Sep 21, 2010

13

விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 1

  • Sep 21, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து : வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளை சாதரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்

    வணக்கம் நண்பர்களே கடந்த சில நாட்களாகவே கணினியில் இயங்குதளம் நிறுவது பற்றி எழுதவேண்டும் என நினைத்தேன் ஆனால் ஒரே பதிவில் எழுதமுடியாது என்பதாலும் இதை பற்றி எழுத தொடங்கினால் வேறு சில தொடர்புள்ள விஷயங்களையும் எழுத வேண்டிவரும் என்பதாலும் எழுதுவதில் அக்கரை காட்டவில்லை சமீபத்தில் உடன் பணிபுரியும் அலுவலக நண்பர்களுக்கு கூட இன்னும் இந்த விஷயம் தெரியவில்லை. நான் வலைத்தளம் எழுதுவதை இதுவரை என் நெருங்கிய நண்பர்கள் வாசித்த்தில்லை, அலுவலக நண்பர்களுக்கு நான் இதில் எழுவது இதுவரைக்கும் தெரியாது இனிமேலும் தெரியப்படுத்த போவதுமில்லை உண்மையை சொல்லப்போனால் நான் எப்போதும் மற்றவர்களிடம் இருந்து தள்ளியே நிற்கிறேன் வலைத்தளம் எழுத வந்து இத்தனை நாட்களிலும் கூட சில நண்பர்கள் சொல்வது போல வலைத்தளம் வாயிலாக நட்பு வட்டத்தை கூட நான் உருவாக்கியதில்லை மேலும் ஒரு போதும் என்னைப்பற்றிய சுய விபரங்கள் மற்றவர்களுக்கு தெரிவதில் விருப்பமில்லை இருப்பினும் என் தளம் வாயிலாக சில நண்பர்களிடம் ஜிமெயில் உரையாடியில் உரையாடியிருக்கிறேன் சில விஷயங்களை பகிரிந்திருக்கிறேன் ஆனாலும் இதை பகிரிந்து கொண்டிருக்க கூடாது என பின்னாளில் யோசித்திருக்கிறேன் சரி நண்பர்களே இனி பதிவு சம்பந்தமான விஷயத்துக்குள் செல்வோம்.

    இனி உங்களிடம் அவசியம் விண்டோ சிடி இருக்கவேண்டும் உங்களிடம் ஒரிஜினல் பதிப்பாக இருந்தாலும் நீரோவின் வழியாக சிடியிலிருந்து சிடி காப்பி எடுத்து எரிக்கும் வசதி பயன்படுத்தி வேறொரு சிடி தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள் பின்னாளில் ஏதேனும் இன்ஸ்டாலேசன் பிரச்சினை வந்தால் பயனபடுத்த வசதியாய் இருக்கும்.



    படத்தில் உள்ளது போல காப்பி சிடி என்பதை தெரிவு செய்தால் போதும்.



    நீங்கள் கொடுக்கும் சிடியின் இமேஜ் அல்லது ஐஎஸ்ஓ, டேட்டா பைல்கள் எதுவாக இருந்தாலும் காப்பி ஆகும், காப்பி ஆனதும் தானகவே டிரைவ் திறந்து புது சிடியை இடச்சொல்லி கேட்க்கும் நீங்கள் இட்டுக்கொடுத்தால் போதும் எழுதி முடித்ததும் சிடி வெளியே வந்துவிடும் அவ்வளவுதான் இப்போது விண்டோஸ் இயங்குதளம் நிறுவ சிடி தயார்.

    இதில் நீங்கள் ஒரு விஷயத்தை கவணிக்க வேண்டும் காப்பி எடுக்கும் போது ஏதாவது எர்ரர் வருகிறதா என கவணிக்க வேண்டும் ஒருவேளை அப்படி ஏதாவது எர்ரர் வந்தால் அந்த சிடியை நீங்கள் எரித்தாலும் பூட் ஆவதிலோ அல்லது இயங்குதளத்திலோ பிரச்சினை வரும் சாதரணமாக சிடி கிராக் இருந்தால் Unrecoverable error என்பதாக வரும் இருந்தாலும் காப்பி ஆகி கொண்டே இருக்கும் ஆனால் பலனில்லை.

    முடிந்தவரை விண்டோஸ் ஒரிஜினல் பதிப்பை பய்னபடுத்துங்கள் நீங்கள் ஒரிஜினல் பதிப்பை பயன்படுத்தினால் பிழை இருந்தாலும் அதை மைக்ரோசாப்ட் நிறுவனத்தினர் அதற்கென அப்டேட் பைல் கொடுப்பார்கள் வைரஸ் தொல்லையிலிருந்து கொஞ்சம் தப்பிக்க வசதியாய் இருக்கும்.

    இதை என்னால் ஓரே நேரத்தில் எழுதி முடிக்கமுடியாது எனவே ஒவ்வொரு பாகமாக தான் எழுதவிருக்கிறேன் எனவே காலதாமதம் ஏற்படும் வாய்ப்பு அதிகமே இருந்தாலும் நமது தளத்தின் இந்த பதிவின் வழியாக இனி நீங்கள் யாருடைய துனையும் இல்லாமல் இயங்குதளத்தை நிறுவிவிடுவீர்கள், நிச்சியம் இதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் முடிந்தவரை முழு தீர்வாக என் பதிவு இருக்கவேண்டும் என்பதில் எனக்கும் ஆர்வம் இருக்கிறது.

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 2

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 3

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 4

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 5

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 6

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 7

    விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல்) (Windows Installation)–இறுதி பாகம் 8

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    13 Comments
    Comments

    13 Responses to “விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 1”

    S.முத்துவேல் said...
    September 21, 2010 at 11:01 AM

    நான் எழுதுலாம் என்று இருந்தேன் தாங்கள் எழுதி விட்டிர்கள்..

    நன்றிகளுடன்....


    surivasu said...
    September 21, 2010 at 9:55 PM

    நல்ல பதிவு. தொடருங்கள்....
    ஒரு லேப்டாப்பில் 'Virtual Drive' உருவாக்கி CD image copy செய்வது எப்படி என்று விளக்கவும். (அடிக்கடி CD போட்டு games விளையாடும் என்னை போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்).


    Anonymous said...

    September 21, 2010 at 10:25 PM

    தொடர்ந்து எழுதுங்கள் GSR..அதே உத்வேகத்துடன்..உற்சாகமாய் எழுதுங்கள்...எப்போதும் உறுதுணையாய் நாங்கள் நன்றி.

    -லஷ்மி


    மாணவன் said...
    September 22, 2010 at 7:25 AM

    நல்லதொரு முயற்சி உங்களின் இந்த முயற்சி இடைவிடாது தொடரவேண்டும்...
    தொடரட்டும் உங்கள் மகத்தான பணி எப்போதும் உங்களோடு இனைந்திருப்போம்..


    ஜிஎஸ்ஆர் said...
    September 22, 2010 at 8:56 AM

    @S.முத்துவேல்அதனால் என்ன நண்பா நீங்களும் எழுதுங்கள் படிக்க வருபவர்களுக்கு எது புரியும் வகையில் இருக்கிறதோ அதை அவர்கள் படிக்கட்டும் நீங்களும் எழுதினால் கூகுளில் தேடுபவர்களுக்கு கொஞ்சம் வசதியாய் இருக்கும் நான் எழுதுவதை எல்லோரும் படித்து விடப்போவதில்லை நீங்களும் அவசியம் எழுதுங்கள் பெரும்பாலனவர்களை சென்றடைய எளிதாய் இருக்கும்


    ஜிஎஸ்ஆர் said...
    September 22, 2010 at 8:58 AM

    @surivasuஇப்பொழுது இதை எழுதுகிறேன் விரைவில் நீங்கள் கேட்பதையும் எழுதுகிறேன் ஆனால் எனக்கு நேரம் அவசியம் தங்களின் சரியான புரிதலுக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    September 22, 2010 at 8:59 AM

    @lakshuமுடிந்தவரை எழுத முயற்சிக்கிறேன் அடுத்தவர் படிக்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் பின்னாளில் நமக்கே உபயோகபடுமே தங்களின் அன்பிற்கும் உறுதுனைக்கும் நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    September 22, 2010 at 9:01 AM

    @மாணவன்நான் என்ன நண்பா பெரிதாய் எழுதி கிழித்துவிட்டேன் ஏதோ எனக்கு தெரிந்த சின்ன விஷயங்கள் யாருக்காவது பயன்படாத என்கிற நோக்கம் மட்டுமே நம் தளத்தின் விருப்பம் தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி நண்பா


    யாழ் பறவை said...
    September 22, 2010 at 5:24 PM

    நல்ல பதிவு. தொடருங்கள்....


    ஜிஎஸ்ஆர் said...
    September 23, 2010 at 9:24 AM

    @யாழ் பறவை தங்களின் வருகையோடு கருத்தியமைக்கும் நன்றி


    https://onewebbrain.blogspot.com/ said...
    January 20, 2013 at 9:46 PM

    my blog name onewebbrain.blogspot.in


    Prem said...
    March 24, 2014 at 9:34 PM

    மிகவும் சிறந்த வலைத்தளம். எதேச்சையாக என் பிள்ளைக்கு பெயர் சூட்டுவதற்காக தேடியபோது கிடைத்தது. எனக்கு சின்ன சந்தேகம். 1gb யைவிட குறைந்த ram கொண்ட Pentium 4 pcக்கு windows 8 போட முடியுமா?


    ஜிஎஸ்ஆர் said...
    April 15, 2014 at 1:37 PM

    @raj prem விண்டோஸ் 8 அதிகப்படியான கிராப்பிக்ஸ் வசதியை இடைமுகமாக கொண்டிருப்பதால் உங்கள் கணினிக்கு நிச்சியம் சரி வராது அதே நேரத்தில் ஏதவாது ஒரு கிராப்பிக்கல் கார்டு உங்கள் கணினியில் இனைக்கபட்டிருக்குமேயானால் சாத்தியமே...


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர