May 26, 2010

படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல்

ஒரு வரி கருத்து: உபயோகமில்லை என்று தூக்கியெறிந்த பின்னர் தான் அதன் அவசியம் புரியும்.

மின்னஞ்சல் நமக்கு தெரியும் அதென்ன படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல் என நினைக்கிறீர்களா நண்பர்களே நீங்கள் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள் அது அவர் ஒரு முறை மட்டும் படித்தால் போதுமானது அல்லது குறிப்பிட்ட நேரத்திற்க்கு மட்டும் அவர் அதை பார்த்தால் போதுமென நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அதற்காகதான் படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல் எப்படி எழுதுவது என பார்க்கலாம்.

இந்த வசதி நம் அன்றாடம் பயன்படுத்தும் மின்னஞ்சல்களில் இது போன்ற வசதி இல்லை மேலும் ஜிமெயிலில் மட்டும் மின்னஞ்சல் அனுப்பி சில நிமிடங்களுக்குள் திறும்ப பெறும் வசதி இருக்கிறது இதற்கு மாற்று வழியாக நிறைய தளங்கள் இது போன்ற வசதியை தருகிறது இருப்பினும் நான் இங்கு மூன்று தளங்களை மட்டும் தருகிறேன் இவை எளிமையாக இருக்கும் மேலும் நேரம் அதிகம் தேவைப்படாது.

இந்த மூன்று தளங்களை பொருத்தவரை உங்கள் சொந்த விபரம் எதுவும் கேட்பதில்லை உறுப்பினராக சொல்லி தொந்திரவு செய்வதில்லை, இந்த வழியாக மின்னஞ்சல் அனுப்பியதும் நீங்கள் அனுப்பும் நபருக்கு எந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்புகிறீர்களோ அந்த முகவரியின் இட்டு பெறும் நபருக்கு மின்னஞ்சல் செல்லும் கூடவே அதில் ஒரு உரல் இனைக்க பட்டிருக்கும் அந்த உரலை கிளிக்கினால் நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் தெரியும் அவர்கள் அதை படிக்கலாம் வேண்டுமானால் அதை அவர்கள் காப்பி எடுத்து வைத்துக்கொள்ளவும் முடியும் ஆனால் அவர்கள் அதை மூடிவிட்டு மீண்டும் திறக்க நினைத்தால் அவ்வளவுதான் அந்த மின்னஞ்சல் அழிக்கப்பட்டிருக்கும்.

படத்தை கிளிக்கி தளத்திற்கு செல்லவும்

sdmessage

படத்தை கிளிக்கி தளத்திற்கு செல்லவும்

destructingmessage

படத்தை கிளிக்கி தளத்திற்கு செல்லவும்

kicknotes

என்ன நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு உபயோகமானதாக இருப்பின் உங்கள் நண்பர்களும் பயனடையட்டும்.

குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


வாழ்க வளமுடன்



என்றும் அன்புடன்
ஞானசேகர்

19 comments:

  1. நல்ல தகவல் நண்பரே

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  3. நல்லாயிருக்கு நண்பா...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  4. அருமையான தகவல் நண்பா

    ReplyDelete
  5. @soundar

    நன்றி நண்பா கருத்துரைகள் தான் எழுத்தை மேலும் வளப்படுத்தும்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  6. @Thomas Ruban

    நன்றி நண்பா

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  7. @PRABU

    நன்றி நண்பா

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  8. @வேலன்.

    தங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பா

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  9. @சிங்கம்

    தங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பா


    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  10. தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன்

    ReplyDelete
  11. வணக்கம்..
    உங்கள் எழுத்து ரசிப்புக்குரியதாக இருக்கிறது.
    அச்சுப் பத்திரிகைகளில் எழுதும் ஆர்வம் இருக்கிறதா உங்களுக்கு?
    இருப்பின் தொடர்பு கொள்ளவும்
    நன்றியும் வாழ்த்துகளும்
    editorgowtham@gmail.com

    ReplyDelete
  12. /////உபயோகமில்லை என்று தூக்கியெறிந்த பின்னர் தான் அதன் அவசியம் புரியும். ////
    ஆமாம் சிறுதுரும்பும் பல் குத்த உதவுமல்லவா....

    ReplyDelete
  13. ஆஹா அருமையான ஆக்கம்.. ஒன்று

    ReplyDelete
  14. @sarguru sabaதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  15. @ம.தி.சுதா
    //சிறுதுரும்பும் பல் குத்த உதவுமல்லவா...//
    சரியாய் சொன்னீர்கள் நண்பா

    ReplyDelete
  16. @ம.தி.சுதாபயன்படுத்தி பாருங்களே நல்ல அனுபவமாக இருக்கும்

    ReplyDelete
  17. .புதுமையான வெப்சைட் !!

    .பகிர்ந்தமைக்கு நன்றி, !

    ReplyDelete

அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>