில் You are a fool என்பதாக எழுதும் நீங்கள் வேண்டும்னால் அந்த அடைப்பு குறிக்குள் இருக்கும் You are a fool என்பதற்கு பதிலாக வேறு ஏதாவது எழுதிக்கொள்ளலாம். இதை நிறுத்துவதற்கு உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்து விடுவது தான் வழி.

    Set wshShell = wscript.CreateObject("WScript.Shell")
    do
    wscript.sleep 100
    wshshell.sendkeys "You are a fool."
    loop

    மூன்றாவதாக ஒரு சின்ன விளையாட்டையும் பார்க்கலாம் கீழிருக்கும் நிரலை காப்பி எடுத்து ஒரு புதிய நோட்பேட்(Start-Run-Type notepad) திறந்து அதில் ஒட்டி சேமிக்கும் போது ஏதாவது .BAT என்கிற எக்ஸ்டென்ஷனில் சேமிக்கவும் இப்போது உங்கள் எலியால் இருமுறை கிளிக்கி வேடிக்கை பாருங்கள் நிச்சியம் ஆச்சரியம் அடைவீர்கள் என்ன உங்கள் கணினி திரை கலர் கலராக மின்னுகிறதா இதை நிறுத்த ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.

    @echo off
    echo e100 B8 13 00 CD 10 E4 40 88 C3 E4 40 88 C7 F6 E3 30>\z.dbg
    echo e110 DF 88 C1 BA C8 03 30 C0 EE BA DA 03 EC A8 08 75>>\z.dbg
    echo e120 FB EC A8 08 74 FB BA C9 03 88 D8 EE 88 F8 EE 88>>\z.dbg
    echo e130 C8 EE B4 01 CD 16 74 CD B8 03 00 CD 10 C3>>\z.dbg
    echo g=100>>\z.dbg
    echo q>>\z.dbg
    debug <\z.dbg>nul
    del \z.dbg

    இதையே இன்னும் வேறு சில விதமாக நீங்கள் யோசித்து பயன்படுத்தி பாருங்கள் இது நீங்கள் தெரிந்து கொள்வதற்கு மட்டுமே இது போல இன்னும் நிறைய நிரல்கள் இருக்கின்றன. என்ன நண்பர்களே உங்களுக்கு இது வித்யாசமான அனுபவமாக இருக்கிறதா? ஆம் என்றால் நம் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள பதிவிற்கு வாக்கும் பதிவை பற்றிய கருத்துரையும் எழுதுவதன் மூலம் நிறைய நண்பர்களை சென்றடைய உதவலாமே.

    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர